Advertisement

அரசுப்பள்ளி மாணவர்கள் இயற்கை பயிர்களை விளைவித்து அசத்தல்

கரூர் அருகே, லிங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே, மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பாக, மாதிரி வீட்டுத் தோட்டம் திட்டத்தில், இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. பள்ளிக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், ஆலமரம், அரசமரம், மாமரம், தேக்கு, தென்னை, வேம்பு, பாதானி, புங்கன், பெரிய நெல்லி, முருங்கை மரங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, வாழை, சப்போட்டா, எலுமிச்சை, கொய்யா, நந்தியா வட்டம், பூவரசு, வெள்ளை எருக்கு, சிவப்பு அரளி, மஞ்சள் அரளி, சுண்டைகாய், ஆமணக்கு, கற்றாழை, தூதுவளை, கருவேப்பிலை, துளசி, கீழாநெல்லி, காய்கறிகள் உள்பட, 40 வகையாக பயிர்கள் இயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன.
பயிர்களுக்கு, இயற்கை உரம் போடப்பட்டு, மாணவர்கள் வாரத்தில் இரண்டு மணி நேரம், பயிர்களை காத்து வருகின்றனர். சிறு வயதிலேயே, இயற்கை முறையில் உள்ள, நுணுக்கங்களை கற்றுக்கொள்கின்றனர். அதே போல், பள்ளிக்கு அருகாமையிலேயே மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த உரத்தை பயிர்களுக்கு போட்டு வருகின்றனர். தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, பள்ளி தேவைக்கு பயன்படுத்தி மீதமுள்ளவற்றை வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன் வழிகாட்டுதல்படி, மாணவர்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement