Advertisement

சிங்கப்பூரில் கருத்தரங்கம் பேராசிரியர்கள் குழு பயணம்

விழுப்புரம்: சிங்கப்பூரில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்க, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி பேராசிரியர்கள் புறப்பட்டு சென்றனர்.
மதுரை அமெரிக்கா கல்லுாரி மற்றும் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம், ’ரூட்’ பன்னாட்டு பன்முக ஆராய்ச்சி இதழ் அமைப்பு இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
சிங்கப்பூர் உமரு புலவர் தமிழ்மொழி மையத்தில், ’சமீபத்திய பன்முக ஆய்வு போக்குகள்’ தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் தமிழ்மொழி ஆர்வலர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கின்றனர்.
இதில், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி நிர்வாகம், பன்னாட்டு கருத்தரங்கில் பேராசிரியர்கள் பங்கேற்க ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி ஏற்பாடு செய்துள்ளது.
இதையொட்டி, முதல்வர் அருணாகுமாரி, பேராசிரியைகள் அனந்தி, செல்வி, உத்ரா, ஸ்ரீஜா, மணிமேகலை, சுகுணா, பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் தேர்வாகி, கருத்தரங்கிற்கு புறப்பட்டு சென்றனர். இவர்களை கல்லுாரி நிர்வாகம் சார்பில், வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement