Advertisement

தேசிய கிராமிய நடன விழா; மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி: தேசிய கிராமிய நடன விழா மற்றும் சுற்றுச்சூழல் முகாமில் பங்கேற்ற, புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மத்தியபிரதேசம், போபாலில் நடந்த தேசிய கிராமிய நடன விழா மற்றும் டில்லி தேசிய பால்பவனம் சார்பில், விசாகப்பட்டினத்தில் நடந்த சுற்றுச்சூழல் முகாமில், புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்ல மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு பாராட்டு விழா, புதுச்சேரி ஜவகர் பால்பவனில் நடந்தது. பால்பவன் தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் குப்புசாமி வரவேற்றார். மேற்பார்வையாளர் ராசாராம், ஆசிரியர்கள் ராசரத்தினம், காமராஜ், நளினி மற்றும் மாணவிகள் சோனியா, பிரியதர்ஷினி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
தியாகி அப்துல் மஜீத், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேசினார். மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பால்பவன் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement