Advertisement

கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளிகளுக்கு ஐ.சி.எஸ்.இ., உத்தரவு

கோல்கட்டா: ’கோல்கட்டாவில், தங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்’ என, ஐ.சி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில், ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய பள்ளி தேர்வுகள் சான்றிதழ் கவுன்சில் சார்பில், ௧௦௦க்கும் அதிகமான பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
இந்த பள்ளி ஒன்றில், எல்.கே.ஜி., படிக்கும் நான்கு வயது சிறுமி, சில நாட்களுக்கு முன், பள்ளி யிலேயே பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஐ.சி.எஸ்.இ., கவுன்சில், கோல்கட்டாவில் உள்ள, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். மேலும், கழிப்பறைகளை தவிர, பள்ளிகளின் அனைத்து பகுதிகளும், கண்காணிப்பு கேமராவின் கட்டுப்பாட்டில், கொண்டு வர வேண்டும்.
பள்ளிகளின் ஒவ்வொரு பகுதிகளிலும், தனித்தனி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இந்த கண்காணிப்பு கேமராக்களை, பள்ளி நிர்வாகம் தினமும் ஆய்வு செய்து, மாணவ - மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement