Advertisement

அறிவியல் விழிப்புணர்வு சுற்றுலா!

கெங்கவல்லி: கெங்கவல்லி வட்டார வளமையம் சார்பில், 26 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும், 100 மாணவ, மாணவியர், அறிவியல் விழிப்புணர்வு கல்வி சுற்றுலாவுக்கு, நேற்று, ஏற்காடு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வாசுகி, சுற்றுலா வாகனத்தை தொடங்கி வைத்தார். ஏற்காட்டில் உள்ள ரோஜா தோட்டம், பூங்கா, சேர்வராயன் கோவில் ஆகியவற்றை, மாணவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், நகர்ப்புற நலிவடைந்த மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement