Advertisement

பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை!

சேலம்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வழங்கப்படும் சலுகைகளை, பள்ளி அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்தும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்கவுள்ளது. இதில், விபத்து மற்றும் நோய்களில் கை, கால் செயல்படாதவர்கள், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு, கண்பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சொல்வதை எழுதுபவர், மொழிப்பாடங்களில் விலக்கு, தேர்வுக்கு கூடுதல் நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் பெயர் பட்டியல் தயாரித்து, உரிய ஆவணங்களுடன் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், விண்ணப்ப தேதி முடிந்தபின், பல மாற்றுத்திறனாளி மாணவர்கள், சலுகை கேட்டு, கல்வித்துறை அலுவலகங்களுக்கு படையெடுத்தனர். இதை தவிர்க்க, அனைத்து மாணவர்களின் விண்ணப்பங்களை சேகரித்து அனுப்ப, பள்ளி அறிவிப்பு பலகையில், அரசாணை ஒட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement