Advertisement

அரசுப்பள்ளியில் நூலகம் திறப்பு விழா!

தேனி : அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட புதிய நுாலகம் திறப்பு விழா நடந்தது. இதில் ’தினமலர்’ நாளிதழ் மற்றும் அதன் இணைப்பான பட்டத்தை மாணவர்கள் விரும்பி படித்தனர்.
அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுாலகத்திற்கான அறை போதிய வசதிகள் இன்றி இருந்தது. தற்போது தலைமை ஆசிரியர் அறை சீரமைக்கப்பட்டு நுாலகமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான திறப்பு விழா நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவபடத்திற்கு மாலை அணிவித்து நுாலகத்தை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் ராஜா, உதவித் தலைமை ஆசிரியர் கோபிநாத், தமிழாசிரியர் செந்தில்குமார், தன்னார்வலர் அசோகன், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புத்தகங்களின் அணிவகுப்பு
பள்ளி நுாலகத்தில் பத்தாயிரம் அரிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அதனுடன், அறிவியல், பொது அறிவு, கணிதம், வரலாறு, தமிழ் இலக்கியங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், இதிகாச, இலக்கிய நுால்களும் இடம் பெற்றுள்ளன.
கவனம் ஈர்த்த ’தினமலர்’ பட்டம் தலைமை ஆசிரியர் ராஜா கூறியதாவது:நுாலகத்தில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் படித்து பயன்பெற காலை 8:30 - மாலை 5:00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுால்கள் குறித்த தகவல்களுக்கும், நுாலக விபரங்களை பெறவும் தமிழாசிரியை கவிதா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் திண்ணை பயிற்சி மையத்தின் மூலம், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய, மாணவர்கள் - ஆசிரியர்கள் புரிதல் விபரங்கள், கற்றல் கற்பித்தல் பணிகளின் நன்மைகள், ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய புத்தகங்களும் உள்ளன. ’தினமலர்’ நாளிதழ், அறிவு பொக்கிஷமான அதன் இணைப்பு பட்டம் வைக்கப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் விரும்பி படிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement