Advertisement

அரையாண்டு தேர்வு துவக்கம்; பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

ஈரோடு: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. இன்று மொழி பாடம் ஒன்று, நாளை மொழி பாடம் இரண்டுக்கான தேர்வு நடக்கிறது.
பிளஸ் 2வை பொறுத்தவரை, 11 ஆங்கிலம் முதல் தாள், 12 ஆங்கிலம் இரண்டாம் தாள், 14 கணினி அறிவியல், பயோ - கெமிஸ்டரி, 15 தாவரவியல், விலங்கியல், வரலாறு தேர்வு நடக்கிறது. 18 கணிதம், 19 வணிகவியல், 21 வேதியியல், 23 இயற்பியல், பொருளியல் பாட தேர்வுகள் நடக்கிறது.
பிளஸ் 1 வகுப்பை பொறுத்தவரை, 14 வணிகவியல், 15 கணிதம், 18 கணினி அறிவியல், புள்ளியியல், 19 வரலாறு, தாவரவியல், 21 இயற்பியல், பொருளாதாரம், 23 வேதியியல், கணக்குபதிவியல் பாட தேர்வு நடக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி.,யை பொறுத்தவரை, 11ல் மொழி பாடம் முதல் தாள், 12 இரண்டாம் தாள், 14 ஆங்கிலம் முதல் தாள், 15 ஆங்கிலம் இரண்டாவது தாள், 18 கணிதம், 20 அறிவியல், 21 மாற்று மொழி பாடம், 23 சமூக அறிவியல் பாட தேர்வு நடக்கிறது. மாணவ, மாணவியர் காலை, 10:00 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும்.
10 நிமிடங்கள் வினாக்களை படிக்கவும், ஐந்து நிமிடங்கள் விடைத்தாளை முழுமையாக பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். காலை, 10:15 மணிக்கு தேர்வு துவங்கும். 12:45 மணி வரை தேர்வு நடைபெறும். 23 முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும். ஜனவரி, 2ல், மீண்டும் பள்ளி திறக்கப்படும். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement