Advertisement

பள்ளி மாணவர்களுக்கு ’கவுன்சிலிங்’

ஸ்ரீபெரும்புதுார், மாத்துார் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் அமைப்பு சார்பில், மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் கண்டிப்பதால், பள்ளி மாணவர்கள் சிலர், விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாத்துார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில், மன நல ஆலோசனை, நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
இதில், 9 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். தங்களின் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது, சிறந்த பழக்க வழக்கங்களை எப்படி அமைத்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, மாணவர்களுக்கு, மன நல மருத்துவர்கள் வழங்கினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement