Advertisement

’டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட்டப் வீகென்ட்’

என்.ஐ.டி.,யில் செயல்படும், தொழில் முனைவோர் மையத்துடன் இனைந்து, டெக்ஸ்டார்ஸ், கூகுள் தொழில் முனைவோர் அமைப்பு மற்றும் சிஇடிஐ சொனாட்டா தொழில் முனைவோர் நிதி அமைப்பு ஆகிய நிறுவன அமைப்புகள் நடத்தும், தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்டப் நிகழ்ச்சி செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை என்.ஐ.டி., கல்லூரியில் நடைபெற உள்ளது.
54 மணிநேரம் விருவிருப்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் கண்டுபிடிப்பு திறன்களை ஆராய்ந்து, எவ்வாறு அதை வணிகம் செய்வது, அதற்காக வழிமுறைகள் மற்றும் பல நுட்பமான தொழில் முணை யோசனைகளை வழங்க, தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் வழங்கவுள்ளனர்.
இதில், செல்லேர்கோவின் தலைமை நிர்வாகி வெங்கி ராஜேந்திரன், ஸ்னாக் எக்ஸ்பெர்ட்ஸ் தலைமை நிர்வாகி அருள் முருகன், ஐ-மார்ப்-இன் நிறுவனரான துரை தொடலா மற்றும் பல பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement