Advertisement

வனத்துறை பதவிக்கு தேர்வு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: வனத்துறையில் காலியாக உள்ள, 14 உதவி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு, டிச., 17ல் நடக்கிறது.
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள, 14 உதவி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இரண்டு கட்டமாக, எழுத்துத் தேர்வை அறிவித்து உள்ளது.
முதல்நிலை எழுத்துத் தேர்வு, டிச., ௧௭ காலை, 1௦:௦௦ மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான, ’ஆன் - லைன்’ பதிவு, நேற்று துவங்கியது; அக்., ௯க்குள் பதிவுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement