Advertisement

’நீட்’ தேர்வுக்கு விலக்கு; முதல்வர் வலியுறுத்தல்

மதுரை: ‘மாணவர் நலன் கருதி ’நீட்’ தேர்வுக்கு இக்கல்வி ஆண்டிலேயே விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,‘ என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அவரை காங்., சார்பில் நகர் தலைவர் கார்த்திகேயன், துணை தலைவர் சையதுபாபு, பொது செயலாளர்கள் துரையரசன், சுந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
இதன்பின் நாராயணசாமி கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ’நீட்’ தேர்வில் இருந்து இந்த கல்வியாண்டிலேயே மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். புதுச்சேரியில், மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. அதே போன்று தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும், என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement