Advertisement

அரசு கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்

கோவை அரசு கலை கல்லுாரியில்,மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, மே 29ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை நடந்தது.
கலந்தாய்வு முடிவில், மொத்தமுள்ள 1,359 இடங்களில், 1,259 இடங்கள் நிரம்பின. பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், இடங்களை ’சரண்டர்’ செய்து பிற கல்லுாரிகளுக்கு மாறியுள்ளனர். காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது.
இக்கலந்தாய்வில், மே 22ம் தேதிக்குள் விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம். கல்லுாரி முதல்வர் செல்லத்தாய் கூறுகையில்,”கலந்தாய்வில் 1 முதல் 2,250 வரை தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்களும், நாளை 2,251 முதல் 4,500 வரை இடம் பெற்றவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement