Advertisement

‘லட்சியத்துக்காக படித்தால் வரலாறு பேசும்’

பல்லடம்: “லட்சியத்துக்காக மாணவர்கள் படிக்க வேண்டும்; அப்போது தான், அவர்களை பற்றி வரலாறு பேசும்,” என்று, பொன்ராஜ் பேசினார்.
பல்லடம் ப்ளூ பேர்டு மெட்ரிக் பள்ளியில், அறிவியல் விழிப்புணர்வு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் சுபத்ரா வரவேற்றார். ‘மாணவர்களும் அறிவியலும்’ என்ற தலைப்பில், அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது:
மாணவர்கள், மென்மையான திரியை போன்றவர்கள். விளக்கு எரிவதற்கு எண்ணை, திரி, மற்றும் தீ வேண்டும். இந்த வார்த்தைகளை இணைத்து உச்சரித்தால், ‘என்னை திருத்தி கொள்ள வேண்டும்’ என்ற பொருள்படும். பெற்றோர், எண்ணையை போன்றவர்கள். ஆசிரியர்கள் அறிவு தீபம் ஏற்றும் திரியை போன்றவர்கள். விளக்கானது, கல்விக்கூடத்துக்கு ஒப்பானது.
நமது எண்ணங்களே வார்த்தை, செயல், பழக்க வழக்கம், மதிப்பு, மற்றும் தலைவிதியை நிர்ணயிக்கின்றது. லட்சியங்களின் மீது நம்பிக்கை வைத்தால், சாதனையாளராக மாறலாம். உறக்கத்தில் வருவதல்ல கனவு; நமது லட்சியத்தை நினைத்து, உறங்கச்செய்யாததே கனவு. எனவே லட்சியங்களுக்காக படிக்க வேண்டும். அப்போது தான், வரலாறு பேசும். இவ்வாறு, அவர் பேசினார்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு, பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆசிரியர் ரோசி வைலட் நன்றி கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement