Advertisement

மாணவர்கள் படிப்புக்கு ரூ.30 லட்சம்!

திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் வசதியில்லா மாணவர்களின் படிப்பிற்காக முன்னாள் மாணவர்கள் 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1988-92ல் படித்த மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் 25 ஆண்டுகளுக்கு பின்பு கல்லூரியில் நேற்று சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் கருமுத்து கண்ணன் தலைமை வகித்தார்.
முதல்வர் அபய்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் ரமேஷ்பாபு வரவேற்றார். கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க முன்னாள் தலைவர் ராம்கோபால், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
1988-92ல் படித்த 135 மாணவர்கள் சார்பில் கல்லூரியில் படிக்கும் வசதியில்லாத மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு 30 லட்சம் ரூபாய் அளித்தனர். முன்னாள் மாணவி மகா நன்றி கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement