Advertisement

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு; ’ஹால் டிக்கெட்’

சென்னை: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வினை எழுத உள்ள தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன் விவரம்:
நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) ஜூன் 21, 2017 அன்று முதல் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ‘SSLC JUNE/JULY 2017 EXAMINATION & HALL TICKET DOWNLOAD”என்ற வாசகத்தினை “Click” செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது மார்ச் 2017 தேர்வின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறையதபட்ச மதிப்பெண் 15க்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.
மார்ச் 2017 பத்தாம் வகுப்பு அறிவியல்பாட செய்முறைத் தேர்வுக்கு வருகைபுரியாதோர், நடைபெறவுள்ள ஜூன் மற்றும் ஜூலை 2017 சிறப்பு துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதுவதோடு அறிவியல்பாட கருத்தியல் தேர்வையும் கண்டிப்பாக எழுத வேண்டும்.
செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குத் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே 22.06.2017 மற்றும் 23.06.2017 ஆகிய இரு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.
எனவே, இத்தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை மேற்படி நாட்களில் அவசியம் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement