Advertisement

பள்ளிகளில் காலி பணியிடம் நிரப்ப தீர்மானம்

சேலம்: தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, என்.ஜி.ஓ., அலுவலக கட்டடத்தில் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் தேவி செல்வம் தலைமை வகித்தார். இதில், அனைத்து அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில், அறிவியல் கூடத்திற்கு உபகரணங்கள் வழங்குவது போல், விளையாட்டு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும்.
விளையாட்டு போட்டிகள் நடத்த, 10 கோடி ரூபாய் வழங்கும் நிதியை, 15 கோடி ரூபாயாக உயர்த்தி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விளையாட்டுகளை நடத்தவும், அந்த நிதியை கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடற்கல்வி பாடம் மற்றும் விலையில்லா பாட புத்தகம் வழங்க வேண்டும். பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை, பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
மருத்துவ படிப்புக்கும் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்கும், விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டை, மற்ற மாநிலங்களில் வழங்குவதுபோல், மூன்றில் இருந்து, 30 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
கோரிக்கைகள், இம்மாதத்துக்குள் நிறைவேற்றாதபட்சம், ஜூலை முதல் வாரம், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், இரண்டாம் வாரம், மாநில அளவில், சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப்படும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement