Advertisement

‘திறன் பயிற்சி பெறலாமே’ இளைஞருக்கு அழைப்பு

திருப்பூர் : தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தில், (டி.என்.எஸ்.டி.சி.,) பயிற்சி பெற்று அரசு சான்றிதழ் பெற விரும்புவோர், திறன் பயிற்சி பெற அழைப்பு விடப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜன் அறிக்கை:
திருப்பூரில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள திறன்பயிற்சி மையத்தில், பல்வேறு தொழில்பிரிவுகளில், அரசின் திறன் மேம்பாட்டு முனைப்பு திட்டத்தின் கீழ், மாலைநேர குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டு மின்சாதனங்கள் பராமரிப்பு, கணிப்பளவு (டேலி) பயன்படுத்தும் கணக்கு பதிவி யல் உதவியாளர் ஆகிய தொழில்பிரிவுகளில் மாலைநேர இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடக்கிறது.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர், தொழிற்சாலைகளில், சான்றிதழ் இன்றி பணிபுரியும் தொழிலாளர், திறன் மேம்படுத்த விரும்பும் ஐ.டி.ஐ., பட்டதாரிகள், இல்லத்தரசிகள், இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெற, நேரில் அணுக வேண்டும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு மேல் படித்திருக்கலாம்; 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். தினமும் மாலையில், மூன்று மணி நேரம் வீதம், 300 மணி நேரம் பயிற்சி காலமாக உள்ளது.
பயிற்சியில் சேருபவர்களுக்கு, தினமும் பயணபடியாக 100 ரூபாய் வீதம், மாதம், 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விவரங்களுக்கு: 0421 2429201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement