Advertisement

தி.மு.க., ஜெயிக்கலைன்னா துண்டு போட்டு நடக்க முடியாது

விருதுநகரில் நடந்த, தி.மு.க., வேட்பாளர் ரத்தினவேல் அறிமுகக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: அதிகமான ஓட்டு உள்ள கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க., மட்டுமே. அதனால் தான், தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு இருக்கு, யாரை நிறுத்தினால் வெற்றி பெற செய்யலாம் என, ஒரு கணக்கு போட்டேன். இதில், ரத்தினவேல் பெயரை பரிந்துரை செய்தேன். இது, எனக்கும், தங்கம் தென்னரசுவுக்கும் மட்டுமே தெரியும். தி.மு.க., ஜெயிச்சா தான், நமக்கு வாழ்க்கை, இல்லை எனில், ஒருவர் கூட, ரோட்டில துண்டு போட்டு நடக்க முடியாது. யார் காலில் விழுவீர்களோ? என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார். நேற்று கட்சிக்கு வந்தவருக்கு, 'சீட்' தந்து விட்டு, இப்படி பேசி உசுப்பேத்திறீங்களே தலைவா... என, முணுமுணுத்தார் பழுத்த தொண்டர் ஒருவர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement