Advertisement

பாலியல் பலாத்காரம்: புது பரிணாமம்: வான்மதி, பாவையர் மலர் மாத இதழ் ஆசிரியர், சிந்தனையாளர்

சமீப காலமாக, பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகள் நிறைய வெளிவருகின்றன. தினமும், ஏதாவது ஒரு காவல் நிலையத்தில், பாலியல் பலாத்கார குற்ற வழக்கு பதிவாகி கொண்டேயிருக்கிறது.

பஸ்சில் டில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கிற்கு பிறகு, இளம்பெண்கள் தைரியமாக தங்களுக்கு நடக்கும் அநீதிகளை, வெளியில் சொல்ல துணிந்திருக்கின்றனர் என்று, நாம் எடுத்துக் கொள்ளலாமா? பெண்கள் அனைவரும் தைரியசாலிகளாக மாறி, ஆண்களின் முகத்திரையை கிழிக்க கிளம்பி விட்டனர் என்பது உண்மை என்ற பட்சத்தில், நமக்கும் ஒருவித நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால், நடக்கிற எல்லா நிகழ்வுகளும், வழக்குகளும் ஒட்டுமொத்தமாக, உள்நோக்கத்தோடு, ஆண்களை குறை கூறுவதற்காகத் தான் என, நினைக்கும்படி இருக்கிறதே! ஒரு சம்பவம் நடந்தால், அதன் விசாரணை, இரண்டு பக்கமும் இருக்கவேண்டும். பொதுவாகவே, காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு, சண்டை, கொள்ளை ஏன் கொலை வழக்கு என, பல வழக்குகள் இருந்தாலும், பெண்களை கிண்டல், பலாத்காரம் செய்த வழக்குகள் தான், அதிக முக்கியத்துவம் பெறும். அதன் காரண கர்த்தாவை, போலீஸ் கவனிப்பதே கொடுமையாக இருக்கும். சாதாரணமாக, சாலையில் வண்டியோடு ஒரு பெண் கீழே விழுந்துவிட்டால், உடனே உதவி செய்ய, 10 ஆண்களாவது ஓடி வருவர். ஆண்கள் கீழே விழுந்தால் ஓடி வருபவர், ஓரிருவர் மட்டுமே. ஆக மொத்தம், நம் சமுதாயத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம், அனுதாபம், அனுசரணை கண்டிப்பாக கிடைக்கிறது. ஒன்று, இரண்டு தப்பியிருக்கலாம். அதையும் நம் மகளிர் நல அமைப்புகள் சும்மா விடுவதில்லை. இந்த அமைப்புகள், பெண்கள் எது சொன்னாலும், உடனே வரிந்துக் கட்டி வந்து விடுகின்றனரே என்ற அச்சமும், பொதுமக்களுக்கு வருகிறது. ஆனால், இன்னும் பல காவல் நிலையங்களில், மனைவி மீதும், மாமியார் மீதும் புகார் கொடுத்து விட்டு, பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஆண்களும் உள்ளனர் என்பதை, இந்த மகளிர் நல அமைப்புகள் அறிந்திருக்குமா என்று தெரியவில்லை.


வடசென்னை பகுதியில், ஒரு அரசு நிறுவனத்தில் ஒரு அதிகாரி, ஒரு பெண் ஊழியரிடம் நெருங்கி பழகினார். ஒரு நாள் இருவரும் அலுவலக பாத்ரூமில் இருந்ததை, மற்றொரு பெண் ஊழியர் பார்த்து விட்டார். இதை தெரிந்து கொண்ட நிறுவனம், சம்பந்தப்பட்ட இருவரையும் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், நிறுவன சட்ட திட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்த செய்தியை தெரிந்து கொண்ட, அந்த அதிகாரியை பிடிக்காத சில பேர், உடனே ஒரு மகளிர் அமைப்பிடம் கூற, அந்த அமைப்பும் சம்பந்தப்பட்ட பெண் ஊழியரை கூப்பிட்டு, உடனே நீ வழக்கு போடு என, கட்டாயப்படுத்தி உள்ளது. இப்போது இது ஒரு வழக்காக, அதுவும் பாலியல் குற்றமாக பதிவு செய்யப்பட்டு நடந்து வருகிறது. இதில், அந்த பெண் ஊழியர், அதிகாரியை பிடிக்காதவர்கள், அந்த மகளிர் அமைப்பு ஆகியோர், என்ன ஆதாயம் அடைந்தனர் என்பதல்ல, நம்முடைய கவலை... இப்படியும் நடக்கிறதே என்ற ஆதங்கம் தான். சமீபத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல சம்பவங்கள் கூட, இப்படித்தானோ என, எண்ணத் தோணுகிறது. நீதிபதி தன்னை நிர்பந்தித்தார் என, ஒரு படித்த வக்கீல், இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு புகார் பதிவு செய்கிறார். ஆயிரம் பேர் நெருக்கியடித்த ஒரு கூட்டத்தில், என் கைகளை பிடித்துக் கொண்டேயிருந்தார் என, தன் பிரசவத்தை நேரிடையாக படம் பிடித்து, திரைப்படத்தில் சேர்த்து, அதையும் காசாக்கிய ஒரு நடிகை மக்களின்


பிரதிநிதியாக உள்ள, ஒரு வயதானவர் மீது பரபரப்பு கூட்டுகிறார். தேசத்தின் அதிபர் (அமெரிக்கா), தன்னை பலாத்காரம் செய்தார் என, அவரின் செயலர், பல காலம் கழித்து, அதிபரின் ஆண்மை அடையாளம் உள்ள உடையை, நீதிமன்றத்தில் சாட்சியாக்குகிறார். காதல் காட்சியிலும், நடனங்களிலும் அங்கங்கள் தெரிய நடனமாடிய ஒரு நடிகை, வேறு ஒரு படத்தில், வேறு ஒரு பெண்ணுடைய தொப்புளை, என்னுடையது போல் காட்டியுள்ளனர் என, ஒட்டுமொத்த பட குழுவினர் மீதும் வழக்கு போட்டார். இப்போது பரபரப்பாக அடிபடுகிறதே தெகல்கா வழக்கு. அதுவும் இப்படித் தானோ என்ற ஒரு நெருடல், சந்தேகம் நமக்கு வருவது இயற்கை தானே. இதையெல்லாம், உதாரணமாக கூறி ஒட்டுமொத்த தவறுகளுக்கும், பெண்கள் தான் காரணம் என்று கூறவில்லை. பெண்கள் உடை அணியும் விஷயத்தில், இன்னும் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும் என்று கூறியதற்கு, எவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்டது என்பதும், எனக்கு தெரியும்.


ஆனால், அதிலும் சிறிதளவு உண்மை இருக்கிறது தானே.


ஒருத்தரை காலி செய்யணும் என்றால், இப்போதெல்லாம் இப்படி குற்றம் கூறுவதை, ஒரு ஆயுதமாக எடுத்துக் கொள்கின்றனரோ என்ற பதைபதைப்பு, தோன்றுவது உண்மை. ஒரு விரும்பத்தகாத செயல் நடக்கிறது என்றால், உடனே விலகி விட வேண்டும் அல்லது உடனடி நடவடிக்கையாக எச்சரித்து, நம் எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும். இதுவும் இல்லையென்றால், உடனே புகார் அளிக்க வேண்டும். இவ்வளவு காலதாமதமாக ஏன் வெளியிட வேண்டும்? சாதாரண பொதுமக்களுக்கு, ஒரு பச்சாதாபம் கூட, இவர்கள் மீது ஏற்படாமல், வலுத்த சந்தேகம் தான் ஏற்படும். மீடியாக்களும் பரபரப்பு செய்தி போதும் என, கண்களை மூடிக் கொண்டு அரசியல் ஆக்குகின்றன. பெண்ணை, உடல் அழகு என்ற எல்லை தாண்டி அறிவு, ஆற்றல், திறன், கலை, கல்வி என்று பன்முகமாக மதிக்கும் நாள் தான், உண்மையான பெண் விடுதலை நாள் என்று, பல பேர் கூற கேட்டிருக்கிறோம். பின் ஏன் நாம் எடுப்பார் கைப்பிள்ளையாக, ஒரு அநீதி நடக்கும்போது, அதுவும் நமக்கே நடக்கும்போது உடனடியாக எதிர்த்து நிற்காமல், இப்படி பயந்து கோழையாகி பின் அதையே, வீர முழக்கம் போல் ஓர் அரசியலாக்கி, இப்படி அல்லல்பட்டு, அசிங்கப்பட்டு நிற்க வேண்டும். நாம் எல்லாருமே யோசிக்க வேண்டிய விஷயமல்லவா இது? எந்த பெண்ணும், தன் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டிய தருணங்களில், எல்லாம் அசிங்கமான சூனியகாரி போல் ஆகிவிடுகிறாள் என்பது உலக நியதி. இப்படிநான் கூறுவது, பலரை கோபம் அடையச் செய்யும். சிந்தியுங்கள். அப்படி சிந்திக்கத் துவங்கும்போது, கோபம் அளிக்கும் பல விஷயங்கள் முடிவில் நியாயம் புலப்படுகிற மாதிரி தெரியும். சுயசிந்தனையுடன், விடுதலை உணர்வும் உள்ள பெண்களைச் சமூகத்தால், இனி அடிமைப்படுத்த முடியாது என்பது தான் செய்தி.

'இ-மெயில்'-Pavaiyarmalar7gmail.com

வான்மதி, பாவையர் மலர் மாத இதழ் ஆசிரியர், சிந்தனையாளர்
Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • Nagarajan Thamotharan - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் எழுத்தாளர் வான்மதி அவர்களே அலுவலகத்தில் அல்லது பொது இடங்களிலோ பெண்களும் சரி ஆண்களும் சரி தங்களது சுய நலத்திற்க்காக பழி வாங்கும் நோக்குடன் பாலியல் பலாத்காரத்தை பயன் படுத்துகிறார்கள் என்பதை தெளிவு படுத்திருக்கிரிர்கள். கடுமையான சட்டங்களினாலும், தண்டனைகளும் மனிதனின் அடிப்படை குணத்தை / பாலியல் கவவ்ர்சியை / காம பசியை கட்டுபடுத்த முடியாது என்பதை அரசு நினைவு கொள்ள வேண்டும். அடக்கு முறைகள் கொடூர குற்றங்களை தூண்ட வழிவகை ஏற்படுத்தும். வரைமுறையற்ற கலாசாரம் , கட்டுபாடற்ற சமுதாயம், விதிமுறைகளை மீறிய மனித தேவைகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட / எழுதப்பட்ட மத கோட்பாடுகள், சுயநலமுடைய அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல் இவையெல்லாம் பாலியல் குற்றங்கள் பெருக காரணமாக இருக்கின்றது.பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்கள் அமைப்பு பாலியல் குற்றங்களில் வழக்கு பதிவு பெண்களின் உள்நோக்கம் / உண்மையை அறிந்து சுமுகமான நிலைமையை கடை பிடிக்க முன்வரவேண்டும் . மாறாக உயர்பதவியில் இருக்கும் நபர்கள் மீது உள்நோக்கத்தோடு பாலியல் குற்றங்கள் சுமத்தப்படும் போது காவல்துறையினரை சுதந்திரமாக விசாரணைக்கு வழிவகை செய்ய வேண்டும் . மாறாக அடிப்படை கருத்தை புரிந்து கொள்ளாமல் கண்டனம் தெரிவிப்பது வருத்தத்திற்குரியது.

 • Paramaguru - Pondicherry,இந்தியா

  உண்மைதான், இன்று அனேக குடும்பங்களில் பெண்கள் கணவருடன் தனி குடித்தனம் செல்வதற்கு கூட இது மாதரியான பொய் பாலியல் புகாரை தன் மாமனார், மைத்துனர் ஏன்? கணவர் மேல் கூட கூறுகிறார்கள். அவர்களை என்ன செய்வது, அவர்கள் மீது குடும்ப வன்முறை சட்டம் செல்லாதா? யோசியுங்கள் அறிவுகெட்ட நீதிபதிகளே, மானிட ஜென்மங்களே.

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  தி நகர் பேருந்து நிலையம் அருகே மடத்தனமாக குறுக்கே வந்த ஒரு பெண் எனது வண்டியின் பின்சக்கரத்தில் இடித்து அவர் வண்டி கீழே சாய்ந்தது. அதற்கே பலர் ஓடி வந்து அவருக்கு உதவி செய்து எனக்கு "அறிவுரை" வேறு செய்தார்கள். 2) எங்காவது விபத்து ஏற்பட்டால் மூன்று பெண்கள் உட்பட இருபது பேர் பலி என்றெல்லாம் சொல்லும்போது அதில் இறந்த 17 ஆண்களை பற்றி கவலை இல்லையா என்று தோன்றும். 3) இன்று பல அரசு அலுவலகங்களிலும் பெண்கள் லஞ்சம் வாங்குவதில் ஆண்களை மிஞ்சுகிறார்கள்.

 • JALRA JAYRAMAN - chennai,இந்தியா

  நான் எந்த கோவிலுக்கும் உள்ளே செல்வதில்லை வெளியில் இருந்து ஒரு கும்பிடு அவ்வளவு தான்

 • JALRA JAYRAMAN - chennai,இந்தியா

  நமது ஆட்களுக்கு(ஆண் பெண் ) வெச்ச குடுமி சிரைத்தால் மொட்டை என்பது தான் இம்மாதிரி பிரச்சினைகளுக்கு காரணம், எதிலும் நிதானம் கிடையாது அந்த காலத்தில் ஆண்கள் ஆட்டம் போட்டனர் இப்போது பெண்கள்

 • Shriram - chennai ,இந்தியா

  ஆண்கள் பலாத்காரம் செய்து வெளிப்படையாக மாடிகொள்கிறனர்.ஆனால் பெண்களோ ஆண்களை மனதளவில் பலாத்காரம் செய்வதைவிட பலமடங்கு பாதித்து விடுகின்றனர்

 • Aravind N - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சிந்திக்க தூண்டும் வரிகள் ....

 • Kalyan Sundar - Chennai,இந்தியா

  ஆம் .தன் எண்ணத்திற்கு மாறாக நடக்கும் விஷயத்தில் சூனிய காரியாக மாறுவதை தவிர்த்தல் அறிவு பூர்வ முடிவு எடுக்க உதவும் .

 • k.ramadas - al ain,ஐக்கிய அரபு நாடுகள்

  மதிப்பிற்குரிய வான்மதி அவர்களுக்கு, வாழ்த்துகள். தங்களின் கருத்துகள் நேர்மையானவை. பொதுவாக இரண்டுதரப்பிலும் உள்ள நியாயங்களை மன சாட்சியுடன் அணுகவேண்டும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மற்ற நகரங்களில் எப்படி தெரியாது. கோவையில் பஸ்களில் / லோகல் ரயிலில், பெண்கள் கூலாக ஆண்கள் பக்கத்தில் அமர வருவதும், உடனே ஆண்கள் பதறி எழுந்து நிற்பதும் சாதாரணக் காட்சியாகிவிட்டது. கோவில்களில் கேட்கவே வேண்டாம்-ஆண்களை இடித்து தள்ளி முன்னாள் போவதால் ஆண்கள் கோவிலுக்கு செல்லவே தயங்குகிற நிலை வந்துகொண்டிருக்கிறது. தெரியாமல் ஆணின் கையோ காலோ மேலே பட்டால், அந்த ஆளை உண்டு இல்லை என்று ஆக்கிவிடலாம் என்கிற தைரியம் தான் இப்படி செய்யத் தூண்டுகிறது. பாவம் ஆண்கள்.

 • Parthiban S - arumuganeri,இந்தியா

  "பெண்களில் சிலரோ, பலரோ கிட்டத்தட்ட தங்களின் முழு முதுகையும் காட்டிசெல்கின்றனர்... இந்தவகையில் இன்னும் சிலரோ, பலரோ மறைவு அவயங்களை இயன்றவரையில் வெளிக்காட்டுவதில் 'கண்ணும் கருத்துமாக' உள்ளனர்... இதன்மூலம் இவர்கள் விடுக்கும் 'மெசேஜ்'தான் என்ன..? ஆபாச,கவர்ச்சி போஸ்டர்களை கிழித்தெறியும் போர்க்கோல மகளிர் அமைப்பினர், இந்த 'ரியல் ஆபாச மொபைல்' திட்டத்தை தடுக்க எந்த முயற்சியையும் எடுத்ததாக தெரியவில்லையே ஏன்..?"

 • HARINARAYANAN - Chennai,இந்தியா

  இந்த பெண்ணின் துணிச்சலான கருத்துக்கு இது வரை பெண்ணியம் பேசுபவர்களும் பெண்விடுதலை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?. சொன்னவர் ஒரு பெண் மட்டுமல்ல ஒரு பொறுப்பான மாதர் இதழின் ஆசிரியர் என்பதாலா? அப்படி இருக்க வாய்ப்பில்லை... அவரது கூற்றில் இருக்கும் நெருடலான உண்மைதான் காரணம்... இது போன்ற புகார்களில் விசாரணையின் போது புகார் கொடுத்த பெண்ணின் குணாதிசயங்களும் பின்புலமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்... மேலும் குற்றம் சாட்டுவதற்கு ஏற்கெனவே இருந்த காழ்ப்புணர்ச்சியோ பகைமையோ காரணம் அல்ல என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

 • Mathiyazhagan. K - Thanjavur,இந்தியா

  எழுத்தாளர் வான்மதியின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை. பாலியல் என்பது ஒருவரை அசிங்கப்படுத்தும் அல்லது பழிவாங்கும் ஆயுதமாகவே இப்போது எடுத்தாளப் படுகிறதோ என்ற எண்ணம் நமக்கு வருகிறது. பெண்கள் பல இடங்களில் பாதிக்கப்படுவது உண்மையே என்ற போதிலும் சில விசயங்களில் நெருடல் ஏற்படுவது தவிர்க்க இயலவில்லை. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு இட்டு செல்லும் சூழலை ஏன் களையக் கூடாது. ஆடை குறைப்பு அவஸ்தையைதானே தருகிறது. அப்படி ஆடையை குறைக்கும் அவர்களின் நோக்கம் தான் என்ன. காசில்லைய? அல்லது தன் அழகு இது என்று காட்ட வேண்டுமா? யோசியுங்கள் பெண்களே.

 • Parthiban S - arumuganeri,இந்தியா

  "சமீபத்திய பாலின குற்றங்களைப் பற்றி, பாலின பேதமின்றி தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கையாகவே இந்த கட்டுரை உள்ளது. இதன் நடுநிலை கருத்துக்களை 'பாவை'யான வான்மதி அவர்களால் ஓங்கி சொல்ல முடிகிறது. இதையே ஒரு ஆண் சொன்னால், அவர் எந்தத் தளத்தில் இருப்பவராயினும் அவரை 'டார் டாராக' கிழித்தெறிய பெருங்கூட்டமே காத்திருக்கிறது. இது கசப்பான உண்மை..."

 • Manian - Chennai,இந்தியா

  Sorry I could not enter my comment in Tamil as the A button does not appear in my tem. This article is based on well thought out facts. Our society a woman is considered as Devi(Goddess) and every one wants a grand mother, mother, sister and a wife. Sexual misconduct is the result of the immaturity of the frontal lobe in people. It matures for girls around 22 years and for boys 27 or so. This is the site that makes "decisions" based on reasoning. Sexual urge is biological one for both sex. While our ancestors accepted this and one can see these erotic poses even on many temples. They knew that healthy sexual understanding is necessary for the procreation of human beings. However, if girls are taught that their intentions may be naive, but the consequences may be violence and even death and if they are taught to channelize their strengths in hobbies like music, dance, gardening,. social work etc., and also advised to wear glass bead based ornaments and to dress decently but elegantly, they will find a right partner after their mental maturity around the age of 22 or so. Indians become a judge, jury and jailer without finding out full details. They have the mob mentality to condemn a person based on a mere accusation. If an adult man and woman have mutual agreement , then others have no business to be nosy and judgmental. Most who complain are themselves may be guilty of some other crime. However, since we do not have any orderly "law and Order" mentality after 1947, and no one bothered to be careful with this aspect, corruption has taken over of any complaint. Laws are misused to make money via bribe and it is pervasive. So, dear madam, your questions will not be answered by most Indians as they have washed away their consciousness and live in an imaginary world where some outside power will take care of their problems and solve them . I feel the same way you feel and I have tried and failed most of the time to get justice.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement