Advertisement

உரத்த சிந்தனை : மோடி எனும் மந்திரம்: எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி

கட்சியை வளர்க்க இளைஞர்களை இணைத்து, சிறப்பாக பணிபுரியும் இளைஞரை, "கட்சியின் தூண்' என்று தலைமை பாராட்டும். அந்த இளைஞன், கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டர்களும், தோழர்களும் விரும்புவர். அண்ணாதுரையின் மறைவிற்கு பின், நெடுஞ்செழியன் தலைமை ஏற்று இருந்தால், எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து வெளியேறாமல், தலைமை ஏற்று இருந்தால், வைகோ தி.மு.க.,வின் தலைமை ஏற்று இருந்தால், சில வரலாற்றுப் பிழைகள் நடந்திருக்காது.

கடந்த, 1938ல், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், மீண்டும், 1939ல், தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். காந்திஜிக்கு, இது பிடிக்கவில்லை. எனவே, சுபாஷ் சந்திரபோஸை எதிர்த்து போட்டியிட்ட, பட்டாபி சீதாராமை, காந்திஜி ஆதரித்தார். முடிவில், சுபாஷ் சந்திரபோஸ் வெற்றி பெற்றார். "பட்டாபி சீதாராமின் தோல்வி, என் தோல்வி' என்று பேசினார் காந்திஜி.காங்கிரஸ் உறுப்பினர்கள், தனக்கு போதிய ஆதரவு தராத நிலையில், பல எதிர்ப்புக்களுக்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை தொடர மறுத்த சுபாஷ் சந்திரபோஸ், தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சுபாஷ் சந்திர போஸ், 1939ல், தன் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், காந்திஜியின் ஆதரவு, சுபாஷ் சந்திர போஸ்க்கு இருந்து இருக்கும் என்றால், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பாதை, வேறுமாதிரியாகத் தான் இருந்து இருக்கும்.கடந்த, 1984ல், லோக்சபா தேர்தலில், இரண்டு இடங்கள் மட்டுமே பெற்ற பா.ஜ.,வை, பின், ஆட்சியில் அமர வைத்த பெருமை, அத்வானியையே சாரும்.மக்களுக்கு தலைவர் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். பா.ஜ.,வின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல, மாநில தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்கள் கூட, நரேந்திர மோடி பிரதமரானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். 1939ல், காந்திஜி செய்த தவறை, தற்போது, அத்வானி செய்ய மாட்டார் என்று நம்பலாம்.

பா.ஜ.,வை உருவாக்கியவர்களில் முக்கியமானவர், அத்வானி. அவரையும் மீறி அவர் இல்லாமல், அவர் எதிர்ப்பு தவிர, வேறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 2002 பிப்., 27ல், கோத்ரா ரயில் எரிப்பில், 57 பேர் பலியானதை தொடர்ந்து, குஜராத்தில் நடைபெற்ற கலவரம், மோடிக்கு கறை ஏற்படுத்தி விட்டது. ஆனால், 1969 மற்றும் 1985ல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை விட அதிகம்.கடந்த, 1984ல், இந்திரா படுகொலை செய்யப்பட்ட போது, சீக்கிய மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, இன்னும் சரியாக தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், 16 பேர் மீதும் காவல் துறை அதிகாரிகள், 13 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. யார் மீதும், பெரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. "பலம் வாய்ந்த மரம் சாயும் போது, மண்ணையும் சிறிது பெயர்த்து எடுத்துவிடும்' என்று ராஜிவ் கூறியதை, யாரும் பெரிதுப்படுத்தவில்லை.ஆனால், குஜராத் கலவரத்தில், 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பதை, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் லோக்சபாவில் தெரிவித்தார். குஜராத்தில் கலவரத்தை ஒட்டி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான, 126 பேரில், 77 பேர் இந்துக்கள் என்பதை, தேசிய சிறுபான்மை மனித உரிமை தலைவர், ஜான் ஜோசப்
தெரிவித்தார்.

மார்ச் 5, 2002 வரை, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 98 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. 85 முகாம்களில், முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டனர். 13 முகாம்களில், இந்துக்கள் தங்க வைக்கப்பட்டனர். தற்போது குஜராத், கலவரம் இல்லாத மாநிலமாக உள்ளது.குஜராத் கலவரத்தை தொடர்ந்து, நரேந்திர மோடிக்கு, "விசா' வழங்க, அமெரிக்கா மறுத்து விட்டது. ஆனால், இஸ்ரேலுக்காக, எண்ணெய் வளத்திற்காக, பல முஸ்லிம் நாடுகள் மீது, அறிவிக்கப்படாத போரை துவங்கியுள்ளது அமெரிக்கா.லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என்று, பல நாடுகள் மீது கொத்து குண்டுகளை வீசி கொலை செய்கிறது. பிலிப்பைன்ஸ், மியான்மர் இனப் படுகொலைகள், அமெரிக்காவின் கண்ணுக்கு தெரியவில்லை.சிரியாவில் கலகக்காரர்களுக்கு உதவ, தன்னை தயார் செய்து வருகிறது அமெரிக்கா. பல நாடுகளில் மூக்கை நுழைத்து, முஸ்லிம் மக்களை அதிகம் கொல்வது அமெரிக்கா தான். அதை சொல்ல, துணிச்சல் யாருக்கும் இல்லை.முள்ளிவாய்காலில் மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாமில் இருந்து முனகிய சத்தம் கூட, அமெரிக்காவின் காதில் விழவில்லை. ஒரே நாளில், 40 ஆயிரம் பேரை கொன்ற, ராஜபக்ஷேவிற்கு, விசா மறுக்கப்படவில்லை.

கடந்த, 1960ல் உருவாக்கப்பட்ட குஜராத்தில், இதுவரை, 14 முதல்வர்கள் பதவி ஏற்று உள்ளனர். மோடி மட்டும், நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மூன்று முறை தன் தலைமையில் தேர்தலை சந்தித்து உள்ளார். சிறுபான்மை மக்களை திருப்திபடுத்துவதே மத சார்பின்மை என்று, எல்லா அரசியல்வாதிகளும் செயல்படும் போது, மக்களின் நலத்திட்டத்தில் மட்டுமே, மோடி கவனம் செலுத்தி உள்ளார்.
தற்போது, சரியான தலைமை, பா.ஜ.,வுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் தேவை. சோனியாவின் வழி காட்டுதலில், மன்மோகன் தலைமையில், காங்., கட்சியின் ஊழலால், ஊழல் பட்டியலில், உலகில் முதலிடம் இந்தியா வந்து விடும்.ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், "2ஜி' ஊழல், காமன்வெல்த் ஊழல், விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், இந்த ஊழலை மறைக்க, கோப்புகளை காணாமல் போக செய்த ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மருமகனின் ஊழல், எம்.பி., சீட் தர ஊழல் என, பட்டியல் தொடர்கிறது.

ராகுலை, காங்., கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றால், தேர்தலில் போட்டியிடும் காங்., உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், எத்தனை கோடி தருவர் என, காங்., தலைமை பேரம் பேசினாலும் பேசலாம். அவ்வாறு அறிவித்தால், ஊழல் அட்சய பாத்திரத்தை சுமந்து நிற்கும் மணிமேகலையின் மகனுக்கு, செங்கம்பள விரிப்பு தர, பல மாநில கட்சிகள் தற்போது தயாராகி வருவது, ஊழலின் உச்சகட்ட சாட்சியாகி உள்ளது."நான், 2001, அக்., 7ல், சி.எம்., ஆகவில்லை. நான் எப்போதும் சி.எம்., தான். சி.எம்., என்றால், "சீப் மினிஸ்டர்' அல்ல; காமன் மேன்' என்று பேட்டி ஒன்றில் கூறினார் மோடி. தற்போது, சி.எம்.,மிலிருந்து, பி.எம்.,க்கு பயணித்து விட்டார். அதாவது, காமன் மேனிலிருந்து, "பர்பெக்ட் மேன்!'எல்லா தேர்தலிலும், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று முடிவு செய்யாத, எந்த கட்சியையும் சாராத மக்கள் இருப்பர். தேர்தல் சமயத்தில், எந்த கட்சிக்கு ஓட்டளிப்பது என, நிர்ணயம் செய்யும் மக்கள் தான், வெற்றியை நிர்ணயம் செய்கின்றனர். மாற்றத்தை தான், எக்கட்சியையும் சாராத மக்கள் விரும்புவர். அவர்கள் ஓட்டு யார் பக்கம் என்பது, தேர்தல் வந்தால் தெரிந்து விடும்.
இமெயில்: asussusigmail.com

எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்
Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • m.s.kumar - chennai,இந்தியா

  திரிபுர என்ற ஒரு ஒரு ஸ்டேட் உள்ளது. அதன் முதல்வராக மர்.மணிக் சாகர் உள்ளார் . அவரின் சாதனை ஒரு இமாலய சாதனை. அந்த மாநிலம் குஜராத் போன்று எல்ல வசதியும் கொண்டது அல்ல .அது ஒரு மலை பிரதேசம் . இவரின் நல்ல நிர்வாகத்தால் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

 • Anbu - Chennai,இந்தியா

  நான் இதுநாள் வரை மௌன மோகன் ஒரு நல்ல பிரதமர் என்று தான் நினைத்து இருந்தேன், அவர் உடன் இருப்பவர்கள் மட்டுமே சரி இல்லை என்று, ஆனால் இவர் எப்போது நிலக்கரி கோப்புகளை துளைத்தரோ மற்றும் எப்பொழுது UP சென்று குறிப்பிட்ட மதத்தவரை மட்டும் பார்த்து விட்டு வந்தாரோ அன்று முதல் eவரும் கூட்டத்தில் ஒருவர் என்று தெரிந்து கொண்டேன்.

 • Dkodeeswaran Kodees - ADIRAMPATTINAM,இந்தியா

  எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மோடி அவர்கள், சுதந்திர இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஒரு தேசபக்தன் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும், மோடி பிரதமரனால் 130 கோடி மக்களின் வல்லரசு கனவு விரைவில் நினைவாகும்.

 • K.N.Sridharan - Bangalore,இந்தியா

  மோடியை குறை சொல்லுபவர்களுக்கு அவருடைய வளர்ச்சி பணிகள் கண்ணுக்கு தெரியாது. 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரங்களை மக்கள் மறக்கக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் அதைப்பற்றியே சொல்லி மக்களை பிரித்துவைப்பது தான் மதசார்பின்மை. இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. செயல்ப்பூரியும் ஒன்று தலைவர் நாட்டுக்கு தேவை. அது இப்போதைக்கு மோதி மட்டும் தான்.

 • JALRA JAYRAMAN - chennai,இந்தியா

  அமெரிக்க எப்போதும் சர்வதிகரிகளை ஆதரிக்கும் ( ஈரான்-SHAH மன்னர், பில்லிபினேஷ்-மர்கஸ், பாகிஸ்தான்-ராணுவ ஆட்சி) ஆனால் அது ஜனநாயக நாடு, அவர்கள் கவலை எல்லாம் நாட்டுக்கு இயற்கை வளங்கள் சல்லிசாக கிடைக்கவேண்டும் என்பது தான் "A Nation Has No Fris. Only Interests"?

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  பிரித்தாளும் சூழ்ச்சி என்பது வெள்ளைக் காரர்கள் நம் நாட்டுக்கு விட்டுச் சென்ற கொடை.....அவர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாம், காங்கிரஸ் கட்சியும் அதே பிரித்தாளும் சூழ்ச்சி தந்திரத்தை கையாளுவதை கண்டு நொந்து நூடில்ஸ் ஆகியுள்ளோம்... வெள்ளையர்களுக்கு எதிராக ஒன்று திரண்ட நாம், இப்போது கொள்ளையர்களுக்கு எதிராகவும் ஒன்று திரளுவோம்....

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  இந்த கட்டுரையில் வந்துள்ள மிக முக்கியமான கருத்துக்கள், குறிப்பாக, நவமயம், சுப்புணி இன்ன பிறர் பார்வைக்கு.....1969 மற்றும் 1985ல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை விட அதிகம்....2002 குஜராத் கலவரத்தில், 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்பதை, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் லோக்சபாவில் தெரிவித்தார். குஜராத்தில் கலவரத்தை ஒட்டி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான, 126 பேரில், 77 பேர் இந்துக்கள் என்பதை, தேசிய சிறுபான்மை மனித உரிமை தலைவர், ஜான் ஜோசப் தெரிவித்தார்......இந்த தகவல்கள் தரும் செய்தி என்ன? மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதே ஆகும்.......பா.ஜ.க. வை எதிர்ப்பது சிலரின் விருப்பம்......ஆனால், அந்த விருப்பத்துக்கு தவறான காரணங்களை சுட்டிக் காட்ட வேண்டாம் என்பதே என்னைப் போன்ற பலரின் எதிர்பார்ப்பு...

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  மிக மிக சிறந்த கட்டுரை.....எழுதிய அன்பருக்கும், பிரசுரித்த தினமலருக்கும் மனமார்ந்த நன்றிகள்.....

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  மோடி விஷயத்தில் அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை....ஆனால் அமெரிக்காவை பற்றி அவர் கூறியது பாதி கூட உண்மையல்ல....இப்போதும் ஈரான், சிரியா,ஆப்கன்,ஈராக் ,எகிப்து போன்ற நாடுகள் சர்வாதிகார போக்குடன் தான் நடந்து கொள்கின்றன...ஈரான் ஈராக் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சண்டையிட்டு கொண்டன ...மியான்மாரும் அதுக்கு விதி விலக்கல்ல... ஜனநாயகம் நசுக்கப்பட்டு சர்வாதிகாரம் நிலைத்து உள்ளது...அதனால் தான் ஒரு பெண் தலைவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வீட்டு காவலில் வைத்தனர்...உலகப்போரில் அவ்வளவு பாதிப்புக்கு உள்ளான பின்பும் அதிலிருந்து பாடம் கற்று கொண்டு முன்னேறாமல் இன்னமும் அப்படியே உள்ளனர்...பிலிப்பைன்ஸ்சில் இன்னும் அபுசயா என்கிற இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்கிறது... இவர்கள் கூற்றுப்படி எண்ணெய் வளம் இல்லாத நாடுகளான லிபியா ,ஆப்கன் மீது அமெரிக்கா எதற்கு தாக்குதல் நடத்த வேண்டும்???? காரணம் தீவிரவாதம் மற்றும் நிலையற்ற ஆட்சி...அதனால் ஏற்படும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள்...அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் உலகமே தீவிரவாதத்தின் கீழ் இருந்திருக்கும்...

 • Ambedkumar - Chennai,இந்தியா

  மோடி இளைஞர்களை ஊக்குவிப்பது இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது என்பதற்காக அல்ல இளைஞர்களின் துணையோடு பெருவாரியான நன்மைகளை நாட்டில் விளைவிக்க முடியும் என்பதற்கே தற்போதய பிரதமரை எத்தனை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள்?

 • Thangairaja - tcmtnland,இந்தியா

  மந்திரத்தால் காய்க்கும் மாங்காய் சுவைக்கு உதவாது.

 • Meto Enjoy - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரசின் மேல் கொண்ட அதிருப்தியில் தான் சிலர் இங்கு பி.ஜெ.பிக்கு ஆதரவாக கருத்து எழுதுகின்றனர். ஆனால் அவர்களுக்கே நன்கு தெரியும், இவர்கள் மதவெறி பிடித்த மிருகங்கள். இவர்களிடம் நாடு போனால் சுடுகாடுதான் என்பது. குறைந்தபட்சம் இதனை போன்ற நிகழ்வுகள் அந்த ஒரு சில நபர்களையும் சிந்திக்க வைக்கும். இறுதியில், தேர்தல் அன்று, இவர்கள் முன் நிற்கும் கேள்வி, கொலைகாரனை ஆதரிப்பதா? அல்லது கொல்லைகாரனை ஆதரிப்பதா? என்பதே. எந்த ஒரு சராசரி அறிவுடைய மனிதனும், தெளிவாக சொல்வான், திருடிவிட்டாவது போ, ஏனெனில், அவனை அரவழில் திருத்துவதற்கு நிறைய வழி உள்ளது. ஆனால், கொலை செய்துவிட்டால், அத்தனையும் அங்கு செத்து விடுகிறது. பி.ஜெ.பி யை அவர்கள் சுதந்திரமாக செயல்படும் கட்சியாக பார்க்காமல், அது ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் தூண்டுதலில் செயல்படுவதையும் நன்கு உணர்வார்கள். காங்கிரஸ் சோனியாவின் பிடியில் மன்மோகன் பொம்மை ஆட்சி நடக்குது என்பதில் வேற்று கருத்து இல்லை. ஆனால் பி.ஜெ.பி. இதிலும் விளக்கு இல்லை. காங்கிரஸ், சோனியா என்ற மிதவாதியின் கையில் உள்ளது. ஆனால், பி.ஜெ.பி. ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாதியின் கையில் உள்ளது. இதிலும் ஒரு சராசரி அறிவுடைய மனிதனும், தெளிவாக சொல்வான், எது சரி என்று. ஆதலால், இன்று உள்ள நிலையில், மக்கள் நிம்மதியாக வாழ, காங்கிரசை ஆதரிப்பது தான் சரி. காங்கிரஸ் ஊழல் செய்ததில் மாற்று கருத்து இல்லை. பிடிக்காதவர்கள், மூன்றாவது அணியை ஆதரிக்கலாம். ஆனால் பி.ஜெ.பி என்றும் ஒரு மாற்று அரசியல் கட்சியாக, மிதவாதத்தை விரும்பும் காந்திய மண்ணில் பிறந்த நாம், ஏற்கமுடியாது. அதனை ஆதரிப்பது என்பது, காந்தியை கொன்ற கோட்சேவை நாம் ஆதரிப்பதாக ஆகும். அவர்கள் அவனின் வழியில் வந்தவர்கள் என்பதும் அனைவரும் அறிந்த தெளிவான ஒன்று. தேச தந்தையை கொன்றவனின் பின் நிற்கும் அளவுக்கு அறிவிலிகள் அல்ல இந்த தமிழன், இந்தியன் என்பதை நிரூபிப்போம்.

 • தமிழ் சிங்கம் - chennai,இந்தியா

  மோடியை விட சிறப்பாக பீகார் மாநிலத்தில் நிதிஷ் செயல்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கலைஞர் செயல்பட்டுள்ளார். ஒரு மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டதிர்காகவெல்லாம் பிரதமர் பதவி கொடுக்க முடியாது. அதற்கு இந்திய அளவில் செல்வாக்கு பெற வேண்டும். அந்த செல்வாக்கு, ராகுல் மற்றும் சோனியாவிற்கு உள்ளது. அவர்கள் விருப்பட்டால், ஒரு நாய் குட்டியை கூட இந்தியாவின் பிரதமர் ஆக்க முடியும். அதுதான் நம்பிக்கை. நேரு குடும்பத்தின் மீது இந்தியர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதைபோன்று அவர்களும் நாட்டிற்கு பல நன்மைகள் செய்து எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். சோனியா இத்தாலிக்கு சென்று மிகவும் சௌரியமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவில், இந்தியாவின் மருமகளாக வந்துவிட்டோம் என்ற கட்டாயத்தில் இந்தியர்களுக்காக எளிமையாக வாழ்ந்துவருகிறார். அதை மக்கள் பார்த்து, நேரு குடும்பத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

 • NavaMayam - New Delhi,இந்தியா

  இளைங்கர்களை மோடி என் குறி வைக்கிறார் ...அவர்களின் பழைய கால நிலை தெரியாததுதான்....1990 க்கு முன் இறந்த நிலை அவர்களுக்கு தெரியாது என்று ஏமாற்றத்தான் ....90 ஆம் ஆண்டுகளில் இருந்த ஏழ்மை நிலை , வியால்வாசி குறைந்திருந்தாலும் நல்ல உணவு வாங்க முடியாத நிலை , வேலை இல்லா திண்டாட்டம் முதலியவைகளை பற்றி அவர்க்ஜளுக்கு தெரியாது....அதை வைத்து அவர்களை ஏமாற்றத்தான் ...மோடியின் வளர்ச்சி உண்மையான வளர்ச்சியா என்பதை அமிர்த சென் போன்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள் ஆதரிக்க வில்லை ... அந்த மாநில கடன் இரண்டு மடங்காக 172000 கோடியாக உயர்ந்துள்ளது ... உண்மையான வளர்ச்சி என்றால் தொழில்கள் வளர்த்து அதனால் அரசுக்கு வருமானம் கூடி , அதை வைத்து அந்த அரசு செய்யும் வளர்ச்சி திட்டங்கள் தான் உண்மையான வளர்ச்சி.... விவயிகள் நிலத்தை புடுங்கி தடாவுக்கும் அதோநிக்கும் நிலங்களை ஈன விலைக்கு கொடுத்து , டாட்டா கார் கம்பெனிக்கு 33000 கோடிக்கு சலுகை கொடுத்து தொழில் தொடங்க செய்வது வளர்ச்சி இல்லை ...தமிழகத்தில் கலைஞர் அவ்வளவு சலுகைகள் கொடுக்காமலேயே பல் பன்னாட்டு கார் கம்பெனிகளை உருவாக்கக வைத்து அந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிக கார் உற்பத்தி மாநில மாக மாற்றினாரே அதுதான் வளர்ச்சி... , அதனால் தமிழகே அரசு வருமானத்தை கூட்டி , அதனால் பல பாலங்களை கட்டினாரே அதுதான் உண்மையான வளர்ச்சி ..

 • NavaMayam - New Delhi,இந்தியா

  சரியாக சொன்னீர்கள் மோடி ஒரு மந்திரம்தான் .....ஆனால் மந்திரத்தில் மாங்காய் முளைக்காது....

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  மோடியின் வருகை உள்நாட்டில் உள்ளோரை விட..அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கிலியை கொடுத்துவிட்டது. ராகுல் போன்றோரை விட மோடி பல்லாயிரம் மடங்கு மேல். மோடி மீதான தாக்குதலை தொடர்ந்து மத சாயம் கொண்டு வீழ்த்திவிடலாம் என்று காங்கிரஸ் தப்புகணக்கு போட்டு தவிக்கின்றது. காங்கிரஸ் செய்த ஊழல்கள்..பிரமிக்க வைத்துவிட்டன. அன்னிய சக்திகளின் கொட்டம் வருகின்ற தேர்தல் முடிவுகளோடு ஓய்ந்து ஒழிந்துவிடும்..ஆனால் பா ஜ கவின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களின் ஓட்டுவங்கியால் பல மடங்கு பல மாநிலங்களில் உயர மோடியின் வருகையே காரணம். அணைத்து மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை இதுவரை நாட்டில் மோடி போல பெற்றதில்லை..பெறப்போவதுமில்லை..அத்தகைய சூழலே இப்போதைக்கு இந்தியாவில் காணப்படுகின்றது. சர்தார் வல்லபபாய் படேல் போன்ற இரும்பு மனிதரை எனது காலத்தில் கண்டதில்லை..இதோ இப்போது இந்தியாவில் மீண்டும் அதே இரும்பு மனிதராக குஜராத் சிம்மம் மோடி..நாட்டு நலன் கருதுவோர்..நிச்சயம் மோடிக்கே ஆதரவினை தருவார்கள்..நமது மக்கள் நாட்டு நலன் கருதுவோர்தான்..சந்தேகமில்லாமல் மோடியே வெற்றிபெறுவார்..காங்கிரசை அழித்த பெருமையை மோடி காலமெல்லாம் போற்றப்படுவார்..

 • Bharathan - சென்னை ,இந்தியா

  இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்ல..தினம் தினம் ஏறும் விலைவாசி..அதுக்கு மேல் முட்டாள்தனமான அரசு திட்டங்களால் வரிசுமை,கடன் அதிக்கரிப்பு,சுற்றி உதைக்கும் நாடுகள்,குடும்ப கொள்ளை அடிக்க கொள்கைகளை வகுத்து செயல் படும் காங்கிரசால் நிர்வாகம் ஸ்தம்பித்து ,வங்கிகள் திவாலாகி வெளிநாடுகள் போல் ஒரு உள்நாட்டு கலவரம் உருவாகாமல் இருந்தால் சரி ..இன்னும் சில "அரபியாக்காரர்கள்" பிஜேபி' மதவாத கட்சி ' 2002 கலவரம் என்று கூறுவது அவர்கள் அறியாமையை காட்டுகிறது ..இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையோ,வாழும் நாட்டை நேசிக்க வில்லையோ என்று யோசிக்க வைக்கிறது .அவர்கள் அவர்களையே தனிமை படுத்தி கொள்கிறார்கள் ..இன்னும் சொல்லப்போனால் காங்கரஸ் ஆட்சியில் தான் அதிக கலவரங்கள் ஏற்பட்டுள்ளன ..இன்னும் ஏன் எந்த காரணமும் இல்லாமல் அவர்கள் குதிரைக்கு கண்ணை கட்டி விட்ட மாதிரி ஒரே பல்லவியை பாடுகிறார்கள் என்று தெரியவில்லை ..இன்றைய தேதியில் அசாமில்,உபியில் நடந்தது பற்றி வாயே திறக்க மாட்டார்கள் ..எதிர்ப்பதற்கு ஒரு காரணம் வேண்டும் .பிஜேபி ஆளும் மற்ற மாநிலங்களில் எங்கும் இந்த மாதிரி சிறும்பான்மையினர் யாரும் குறைகள் கூறவில்லை..கோவாவில் கிறிஸ்துவ கத்தோலிக்க அதிகம் உள்ள மக்களே ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள்...பத்து வருடங்கள் முன்னால் நடந்த ஒரு துரதிர்ஷ்டமான எதிர்வினைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா ?..ஹிந்துக்கள் பலரும் சேர்ந்து தான் இறந்தார்கள் ..ஆனால் யாரும் ஒரு ஹிந்து இறந்தான் என்று யாரும் கண்டனம் சொல்லவில்லை( பிஜேபி யை தவிர மற்ற கட்சிகளுக்கு சிறும்பான்மை வோட்டு போய் விடும் என்பதால் சொல்லவில்லை) ஒரு மனிதன் கொல்லப்பட்டான் என்றே வருத்தம் அடைத்தார்கள் ...ஹிந்துக்களில் ஒற்றுமை குறைவால்,போலி மதசார்பின்மையால்,மலைக்க வைக்கும் ஊழலால்,தொழில்,விவசாயம் முடக்கத்தால்,தொலைநோக்குதிறன் இல்லாத நிர்வாக கேட்டால்,சட்ட ஒழுங்கு இல்லாமையால் இன்று பாரதம் தடுமாறிக்கொண்டு இருக்கிறது..உங்களின் உங்கள் பிள்ளைகளின் பேரன்களின் எதிர்காலத்திற்க்காக வாக்களியுங்கள் பிஜேபிக்கு .அதன் 'உதய சூரியனுக்கு' மோடிக்கு....(அயய்யோ உதய சூரியன்ன்னு சொல்லிட்டேனே ....மஞ்ச துண்டார் வேற பிஜேபி யோட கூட்டணிக்கு கருத்து கணிப்பு செய்யறாராம் ...உண்மையா இருக்குமோ? ...உடன்பிறப்புகள் இந்த வார்த்தையை கடன் தருவார்களா ?.....) உலகம் வியக்க ஒரு ''விராட ஹிந்துஸ்தானம்'' உருவாக்குவோம் ..வந்தேமாதரம் ..பாரதமாதா கி ஜெய்

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ

  உத்ரகண்டில் கனமழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக காத்துகொண்டிருக்க, மக்களை பற்றி கவலை படாமல், ராகுல் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர காத்திருந்தவர்களை விட, மோடி எவ்வளவோ மேல்..

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ

  உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற கலவரங்களை பார்வையிட சென்ற அகிலேஷ் யாதவ் மற்றும் ஆசாம் கானிற்கு எதிராக தான், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோசங்கள் எளுபினார்களே தவிர, பா.ஜா கட்சியினருக்கு எதிராக யாரும் கோஷம் எழுப்பவில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில், கூடவே இருந்து குழி பறிப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ

  தற்பொழுது சிரியாவில் நடைபெறும் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இரு பிரிவினருக்கு ஆயுதங்களை வாங்கி கொடுத்து, ஆதரவளிக்கும் ஈரான் மற்றும் சவுதியை குற்றம் சொல்ல யாருக்கும் மனமில்லை. மோடியை எதிர்பவர்கள், அதை ஒரு பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்கள்.

 • TamilArasan - Nellai,இந்தியா

  அருமையான பதிவு...நாட்டிற்கு தேவை ஒரு நேர்மையான தலைவர் அது திரு. மோடியே...

 • Prakash Muthusamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அருமை... இஸ்லாமிய நண்பர்களுக்கு என் பணிவான வேண்டுகோள், உங்களோடு சேர்ந்து நாங்களும் (இந்துக்கள்) மத ஒற்றுமைக்காக மட்டுமே காங்கிரெஸ் கட்சிக்கு ஓட்டளித்து நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டோம் .... இனியாவது நம் நாடு வளம் பெற எங்களோடு இணைந்து மாற்றத்திற்கு துணை வாருங்கள் ... கண்டிப்பாக நம் நாடு வளம் பெற்றால் தான் நம் வருங்கால சந்ததிகள் சுதந்திரமாக வாழ முடியும்... இல்லை என்றால் நாம் நம் நாட்டை மீண்டும் அந்நிய நாட்டுக்கு அடகு வைத்த பாவத்தை அல்லாவும், கிருஷ்ணாவும், ஏசுவும், நம் சந்ததிகளும், காந்தி அடிகளும், ஜின்னா அவர்களும் என்றென்றும் மன்னிக்க மாட்டார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement