Advertisement

தேவை ஒழுக்கமும், கட்டுப்பாடும்: உரத்த சிந்தனை, மு.இளங்கோவன்

இன்றைய இளைஞர்களிடையே, ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவர்கள் தான், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இன்று ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தராமல், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டால், எதிர்கால இந்தியாவின் நிலை, கேள்விக்குறியாகி விடும். இதை சரிப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இன்றைய சீரழிவுக்கு காரணம், மேற்கத்திய கலாசாரத் தாக்கம் தான். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய நாடுகளைக் கைகாட்டும் நாம், அவர்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளலாமே?பயனுள்ள ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், மாணவர்களுக்கு, நல்ல ஒழுக்கம் ஏற்படுகிறது. வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் தரப்படும் பயிற்சியின் பலனை, அவர்கள் உணர வாய்ப்பு ஏற்படுகிறது. தேசிய பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் காலத்தில், மாணவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு உரிய சேவையை ஆற்றுவதற்காக தயார் செய்வதே, பல்கலைக்கழக மட்டத்தில், இந்த ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதன் நோக்கம். இந்த பயிற்சியின் மூலம், மாணவர்களிடையே சுய கட்டுப்பாடு, தலைமைப் பண்பு, ஆரோக்கியமான போட்டி, சமுதாய சேவை உணர்வு ஆகியவை ஏற்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், கட்டாய ராணுவ பயிற்சி நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 18 வயது முதல், 25 வயது வரையான அனைத்து ஆண்களும், குறிப்பிட்ட காலத்திற்கு ராணுவ பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அரசுத் துறையில், நிர்வாக பணிகளில் சேர, இந்த ராணுவ பயிற்சி கட்டாயம். இத்தகைய ராணுவப் பயிற்சி பெறாதவர்களுக்கு, அரசு வழங்கும் கல்விக் கடன், நிதி உதவி போன்றவை கிடைக்காது. ராணுவ பயிற்சிபெற பதிவு செய்யாதவர்களுக்கு, அமெரிக்காவில் உள்ள பல மாகாண அரசுகளும் கூடுதல் தண்டனை வழங்குகின்றன. ஊர்தி ஓட்டுனர் அனுமதி பெறுவதற்கும், இந்த ராணுவ பயிற்சி அவசியம் என்று, பல மாகாணங்களில் சட்டம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்த நடைமுறையை, பல ஐரோப்பிய நாடுகள் பின்பற்றி வருகின்றன.

சீனாவில், தேசிய, "சியாவோ டுங்' பல்கலைக்கழகத்தில், கட்டாய ராணுவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நவீன ராணுவ அறிவியல் குறித்து, அனைத்து இளைஞர்களும் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும் என்று, சீனா விரும்புகிறது. இந்த பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், முறையான ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். சீனாவின் தற்போதைய திட்டப்படி, 18 முதல், 22 வயது வரையான இளைஞர்களுக்கு, 24 மாத கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், ஏற்கனவே கிராமப்புற இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறது. தற்போது, பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனியில், தற்போது மாணவர்களுக்கு, கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், கட்டாய ராணுவ பயிற்சிக்குப் பதில், கட்டாய சமுதாய சேவை திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து, ஜெர்மன் அரசியல்வாதிகள் சிந்தித்து வருகின்றனர்

இந்த கட்டாய சமுதாய சேவை பயிற்சி, ஒன்பது மாதம் அளிக்கப்படும். ஆண்டுதோறும், 90 ஆயிரம் பேர், இந்த பயிற்சியில் சேர்க்கப்படுவர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும், முதியவர்களுக்கு உதவி செய்தல், முதியவர்களுக்கு பேப்பர் படித்து காட்டுதல், முதியவர்களுக்கான அலுவலக பணிகளைப் பார்த்தல் போன்றவை, இந்த கட்டாய சமுதாய சேவைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டில், கட்டாய ராணுவ கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ளது. பள்ளி மட்டத்திலேயே ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு, மக்கள் ராணுவ பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. உடல் ரீதியாக அல்லது மருத்துவ ரீதியாக, ராணுவ பயிற்சி பெறத் தகுதி இல்லாத மாணவர் அல்லது மாணவியருக்கு, அவர்களுடைய உடல் நிலைக்கேற்ப, இதர பயிற்சிகள் தரப்படுகின்றன. மதத்தைக் காரணம் காட்டி இந்த பயிற்சியிலிருந்து தப்பிக்க முடியாது. ராணுவ பயிற்சி பெறாத மாணவர்கள் பட்டம் பெற இயலாது.

இந்தியாவில் தற்போது, தேசிய மாணவர் படை என்ற அமைப்பு உள்ளது. இது பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. 1917லேயே இதற்கான சட்டம் இயற்றப்பட்ட போதும், 1948 ஜூலை 15ல் தான், இது நடைமுறைக்கு வந்தது. இதில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என்ற, மூன்று பிரிவுகள் உள்ளன. தேசிய மாணவர் படையின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இதற்கான பாடத்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஜூனியர் டிவிஷன், 13 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சீனியர் டிவிஷன், பிளஸ் 1 முதல், 26 வயது வரையான கல்லூரி மாணவர்கள் என, இரு பிரிவுகள் உள்ளன. ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளும், சீனியர் டிவிஷன் பிரிவு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், இதில் சேர்ந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இதை மாற்ற வேண்டும். தேசிய மாணவர் படையில், உடல் தகுதி உள்ள அனைத்து மாணவர்களும் சேர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மாணவ பருவத்திலேயே இதைக் கட்டாயம் ஆக்குவதன் மூலம், அவர்களிடையே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்த முடியும். இத்தகைய ராணுவ பயிற்சியால், இளைஞர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்படுகிறது; நாட்டுப்பற்று அதிகரிக்கிறது. மொழி, மதம், ஜாதி பாகுபாடுகள் நீக்கப்படுகின்றன. சேவை மனப்பான்மை உருவாகிறது. எதிர்கால இந்தியாவைச் சிறந்த முறையில் உருவாக்குபவர்களாக அவர்களைத் தயார் செய்ய முடியும்.

நமது தேசிய இளைஞர் கொள்கைப்படி, கல்வி பயிலும் இளைஞர்கள், தமது படிப்பு காலத்தில், ஐந்தில் ஒரு பங்கு நேரத்தை வெளிப்புற நடவடிக்கைகளில் செலவழிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து மேற்பட்டப் படிப்பு மாணவர்களும் குறைந்தது, ஒரு வார கால ராணுவ பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும் என்று, சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கென, ராஜஸ்தான் மாநிலம், மானேசரில், ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வருகிறது. இதன் மூலம் மேற்பட்டப் படிப்பு மாணவர்கள், இயற்கை சூழலில் வாழவும், தேசிய இளைஞர் கொள்கையில் கூறப்பட்டுள்ளவற்றை அறிந்து கொள்ளவும், பழக வாய்ப்பு ஏற்படுகிறது. மாணவர்களிடையே தோழமை உணர்வையும், சகோதர பரிவையும் ஏற்படுத்துதல் ராணுவத்தின் பணி. அவர்களுடைய செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளவும், இணக்கமான, மாசற்ற சுற்றுச் சூழலில் சாதனைகள் நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுகிறது. பேரழிவு நிர்வாகம், அணு ஆயுத, ரசாயன மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல் தொடர்பான, விழப்புணர்வு மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், குழு நடவடிக்கை மற்றும் குழு விவாதத்தில் பங்கேற்றல், உடல் ஆரோக்கியம் மற்றும் தகுதிகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வைத்தல் என, இந்த பயிற்சிக்குப் பிறகு, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ராணுவத்தில் பதவி வழங்கப்பட்டு, அவர்களுடைய தலைமைப் பண்பு மேம்பட உதவி செய்யப்படும். எனவே, இன்றைய இளைஞர்கள் நல்வழிப்பட, மாணவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அவசியம். கல்வி கொள்கையை வகுப்பவர்கள், சிந்திப்பரா?

இ-மெயில்: ilangodinamalar.in

மு.இளங்கோவன், மூத்த பத்திரிகையாளர்
Advertisement
 

வாசகர் கருத்து (24)

  • suguna devadas - Coimbatore,இந்தியா

    I read your article in dinamalar , published on 8-9-2013. " Discipline and self control" An excellent article and it was rightly said. Suguna P Assistant Professor of Mathematics Government Arts College (Autonomous) Coimbatore - 18 9842463461

  • ganesh chander - Coimbatore,இந்தியா

    Greetings 'Thevai Ozhukkamum Kattupadum' is good article My reflections a. all physically eligible students will be covered in NCC by making it compulsory b. discipline as remedy to present day youth's instability is really a finding of all responsible citizens c. In present day education tem, value education is part of curriculum. NCC, NSS, scout all such other activities have good story. But bad screen play. they are not presented to youth in a manner receivable by them. these youth lack maturity to take the story at its core and follow it. they search for colourful outer wrapper. d. planners should invite the students as planning commitee members while planning for them.

  • JAY JAY - CHENNAI,இந்தியா

    அய்யா உங்கள் நடுநிலையான கட்டுரை நன்றாக உள்ளது....சீனாவையும், அமெரிக்காவையும் உதாரணமாக எடுத்துகொண்டு ராணுவ பயிற்சி பற்றி கூறும் ,உங்கள் கருத்து அலாதியானது...., மேற்கத்திய கலாசாரதினாலேயே இந்திய மாணவர்கள் ஒழுக்ககேடாக உள்ளனர் என்றும் சிலர் கூறுவதை , எப்படி ஏற்று கொள்வது? .. மேற்கத்திய கலாசாரத்தால் நாம் சீரழியவில்லை என்பது தான் எனது எண்ணம்...நமது இந்திய கலாசாரமே இன்னும் நல்லதாக இல்லை... உதாரணங்கள்... 1. பெரியவர்களை பெரிசு என்று தான் கூறுகிறார்கள்.. வா போ என்று தான் அழைக்கிறார்கள்... 2. சென்னையில் ஒரு பாஷை உள்ள்ளது..அந்த மூன்றெழுத்து மந்திரம் எங்கு சென்றாலும் ஒலிக்கிறது...பிகார் காரன் கூட சென்னை வந்தால் முதலில் கற்று கொள்ளும் வார்த்தை அது தான்... தாயை பழிக்கும் அந்த சொல்லை கற்று கொடுத்தது மேற்கத்திய கலாசாரமா?.. 3. சமீபத்தில் நடக்கும் gang rape கள்..நம்மவர்களாக செயல்படுத்துவது தானே... ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் மேற்கத்திய நாடுகளில் அந்த பெண்ணை ,sex worker என்றாலும் தொட முடியாது...4. வெளிநாட்டில் ஒரு கல்யாணம் பிடிக்கவில்லைஎன்றால் divorce வாங்காமல் அடுத்த கல்யாணம் பண்ணமுடியாது.... ஆனால் நம் நாட்டில் காலை ஒரு மனைவி வீட்டில் சிற்றுண்டி... மதியம் இன்னொரு மனைவி வீட்டில் full meals .. 5. வெளிநாட்டு காரன் குப்பையை ரோட்டில் போடமாட்டான்... ஆனால் நாம் ரோட்டில் அல்லவா போடுகிறோம்... 6. எந்த மேற்கத்திய நாடுகளிலாவது திறந்த வெளி கக்கூசை பார்த்துள்ளோமா? ? ஆனால் நம் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் திறந்த வெளி கக்கூசை பார்க்க முடிகிறது..... 7. திரைப்படத்தில் தலைவனை தேடும் அவலம் வெளிநாட்டில் உள்ளதா? கட் அவுட் வெளிநாட்டில் உள்ளதா? கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் வெளிநாட்டில் உள்ளதா? 8. மேற்கத்திய நாடுகளிலும் சினிமாக்களில் நம்பத்தகாத செயல்களை HERO செய்வது போல காட்டுவார்கள்... ஆனால் அதனை செய்துவிட்டு, 50 கோடி அமெரிக்கனுக்கும் நான் தான் தலைவனடா .. என்று நடுரோட்டில் நின்னு , கவர்ச்சி நடிகைகளோடு குத்தாட்டம் போடுவதை பார்த்துள்ளோமா ? 9. போராட்டம் என்றால் ரயில் மறிப்பு... பஸ் எரிப்பு, தீக்குளிப்பு, கண்ணாடிகளை உடைப்பது.... - இவற்றையெல்லாம் மேற்கத்திய நாடுகளா நமக்கு கற்று கொடுத்தன.... ? ...10 பஸ்ஸின் கூரை மீது ஏறி நின்று நடனமாடும் மாணவர்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்தா அதனை நம்மவர்கள் கற்றார்கள்? ...அய்யா உங்களில் கட்டுரையில் கட்டாயம் NCC யில் சேர வேண்டும் என்று கூறியுள்ளது நல்ல யோசனை... அது மட்டும் போதாது.... 1 . சாராயத்தை ஒழிக்க வேண்டும்... 2. திறந்த வெளி கக்கூசை ஒழிக்க வேண்டும்... 3. ரோட்டில் குப்பை கொட்டுகிரவனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்... 4.சினிமாவில் தலைவனை தேடும் அவலத்தை ஒழிக்க வேண்டும்... 5 பஸ் டே யை ஒழிக்க வேண்டும்... 6. போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை [ அப்படி ஓன்று இருந்தால் ] அதனை பறிமுதல் செய்யவேண்டும்.... 7. எல்லாவற்றிற்கும் மேலாக மதம் சாராத ஒழுக்க பாடம் அனைத்து கல்வி சாலையிலும் தேவை... 8 அதுபோக நீங்கள் சொல்வது போல கட்டாய ராணுவ பயிற்சி , அல்லது NCC அல்லது முதியோர் இல்லத்தில் கட்டாய வேலை போன்றவற்றை கூட மதம்/ மொழி / இனம் சாராது அமுல்படுத்தலாம்... 9 எல்லாவற்றிற்கும் மேலாக சாதி யை ஒழிக்கலாமே... வெளிநாட்டில் இனம் தான் உள்ளது..அனால் நம் நாட்டில் 1000 சாதிகள் உள்ளனவே... 10. சாதி ஒழியாவிட்டால் மேற்கூறிய எதுவுமே / எந்த முன்னேற்றமுமே ஏழு ஜென்மம் எடுத்தாலும்.. இந்தியாவில் சாத்தியம் இல்லை...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    காலம் கலி காலம் இப்படித்தான் நடக்கும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .

  • r.sundararaman - tiruchi,இந்தியா

    மிக நல்ல கட்டுரை மிகவும் பயனுள்ளது .சீனப்போருக்குப்பின் அன்றையகாலகட்டத்தில் இரண்டு வருட தேசிய மாணவர் படையில் பயிற்சியில் சேர்வது கட்டாயமாக இருந்தது .பின்பு படிப்படியாக தேசிய சேவை அமைப்பில் சேரலாம் ஆனால் கட்டாயம் இல்லை என்பது வந்தது .இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது .எந்த நெருக்கடியையும் சமாளிக்கவும் ஆபத்துக்காலத்தில் உதவிடவும் பயிற்சி மிக அவசியம் .இளைங்கர்களுக்கு பொறுப்புணர்வும் தேசப்பற்றும் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும் மிக அவசியம் அதற்க்கு தேசிய மாணவர் படை ,ஊர்க்காவல் படை மற்றும் ரிசர்வ் படையும் அவசரரகால மீட்ப்பு பணிக்கும் தயார் நிலையில் மாணவர்கள் இளைஞர்கள் தயாராகவேண்டும் .

  • vinoth kumar - Bangalore,இந்தியா

    This Week I had read that your article ,, I am really impressive that information ... Thank You ilango sir ,,,, vinoth kumar.G Bangalore.

  • Sathiyaseelan.D - Coimbatore,இந்தியா

    Have a good day. I am Sathyaseelan from Coimbatore. I am graduate engineer, working in a private manufacturing company. I have gone through your article under title of "Urathaa Sinthanai" in Dinamalar daily news paper dated 08-09-2013. Its great and dimely message to the people and government. Central and State governments have to implement this with immediate effect., otherwise future India will not be inline with dicipline. No one is bothering about rules in traffic and violating to their maximum possible . No one is asking. Not bothering about others. Educated and uneducated also in same way... Totally dicipline is missing.... Sathiyaseelan.D Coimbatore Mobile Phone +91 75981 99085

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    சிறைக்கு செல்பவர்களும், சென்றவர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்று வந்த பிறகு நம் நாட்டிற்கு வேறு என்ன வேண்டும்? மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் வந்தே மாதரம்.

  • villupuram jeevithan - villupuram,இந்தியா

    முன் உதாரணமாக இருக்க வேண்டிய பெரியவர்களிடம் இந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாததால் தான் இன்றைய இளைஞர்களின் நிலைக்கு காரணம். எனவே அவர்களை சொல்லி பயனில்லை.

  • Ramki - Madurai,இந்தியா

    I read your article in today's dinamalar. Your article has emphasised the need of the training in NCC at school and college level for students without any ambiguity. I had, in the early1960s, training in scout and ACC in school days and followed by NCC in college days. It had helped me to understand the term PATRIOTISM more than anything. The love for nation, leadership quality, social commitments and above all improves physical and mental health would improve a lot with the training. Please accept my greetings for your article. K.S.RAMAKRISHNAN

  • Arun Grekar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Greetings I'm Arun, 27yrs old, from Chennai, working in Dubai. I just went through your article in dinamalar and found it very true and revealing. We give very less importance to physical exercise and doing sports is not cultivated from childwood in many of our families. The more these kinda articles reach public, the more will be the awakening. Please keep writing such articles and touch upon other streams where we lack as well. My wishes to you Sir. Thank you Regards, Arun

  • K.Jayakumar - Chennai,இந்தியா

    We should discuss in the visual media and strengthen value with large group thus we could bring the change in right the direction. K.JAYAKKUMAR. Teacher

  • JALRA JAYRAMAN - chennai,இந்தியா

    எல்லை மீறுவது, சட்டத்தை மீறுவது என்பது மனித இயல்பு இதை தவிர்க்க தவறுக்கு தண்டனை என்பது தான் சரி. திரைப்படம், சின்ன திரை போன்றவைகள் தவறை தவறே இல்லை என்று உரு ஏற்றுகின்றன இதனால் தவறு செய்பவர் சதவிகிதம் அதிகமாகிறது இந்த நிலையில் கட்டுரையாளர் கூறுவது சாத்தியமா?

  • Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்

    ஒழுக்கமும், கட்டுப்படும் தேவை என்பதற்காக ராணுவ பயிற்சி தேவை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. மேலை நாடுகள் இன்னமும் நமது இந்தியாவை நோக்கி வருவதற்கு காரணம் இங்குள்ள கலாசாரமே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.. நல்லமன நிலையுடன் வளரும் இளைஞர்களை ராணுவ பயிற்சி என்ற போர்வையில் அடிமையாய்,கைதிபோல் நடத்தி உடலாலும் உள்ளத்தாலும் நோகடித்து வெறுப்பேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. மக்கள் தொகை குறைவாக உள்ள நாட்டில் இதனை கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.. மன நலம் பாதித்த இளைஞர்களால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாது.. ராணுவ பயிற்சி என்பது படையில் சேருபவர்களுக்கு மட்டும் போதுமானது.. ஒழுக்கமும், கட்டுப்பாடும் நல்ல பெற்றோர்களால் மட்டுமே போதிக்க முடியும்..

  • Thangairaja - tcmtnland,இந்தியா

    தனி மனித துதியும் தனி மனித விரோதமும் இன்றைய இளைஞர்களிடம் மிகைத்து காணப்படுகிறது. வாழ்வியலின் யதார்த்தத்திற்கு மாறான இந்த போக்கால் சமநிலை செயல்பாடும் அக்கறையுள்ள சமூக சிந்தனையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இது எதிர்கால சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கலாம்.

  • Sathiyan Jesudass - Doha,கத்தார்

    கூட்டு குடும்பத்த அழிச்சாச்சு...ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் போதிக்கிற கல்வி நிறுவனகளை வியாபாரம் ஆகிருச்சு...கோவில்கள்ல சமூக சமய சொற்பொழிவுகள் இல்லை. தை மொழிக்கல்வி புதசாச்சு...அப்புறம் எங்க நல்ல சமுதயத்த உருவாக்க முடியும்?

  • SURESH SUBBU - Delhi,இந்தியா

    இப்பொழுதுள்ள இளைய சமுதாயத்திற்கு தேவை ... நாட்டு பற்றை அவர்கள் நெஞ்சில் விதைப்பது தான்..இது நம் தேசம்.. நம் தேசத்தை அந்நிய நாட்டினர்ருக்கு கூறு போட்டு விற்கும் வியாபாரிகளிடம் இருந்து நாட்டை எவ்வாறு காக்க வேண்டும் என்று ஒரு முறை உரக்க சொல்லி பாருங்கள்.... அதற்கான வியூகங்களை அவர்களையே வகுக்க சொல்லுங்கள்... ஒவ்வொரு இளைஜனும் ஒரு விவேகானந்தராக, ஒரு நேதாஜியாக மாறு வார்கள்....அவர்களுக்கு நாம் எதுவும் கற்று கொடுக்க வேண்டியதில்லை ஐயா.... அவர்களுக்கு வழிகாட்ட ஒரு வழிகாட்டி இருந்தால் போதும்....Jaihind

  • தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா

    // இத்தகைய ராணுவ பயிற்சியால், இளைஞர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்படுகிறது நாட்டுப்பற்று அதிகரிக்கிறது. // இதுபோன்ற பயிற்சிகளினால் நாட்டுப்பற்று அதிகரிக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் இந்த பயிற்சி முறையில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்படும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நம் நாட்டில் திருமண வயது வரை பெற்றோர்களுடன் வாழ்பவர்கள் பெரும்பாலானோர் ஒழுக்கமாகவும் கட்டுப்பாடுகளுடன் இருக்கின்றனர். இளம் வயதில் (18 வயதில்) குடும்பத்தைப் பிரிந்து பயில்வோர் பலர் சுதந்திரம் என்ற பெயரில் விரைவில் மாறிவிடுகின்றனர். இன்னொன்று, ஐரோப்பாவில் பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த கட்டாய சேவைகளை குறைத்துக்கொண்டு விட்டன. 2 வருட கட்டாய ராணுவ சேவையாக இருந்தது 1 வருடமாகி பிறகு 3 நாட்களாகி இப்போது 1 நாள் சேவையாகி விட்டது. காரணம் செலவு இரண்டாவது இப்போது உள்ள நவீன ஆயுதங்களால் வீரர்களின் தேவை குறைந்து விட்டது. மூன்றாவதாக போர் (ஐரோப்பாக்குள்) மூளும் சாத்தியம் குறைவு. நமது நாட்டில் 18 வயது வரை கட்டாயக் கல்வியை கடை பிடிப்பதும், அந்த கட்டாயக் கல்விக்கு அரசே பொறுப்பு என்ற சட்டத்தை ஏற்படுத்துவதான் ....... ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கல்விமூலம் தெரிந்து தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். (அதுபோல் சரியான அரசியல் வாதிகளையும் அவர்கள் தேர்தெடுப்பார்கள்).

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement