Advertisement

சுரங்கம், எரிபொருள் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சிக்கான மத்திய கல்வி நிறுவனத்தில் பொறியியல் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. Mining/ Mechanical/ Electrical/ Production/ Civil/ Instrumentation/ Electronics/ Chemical/ Environmental Engineering பிரிவில் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்தவர்களும், கேட் தேர்வில் வெற்றி பெற்று அதன் மூலம் மேற்கூறிய படிப்புகளுக்கு இணையான முதுநிலை படிப்புகளை முடித்தவர்களும், இந்த ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2012 தேதியன்று 28 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ ஓ.பி.சி/உடல் ஊனமுற்றவர்களுக்கு, வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ள இந்தப் படிப்புக்கு, ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க http://acsir.res.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க மே 18ம் தேதி இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் www.csio.res.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement