Advertisement

திராவிட இயக்க நூற்றாண்டு விழா: தமிழர்கள் எதிர்ப்பு

திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு, காவிரி வழித்தடங்கள் என, திராவிட இயக்கங்களால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யவே முடியாத நிலையில், மீண்டும் திராவிடன் என்ற போர்வையில் நூற்றாண்டு விழா தேவையா என, தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இன்று முதல், திராவிட இயக்க நூற்றாண்டு விழா துவங்குகிறது எனக் கூறி, அன்று சென்னையில், கருணாநிதி தலைமையில், கட்சி அலுவலகத்தில் விழா எடுப்பதாக தி.மு.க., அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு தமிழர் அமைப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிரிவினையை ஏற்றது ஏன்?
அவர்கள் எழுப்பும் கேள்விகள் இவை தான்:தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் எல்லாம் திராவிட மொழிகள்; அம்மொழி பேசும் மக்கள் திராவிட மக்கள் என்றால், தென்னகத்தில், மொழி வாரி மாநிலங்கள் பிரிவினையை ஏற்றது ஏன்?அப்படி பிரித்தது, மற்ற மொழி பேசும் மக்களின் விருப்பம் என்றால், தெலுங்கு நாடு, கன்னட நாடு, மலையாள நாடு என, மற்ற மாநிலங்கள் பெயர் சூடிக் கொள்ளாத நிலையில், மிச்சமிருந்த சென்னை மாகாணத்துக்கு திராவிட நாடு எனப் பெயர் சூட்டாமல், தமிழ்நாடு என, தி.மு.க., பெயர் சூட்டியது ஏன்? அப்படி என்றால், தமிழக மக்கள், திராவிடர்கள் என்ற தங்கள் கொள்கையை, தி.மு.க.,வே ஏற்கவில்லை என்று தானே பொருள்.

அடைமொழி எதற்கு?
தமிழகத்தைப் போல், ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளாவிலோ திராவிடம் என்ற பெயரால், இயக்கங்கள் தலையெடுக்காத நிலையில், யாரும் தங்களை திராவிடர்கள் எனக் கூறிக் கொள்ளாத நிலையில், தி.க.,வின் வழி வந்த கட்சிகள் மட்டும் இன்னும், திராவிடர் எனும் அடைமொழியை தூக்கி சுமப்பது ஏன்?திராவிடர் என்ற சொல்லை இன்னும் ஒரு சிலர் தாங்கிப் பிடிக்க காரணம் என்னவென்று ஆராய்ந்தால், அதற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கூறிய உதாரணம் பெருமளவு பொருந்துகிறது. "தமிழகத்தில் ஒரு சில பச்சைத் தமிழர்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். கருணாநிதி வம்சாவளியினர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். முதல்வர் ஜெயலலிதா மைசூரில் பிறந்த தமிழர். வைகோ, விஜயகாந்த் இருவரும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர்., கண்டியில் பிறந்த மலையாள மொழி பேசுபவர்' என்ற அவரது கூற்றை ஏற்க வேண்டியுள்ளது.

திருப்பதியை இழந்தோம்
பல்லாயிரம் ஆண்டுகள் முந்தைய தமிழர் என்ற அடையாளத்தை மறந்து, கருணாநிதி கூற்றுப்படியே, நூற்றாண்டுகள் மட்டுமே கண்ட திராவிடர்கள் என்ற சொலவடையை நாம் ஏற்றதால் தான், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, உலக பிரசித்திப் பெற்ற திருப்பதியை இழந்தோம். இன்று, தமிழகத்துக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ள, முல்லை - பெரியாறு பிரச்னைக்கு காரணமான, தேவிகுளம், பீர்மேடு பகுதியை இழந்தோம். கர்நாடகாவில், தமிழர்கள் அதிகம் வசிக்கும், காவிரி வழித்தட பகுதிகளை இழந்தோம். திராவிடர் என்ற உணர்வை அதிகம் ஊட்டி விட்டதால், இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை இழந்தோம். இன்னும் என்ன இழக்க வேண் டும் என இவர்கள், திராவிட நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றனர் என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இது மட்டுமல்லாமல், நாம் திராவிடர்கள் என்றால், முல்லைப் பெரியாறுக்காகவும், காவிரி பிரச்னைக்காகவும், பாலாற்று பிரச்னைக்காகவும், அண்டை மாநிலங்களுடன் சண்டையிடத் தேவையே இல்லையே! அதன் மூலம் பயன் பெறுபவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் தானே என அமைதியாக இருந்து விடலாமே. ஓட்டுக்கு தேவை என்றால் உபயோகப்படுத்தும் தொக்கா தமிழர்கள் என, அவர்கள் வேதனைப்படுகின்றனர்.

மக்கள் மாநாடு கட்சி கடும் கண்டனம்
மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:
இதுவரை தமிழர்களின் அதிகாரத்துக்கு எதிரியாக இருந்த தியாகராய செட்டி, பனகல் அரசர், பொப்பிலி ராஜா, டி.எம்.நாயர் ஆகியோரை முன்னிலைப்படுத்தி, திராவிட இயக்கத்தைப் போற்றி புகழ்ந்து வந்தனர் திராவிட இயக்கத்தினர். 1917ம் ஆண்டு தான், திராவிட இயக்கத்தின் துவக்கம் என்றும், அதற்கு தியாகராய செட்டி தான் காரணம் என்றும் சொல்லி வந்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.தி.மு.க.,வின் இணையதளமும் இதையே உறுதி செய்கிறது. திராவிடத்தின் பெயரால், தமிழர்கள் சந்தித்த, சந்தித்து வரும் தமிழின துரோகச் செயல்களை தமிழர்கள் எண்ணிப் பார்க்க துவங்கிய உடன், புதிதாக, தமிழரான டாக்டர் சி.நடேசனாரை முன்னிலைப்படுத்தி, திராவிட இயக்க நூற்றூண்டு விழாவை அறிவித்துள்ள செயலானது, திராவிடத்துக்கு தமிழ்ச்சாயம் பூசும் சதியாகும்.ஆர்யத்தைக் காட்டி, தமிழர்களின் அதிகாரத்தைப் பறித்த திராவிட நீதிக் கட்சி ஆட்சியில், தமிழர் ஒருமுறை கூட முதலமைச்சராக இல்லை. 1920ம் ஆண்டு, முதல் அமைச்சரவையில், ஒரு தமிழர் கூட அமைச்சராக்கப்படவில்லை. அப்போதிருந்த சென்னை மாகாண தமிழ்ப் பகுதிகள் தெலுங்கு மயமாக்கப்பட்டன.தமிழ்நாடு தமிழருக்கு என்றால், திராவிட நாடு திராவிடருக்கு என்றது, மொழிவாரி பிரிவினையின் போது, தமிழர்களின் நிலப்பகுதிகள் தெலுங்கு, கன்னட, மலையாள மொழியினருக்கு தாரை வார்க்கப்பட வக்காலத்து வாங்கியது.

இப்படி தமிழர்களுக்கு எதிரான, கற்பனையான திராவிடம் மீண்டும் தமிழ் அடையாளத்தை பூசி, தமிழர்களை ஏமாற்றிட புறப்பட்டு வருவதின் அடையாளமாகத்தான் திராவிட நூற்றாண்டை தி.மு.க., - தி.க., அறிவிக்க அதை ம.தி.மு.க., வரவேற்றுள்ளது.ஈழத் தமிழினத்தை கொன்று குவிப்பதற்கு துணையாக இருந்து விட்டு, தொடர்ந்து தமிழ் உணர்வை மங்கச் செய்யும் காரியங்களைச் செய்து, தங்களை தாங்களே தமிழினத் தலைவர் எனக் கூறிக் கொள்ளும், கருணாநிதியும், வீரமணியும் இன்று மீண்டும் திராவிட என்ற போர்வையில், தமிழர்களை அழிக்க புறப்பட்டிருக்கும் இவர்களை தமிழர்கள் ஒரு நாளும் நம்பமாட்டார்கள்.ஆர்யன், பார்ப்பன வட இந்திய பூச்சாண்டிகளை காட்டி ஏமாற்றி, தெலுங்கு கன்னட, மலையாள மொழியினர் திராவிடத்தின் பெயரால், தமிழர்களை ஆதிக்கம் செய்ய வரும் திராவிடத்தை, தமிழர்கள் முற்றிலுமாக தூக்கி எறிவர். ஆர்ய, பார்ப்பனர்களை விட, திராவிடத்தின் பெயரால் தான், தமிழர்கள் அதிக துரோகத்துக்கு ஆளாகியுள்ளனர். மீண்டும், மீண்டும் ஏமாந்து போக தமிழர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல. திராவிடத்தின் முகத்திரை கிழித்து, தமிழர் அடையாளத்தை காக்க தமிழர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் சக்திவேல் கூறியுள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (127)

  • R P - Tambaram,இந்தியா

    வயிதெரிச்சல் பா இவுங்க உண்மைலயே திராவிடனா வேல செஞ்சிருந்தா தமிழ் நாட்ல நாம எல்லாரும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் துளு படிச்சு நம்ம மாநிலத்தை உண்மையிலேயே ஒரு சதன் பவர் செண்டர் ஆகிருக்கலாம். ஆரியர்கள் எப்போவோ வந்து ஐக்கியம் அஹிட்டாங்க. எல்லாரும் ஒன்னு இப்போ. முறைப்படுத்துதல் இல்லாததால நம்ம அறிவு, வேலை எல்லாம் சிதறி போச்சு.கேரளா கர்நாடகா வோட நல்லா தொடர்பை ஏற்படுத்தி தண்ணி பிரச்சினையே இல்லாம பண்ணியிருக்கலாம். நல்லா இருங்கடா அரசியல் வாதிங்களா.

  • babu - tiruchi,இந்தியா

    பதவி இல்லாத காலத்தில் இப்படியும் விழா தான். பதவி இருந்த போது நிர்வாகதில் அக்கறை இல்லாது சினிமா கதை எழுதி விழா. தனக்கு ஆபத்து வரும் போது திராவிடன் இன விழா. இரண்டு ஜி அலை வரிசையில் வரிசையாக் கழண்டு போனது மானம் கப்பல் ஏறியது/ இப்பொது மூச்சு இல்லை. இருக்கிற பணத்தையும் செலவழிக்க விழாக்கள் ஒரு வழியே

  • m.sankaralingam - rajapalayam,இந்தியா

    படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில். 2g ஊழலால் ஏற்பட அபகீர்த்தியை மறைக்க இவர் செய்யும் முயற்சி தான் இதுபோன்ற நாடகங்கள். வயது அதிகமானாலும் தான் புகழப்பட வேண்டும் என்பது மட்டுமே ஒரே லட்சியம். அதுவே இவரது கடமை. இதில் கண்ணியமும் கட்டுப்பாடும் காணாமல் போய்விட்டன.

  • Sampath Kumar - Chennai,இந்தியா

    தினமலர் நகைச்சுவை பகுதி இன்று முதல் ஆரம்பித்து விட்டதா? சொல்லவே இல்லை மக்கள் மாநாடு கட்சி கடும் கண்டனம் மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கை யாருங்க சக்திவேல்? நடிகர் (அரசியல்) கார்த்திக்கின் தம்பியா?

  • nagarajan - Chennai ,இந்தியா

    என் அறிவுக்கு தெரிந்த வரை திராவிடம் என்பதே எல்லோரும் சமம் என்பதே. இந்த வார்த்தையை சுயநலம் இல்லாமல் இவர் உபயோக படுத்தி இருந்தால் தமிழ்நாடு என்றோ சுபிட்சம் அடைந்திருக்கலாம். ஆனால் இவரை போன்ற பல பேர் சுய நலத்திற்காகவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியையும், மதத்தினரையும் தாக்கி பேசி மேலும் தமிழ்நாட்டை பாதாளத்திற்கு கொண்டு செல்வதிலேயே இருக்கிறார். வாழ்த்துக்கள் இதே போல போனால் வெளங்கிடும்.

  • C.V. Sundaramoorthy - Coimbatore.,இந்தியா

    சி.வி.சுந்தரமூர்த்தி, கோயம்புத்தூர், இந்தியா: நமது வாசகர், நண்பர், திரு ராஜசேகரன் சொல்லியபடி திரு கருணாநிதியிடம் திராவிடர்கள் எப்படி இருப்பார்கள் என்றால் அதற்கும் ராமர் எப்படி, அவரது கல்வித்திறன் என்ன என்று சொன்னாரே அதேபோன்று ஒரு கோமாளித்தனமான, கேவலமான வியாக்கியானத்தை கொடுப்பார். எப்படி இருந்தாலும், தாங்கள் கூறிய உண்மைப்படி, திரு கருணாநிதி தம்மை எதிர்ப்போர்களை ஆரியர்களாகவும், ஆதரிப்பவர்களை திராவிடர்கள் என்றும் கண்டிப்பாவகவே சொல்லுவார். அவரது குடும்பத்திலேயே ஆரியர்களும் இருக்கிறார்களே. நாமறிந்த உண்மையும் அதுதானே.

  • C.V. Sundaramoorthy - Coimbatore.,இந்தியா

    சி.வி.சுந்தரமூர்த்தி, கோயம்புத்தூர், இந்தியா: திரு ஆரூர் ரங்க எழுதியுள்ள அவரது விமர்சனத்தை நமது முன்னாள் முதல்வர் படித்துப்பார்க்க நேர்ந்தால் அவர் சிறிதும் தயங்காது தனது குடும்ப நபர்களில் உள்ள ஒரு ஆரியரை தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கவும் தயங்கவே மாட்டார். அதனால்தான் கல்யாணம் என்ற பெயரால் எல்லா ஜாதியினருக்கும் தங்கள் குடும்பத்தில் இடம் koduththaar, மனைவி, துணைவி,.............................என்று இடமளித்தும் பிறரிடம் பேசும்போது எங்கள் குடும்பத்திலேயே எல்லா சாதியினரையும் செர்த்துக்கொண்டுள்ளேனே என்று விவஸ்தையே இல்லாமலும் பேசிவருகிறார். இதுநாள் வரை எல்லா பாமர மக்களும் இவரின் சுயரூபத்தினையும் தனது குடும்ப நலனே தன குறிக்கோள் என்பதினையும் கொண்டவர் என்பதினை புரிந்து கொள்ளாமல் தற்பொழுது அனைத்து பாமரமக்க்களுமே இவரைப்பற்றி மிகவும் தீர்க்கமாகப் புரிந்துகொண்டபின் இனியும் ஏமாறாமல் தங்கள் சுய சிந்தனைகளை வெளிப்படுத்த துணிந்துவிட்டனர். இதனால் எப்படியாவது மீண்டும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அரசியல் ஆட்சி பீடத்தில் அமர்த்த தள்ளுவண்டியிலாவது சென்று பரிகாரம் தேடவும் முற்பட்டுள்ளார். வீட்டினுள்ளேயே இருந்துவர முயன்றால் குடும்ப நபர்களின் எசுதல்களை ஏற்கவேண்டிவரும். இதனால் தள்ளுவண்டியில் வெளியே உலாவினால் சிறிதளாவாவது மன நிம்மதி உண்டாகும் என்பதால்தான். பாவம் இன்னும் சிறிதுகாலம் நல்ல நினைப்போடு இருந்து தனது குடும்ப மக்களின் நலனில் ஆர்வம் காட்ட இவரது திராவிட நண்பர்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் கிட்டட்டும்.

  • kumuthan - Doha,கத்தார்

    திருக்குறளுக்கு பொருள் எழுதிய இந்த புகழேந்தி, இவருடைய நடத்தைகளை பார்க்கும்போது அக்குறள்களின் அர்த்ததங்களை உணர்ந்தவர்தானா என்று வியக்க வைத்தவர்.

  • Siva Sankar - Singapore,சிங்கப்பூர்

    திராவிடம்திராவிடம் என்று கூறியே தமிழர்களுக்கு இன உணர்வை குழி தோண்டி புதைத்த பெருமை தமிழர் அல்லாத கருணாநிதிக்கும் வைகோவிற்க்கும் பெரியார்க்கும் விஜயகாந்திற்கும் சேரும் . ஆர்யாதைவிட திராவிட உணர்வுதான் தமிழர்களுக்கு மிகவும் எதிரானது.

  • N.S.Rajan - Bangalore ,இந்தியா

    This so called "Dravidian Culture" is only a USP for Karunanidhi and his party to sell his outdated and dubious philosophy, which totally stands rejected today. He has nothing else with which he can attract votes burnt his bridges through unprecedented corruption and greed both at the center and the state levels. Despite the hammering he and his party received he still believes the people are fools.

  • Suhail .. - trichy,இந்தியா

    இது போன்ற செய்தி தினமலரில் வருவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை ..

  • ChandraSekarenthiran - Chennai,இந்தியா

    தேவிகுளம், பீர்மேடு, காவிரி பகுதிகள் இழப்பின் காரணமாக திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடக்கூடாது என்றால், பாகிஸ்தான் வங்கதேச இழப்பிற்கு காரணமான சுதந்திரத்தையும் கொண்டாடக்கூடாது, ஆனா நம அப்பிடியா இருக்கோம்? ஆனா தினமலரை பாராட்டணும், அப்பப்ப இப்படி தன்னுடைய சுயரூபத்தை காட்டிட்டு இருந்தா தான் மக்கள் அதனுடைய உண்மையான உள்ளக்கிடக்கையை அறிந்து கொள்வார்கள். நடுநிலை பத்திரிகை என நம்ப மாட்டார்கள். இந்த செய்தி மூலமாக தினமலர் தி.மு.க.வை எதிர்ப்பது ஊழல் "குற்றச்சாட்டுகளுக்காக" அல்ல, வேற ஏதோ காரணத்துக்காகன்னு மக்கள் புரிஞ்சுக்குவாங்க. ஊழல் செய்யாவிட்டாலும் தினமலர், சு.சாமி, சோ.சாமி இவங்க எல்லாம் தி.மு.க.வை எதிர்ப்பாங்க.

  • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

    ஆமா போன வாட்டி செம்மொழி மாநாடுன்னு ஒண்ணு நடத்தி பல பல நூறு கோடிகளை அள்ளி இறைசீங்களே? அதுனால என்ன ரிசல்ட் தலைவா? தமிழ் வளந்துடுச்சா? செம்மொழி ஆயிடுச்சா? கோயம்புத்தூர் பாழானது தான் மிச்சம். பணம் வீணானது தான் மிச்சம். உங்கள் குடும்பம் மேடையேறி தற்பெருமை பேசி அந்த ஒரு குடும்பம் இந்த விழாவை அனுபவிச்சது தான் மிச்சம். இதுக்கு வரி அப்படின்ற பேருல நாங்க தண்டம் அழ வேண்டி இருந்தது.

  • Krishnan - Szekesfehervar,ஹங்கேரி

    சரித்திர ஆராய்ச்சி படியும் நவீன மருத்துவ ஆராய்ச்சி படியும் இந்தியtவில் ஆரியர்கள் என யாரும் இல்லை. அனைவரும் திராவிடர்களே. இவர் சுற்றும் பூ யார் காதுக்கு என்றுதான் புரியவில்லை

  • Kowsik Rishi - Chennai,இந்தியா

    அருமை தமிழ் மக்களே மு. கருணாநிதியின் மோசடி தான் இந்த திராவிடம் இயக்க கொண்டாட்டம் திராவிடம் என்றால் ஒட்டுமொத்த தென் இந்தியாவையும் உள்ளடக்கியது கேரள மலையாளி திராவிடம் ஏற்றுக்கொள்ளவில்லை ஆந்திர - தெலுகு - திராவிடம் ஏற்றுக்கொள்ளவில்லை கர்நாடக - கனடிகாஸ் - திராவிடம் ஏற்றுக்கொள்ளவில்லை திராவிடம் 1960 களின் அரசியல் குறிப்பாக தமிழ் நாட்டில் - பயன்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது அவ்வளவு தான் அகவே தமிழ் மக்களே மு. கருணாநிதியின் இந்த மோசடி பேச்சை சட்டை பண்ணாமல் தமிழ் நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு பாடுபடும் நல்ல தலைவர்களை தேர்தெடுத்து தமிழ் நாட்டை தன சுயநலத்தில் சூறையாடி, சீரழித்து தமிழ் மேலாண்மையை சீர்குலைத்த மு. கருணாநிதியை வெறுத்து புறக்கணியுங்கள். திராவிடம் இயக்க கொண்டாடம் எல்லாம் வெறும் மோசடி பேச்சு தமிழ் மக்களால் புறக்கணிக்க பட்ட மு. கருணாநிதியும் அவரது கூட்டமும் தமிழ் மக்களை இன்னமும் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போடும் சதி திட்டம் அருமை தமிழ் மக்களே திராவிடம் என்று பேசும் எந்த தலைவரையும் தட்டி கேளுங்கள் திராவிடம் என்றல் என்ன என்று விளக்கி சொல்ல சொல்லுங்கள் ஓடி போய் விடுவார்கள். திராவிடம் என்று இவர்கள் பயன் படுத்துவது ஒரு மோடி மோஸ்தான் வேலை அங்கு பாம்பும் இல்லை கிரியும் இல்லை அனால் தன்னை சுற்றி கூட்டம் சேர்க்க அரசியல் மோடிமஸ்தான் மு. கருணாநிதி செய்யும் போய் புரட்டு வேலை நம்பாதீர்கள், மோசம் போகாதீர்கள், பெற்ற சுதந்திரத்தை இழந்து விடாதீர்கள். ஒரு கட்சி, ஒரு குடும்ப அராஜக ஆட்சிக்கு தமிழ் மக்களை அடிமை படுத்த திட்டம் போட்டு தோற்று போன மு.கருணாநிதியின் வேலை இது, தன வாரிசுகளுக்கு தமிழ் நாட்டையே கூறு போடா திட்டம் போட்டு தோற்று போனவர் மு கருணாநிதி தமிழ் மக்களே உஷார் பாரா உஷார்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    எந்த மொழியும் உயர்ந்ததும் அல்ல. தாழ்ந்ததும் அல்ல மொழி என்பது தன்னளவில் அதை அறிந்த வேறொருவரிடம் தொடர்பு கொள்ள ஒரு கருவியாகச் செயல்படுகிறது. ஹிந்தி மொழி கற்றால் தவறு அது தமிழுக்குச் செய்யும் துரோகம் என்றவர்கள் குடும்பத்தில் கூட அநேகம் பேர் ஹிந்தி கற்றுள்ளனர். மொழி, இனம் குறித்துப் பேசி மக்களை மூளைச் சலவை செய்து தானும் தன் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக, சுரண்டிக் கொழுக்க வழி செய்து கொண்டனர் என்பதே உண்மை. இதை இன்று வரை அனைத்துத் தமிழர்களும் உணரவில்லை

  • Thamizhan - tamilnadu ,இந்தியா

    திராவிடத்தால் வீழ்ந்தோம் தெலுங்கன் ,மலையாளி ,கன்னடன் எல்லாம் தன்னை தானே தமிழன் என்று சொல்லி தனக்குத்தானே தமிழின தலைவர் பட்டம் , பதவி சூட்டிக்கொண்டு நம் தமிழ் இனத்தை தமிழ் நாட்டிலும் , இலங்கையிலும் அழித்தது போதும். தமிழ் நாட்டையும், இந்தியா அரசையும் கொள்ளை அடித்தது போதும். திராவிடன் என்ற இல்லாத ஒன்றை பயன்படுத்தாமல் இவர்களால் தமிழ் நாட்டில் ஆட்சி செய்ய இயலாது. கொள்ளை அடித்தது போதும் தெலுங்கன் கருணாநிதியே

  • saravanan - Dares Salaam,தான்சானியா

    அடப்பாவிங்களா........100 வருஷமா தமிழனை ஏமாத்துனது பத்தலையா உங்களுக்கு????? "கருணாநிதி வம்சாவளியினர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். முதல்வர் ஜெயலலிதா மைசூரில் பிறந்த தமிழர். வைகோ, விஜயகாந்த் இருவரும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர்., கண்டியில் பிறந்த மலையாள மொழி பேசுபவர்" - எல்லாம் சரிதான் ஆனா, ராமசாமின்னு ஒரு மலையாளி வந்துதான் தமிழ்நாட்டை குட்டிசுவர் ஆக்கினது என்கிற உண்மையை சொல்லாம விட்டுட்டாரே சக்திவேல்......

  • Shabaaz - Vellore,இந்தியா

    பத்த வச்சிட்டியே பரட்டே. அய்யோ சம்மந்தம் சம்மந்தம் இல்லாமே என்னென்னமோ எழுதுறாங்களே. ஜர்னலிசம் மூலம் மக்களுக்கு எவ்வளவோ நல்லதை செய்யல்லாம். வங்க மொழியில் எழுதப்பட்ட தேசிய கீதத்தை நாம் பெருமையாக ஏற்றுக்கொண்டோம். தேசப் பற்று நம் எல்லோருடைய ரத்தத்தில் ஊற்று போல் உள்ளது. தேசிய கீதத்தை தமிழில் தான் பாடுவோம் என்று போர் கொடி தூக்கவில்லை. பிரிவினையை ஏற்றது ஏன்? இது குதுர்க்கமான கேள்வி. தென்னிந்தியா முழுவதும் உள்ள மக்கள் திராவிடர்கள், அதில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதி தமிழ்நாடு. மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் சூழ்ச்சியினை செய்பவர்கள் ஹிந்து என்ற போர்வையில் வாழும் ஆரியர்கள். இந்தியர்களை எப்படி பிரிதாள்வது என்று வெள்ளைக்காரனுக்கு சொல்லி தந்தவர்கள் இவர்களே. முகலாயர்கள் ஆட்சியில் இருந்தபோதும் சரி, வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போதும் சரி, எப்படியாவது உயர் பதவி, உயர்வான வாழ்க்கையை தேடி அடைந்தனர். மொழிப்பற்று யாருக்குதான் இல்லை, ஜப்பானியர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள், கொரியர்கள், சிங்களவர்கள், என்று எல்லோரும் மொழிப்பற்று உடையவர்களே. இதில் தமிழனுக்கு மட்டும் தான் மொழிப்பற்று, இனப்பற்று ஊட்ட வேண்டியிருக்கிறது. தமிழன் சுயநலவாதியாய், எதற்கெடுத்தாலும், யார் எதை சொன்னாலும் தலைஆட்டுபவனாக இருக்கும் வரை கஷ்டம் தான். வாஜ்பாய் என்ற நல்ல மனிதரையே ஜாதி வெறியர்கள் கட்சியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். ஏன் என்று மக்கள் உணரவேண்டும்.

  • nagainalluran - Salem,இந்தியா

    மஞ்ச துண்டு ராவணனை திராவிடன் என்கிறது. அவன் மனைவி மண்டோதரி அவனை ஆர்யா புத்திர என்றுதான் அழைக்கிறாள். ஆர்யா என்றால் மரியாதைக்குரிய என்று அர்த்தம். அது ஒன்றும் இனம் இல்லை. திராவிடமும் இனம் இல்லை. அது ஒரு தேசம் தமிழ் நாடு தவிர மற்ற மாநிலங்களில் உள்ள ஏடுகள் எல்லாம் இப்படித்தான் உள்ளது. மற்றவர்கள் யாரும் இந்த ஆர்யா திராவிட பேதம் பார்ப்பதே இல்லை. இது பார்ப்பனர்களை தனிமை படுத்தி அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்க செய்த நோக்கம் தவிர வேறில்லை. எனக்கு நிறைய நல்ல பார்ப்பன நண்பர்கள் உண்டு . கண்டிப்பாக மஞ்ச துண்டை விட நல்லவர்கள். அவர்களுக்கும் கர்ப கிரகத்க்குள் செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். இங்கே திராவிட ஆரிய பேதம் எங்கே வந்தது. உனக்குத்தான் கடவுளே இல்லை. நீ கர்ப கிரகத்துக்குள் போனால் என்ன. கக்கூசுக்குள் போனால் என்ன.

  • tamilan Abu Dhabi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    Let Karuna explain what the people of Tamil Nadu acheived by the Dravidian Movement ? Only his family benefited by talking about Dravidian movement in the past 50 years. Normaly, Karuna takes up Anti Brahmin , Dravidian movement, Periyar thought only when he was out of power and when there is nothing to talk against the ruling government. ADMK should be happy and proud that there is no short coming in their governance and hence Karuna is talking about Anti Brahmin & Dravidian movement. As a Brahmin myself got denied seat for higher education in spite of ranking in the undergraduation due to quote tem . Thanks to Karuna for this and I am now well off residing outside India and this would have not possible without Karuna's anti brahmin's drive. I pity the Tamil people who still believes his talk and wasting their time & efforts. It is very unfortunate for Tamil nadu to have such leader who ruined the state and wish to continue to ruine through the dynasty rule.

  • குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா

    கருணாநிதியை பற்றி கருத்து கூற அனைவர்க்கும் உரிமை உண்டு, ஏன்னென்றால் கருணா மக்கள் பணத்தில் வாழப்பவர். ஆனால் திராவிட இயக்கத்தை பற்றி (குறிப்பாக பெரியாரை பற்றி) கருத்து கூற எவருக்கும் உரிமையோ தகுதியோ இல்லை. உதரணத்துக்கு என் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் பிராமணர் 3 குடும்பம் 75% விவசாய நிலம் (Engineer-1, PG-3, UG-5) கொங்கு வெள்ளாளர் 100 குடும்பம் 10% விவசாய நிலம் (Engineer-25, PG-10. UG-35) கொங்கு வெட்டுவர் 50௦ குடும்பம் 5% விவசாய நிலம் (Engineer-5, PG-5, UG-25) குலாளர் (மண்பாண்டம் செய்வோர்) 10 குடும்பம் 2% விவசாய நிலம் (Engineer-3, UG-10) ஆசாரியர் (மரவேலை செய்வோர்) 5 குடும்பம் 4% விவசாய நிலம் (Engineer-1, UG-5) துணி துவைபோர், சவரம் செய்வோர் 5 குடும்பம் 2% விவசாய நிலம் (Engineer-2, Veterinary Doctor-1, UG-4) தாழ்தபட்டோர் 30 குடும்பம் 2% விவசாய நிலம். (PG-2, UG-25) இப்போது உழைத்தவருக்கே நிலம் சொந்தம் ஆகிவிட்டது. முன்பு பிராமண சமுகத்தில் தான் படித்தவர் இருந்தார்கள். இப்போது அனைத்து சமுகத்தில் படித்தவர் இருக்கிறார்கள். தினமலர் முதளாளிகளை (பிராமணர்கள்) சந்தோஷப் படுத்த "நமது சிறப்பு நிருபர்" இப்படி எழுதியுள்ளார் என்று நினைக்கிறோன்....

  • NAGAMALAI - Chennai,இந்தியா

    கருணாநிதிக்கு தன் ஆட்சி போனவுடன் திராவிடர்கள், தமிழர்கள் நினைப்பு வந்துவிடும். அவரும் அவரது மந்திரிகளும் அடித்த கொள்ளையை மக்களை மறக்க, இந்த மாதிரி கச்சேரி நடத்தி அவரை சூழ்ந்திருந்திருக்கும் அப்பாவி தொண்டர்களை குஷிபடுத்த எதையாவது செய்துகொண்டு இருப்பார். அடிக்கடி மக்கள் அவரது கடந்த 5 ஆண்டு ஆட்சியை ஒரு முறை நினைத்துக்கொண்டால் போதும். இவர் கூறுவதை எவரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

  • Kannan Krishnan - Riyadh,சவுதி அரேபியா

    மனு நீதி கொள்கைப்படி பார்ப்பனர் மற்ற இனத்தவரை அடிமைகளாகவும், கீழ் மக்களாகவும் கருதி கொடுமைப்படுத்தினர். வேதம், பொது கல்வி, உத்யோகம் எல்லாம் அவர்களுக்கு மட்டும்தான் சொந்தம். நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்த திராவிடர் ஒன்று சேர்ந்து உருவாக்கியதுதான் திராவிட இயக்கம். குறிப்பாக தமிழ் நாட்டில் மற்ற சமூகத்தார் படிப்பறிவு பெற்றதும், கோயில் பிரவேசம் பெற்றதும் திராவிட இயக்க போரட்டதில்நால்தான். சரித்திரத்தை மறந்து விட்டு தினமலர் பேசவில்லை. பார்பனரல்லாதவர் ஓன்று பட்டால் இழப்பு யாருக்கு ? வேற்றுமை உண்டு பண்ணி குளிர் காயும் பார்ப்பனர்களுக்கு பரிந்து பேசும் தினமலரையும், சில அறிவிலிகளையும் நினைத்து பரிதாபப்படுகிறேன். பத்திரிக்கை என்பது ஜனநாயகத்தின் ஒரு தூணாக பணி ஆற்ற வேண்டும். இப்படி தரம் குறையக்கூடாது.

  • Meera Muralidharan - tiruchirappalli,இந்தியா

    His speech is nothing but nonsense. Best treatment is to ignore this as people of Tamilnadu intelligently discarded him in the recent elections.

  • மன்னைபாரதி - காட்டுமன்னார்கோயில்,இந்தியா

    பொறுப்பான செய்தித்தாள் சிறப்பு செய்தியாளர் என்ற பெயரில், ஆதாரமில்லாமல் ஒரு சிலர் சொல்வதை கேட்டு வருங்கள தலைமுறைக்கு தவறான செய்திகளை கொடுக்க வேண்டாம். திராவிடம் பற்றிய உங்கள் விமர்சனம் ஆதாரமற்று வெறும் கருத்தாக இன்றைய தலைமுறையை சென்றடையும் போது, அவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. கலைஞர் மேல் உள்ள உங்கள் கோபம் திராவிடம் மேல் தவறாக திணிக்க வேண்டாம்.

  • Bala_chennai - Chennai,இந்தியா

    ....திராவிட இயக்கம் இல்லை என்றால் இன்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்தப்பட்ட மக்கள் இன்றும் பார்பனிய மக்களுக்கு சேவகம் செய்து கொண்டே இருந்து இருப்பார்கள்.தலையில் செருப்பை வைத்து கொண்டு நடக்க வேண்டும். கோவிலில் நுழய தடை. குல கல்வி. கல்வி பயில தடை திராவிட இயக்கங்கள் தமிழர்களை முன்னற்றியவை என்படி மறுக்க முடியாது... மக்கள் மாநாடு கட்சி அப்படி ஒரு கட்சி இருக்கா...அவர் யாரு என்று அவர் வசிக்கம் தெருவில் உள்ளவர்களக்கே தெரியாது...தினமலர்க்கு ஆதரவு தெரிவிக்க வேறு யாரும் சிக்கவில்லை போலும் ..காமெடி

  • A.Arul - puducherry,இந்தியா

    அட விடுங்கப்பா, பாவம் அந்த ஆளு. தேர்தலில் தோல்வி. கூடவே ஊழல் வேறு. மக்களும் மறந்து விட்டார்கள். வேறு என்ன செய்வார். ஏதாவது உளற வேண்டும் அல்லவா. அதான்

  • Pannadai Pandian - wuxi,சீனா

    இவரு ரெண்டு நாளா கூப்பாடு போடுறத பார்த்தால் கட்சி அபாய கட்டத்தில் இருப்பது போல தெரிகிறது. இனி என்ன தந்திரம் செய்தாலும் நடக்காது. பழையது கழிந்து விட்டது. புதியது வந்து கொண்டிருக்கிறது. அது உங்கள் நூறு வருட பின் தங்கிய அரசியல் டெக்னாலஜியை ஏற்க தயாராய் இல்லை.

  • Raman C Iyer - Hyderabad,இந்தியா

    ஐயோ திரும்பவும் திராவிடம் என்று கொடி புடிச்சு தமிழ் மக்களை மற்ற மாநில மக்களிடம் இருந்து பிரிக்கும் முயற்சிய தொடங்கிட்டாங்கப்பா. இப்படி தான் திராவிடன் அது இதுன்னு சொல்லி ஹிந்தி படிக்க விடாம நம்ம புள்ள குட்டிங்களா படிக்கவிடாம அவங்க புள்ள குட்டிங்க மட்டும் எல்லா மொழியையும் கத்துகிட்டு இருக்காங்க..... ஹிந்தி , இங்கிலீஷ் வேணாம் என்று சொன்னதால நம்மோட பசங்களுக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் செரியா வரல. மத்த மாநில மக்களிடம் பேச வழியே இல்லாம பண்ணினது இந்த திராவிட இயக்கம் தான்... தன் குடும்பம் மட்டும் எல்லா மொழியும் கற்க வேண்டும் மத்தவர் எல்லாம் ஒன்னும் தெரியாத ஓட்டாண்டியாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நிரூபணம் செய்ய அய்யா கலைஞர் திராவிட விழா என்று புதுசா ஒரு காமெடி பண்ண முயலுகிறார்.. இதை அய்யரும், அய்யங்காரும் சொன்னால் பார்ப்பனன் சூழ்ச்சி என்பர் கலைஞர் , இதை ராமதாஸ் சொன்னால் தமிழ் இன துரோகி என்பார் கலைஞர்... வேறு எவரும் சொல்லவதற்கு முன்னால் "ஆரிய மாயை " அகற்ற "திராவிடன்" ஒன்று சேர வேண்டும் என்று பிராமண துஷ்வேசத்தை பரப்பும் படி ஒரு அறிக்கை விடுவார். எத்தனை காலம் இப்படி மானம்கட்ட அரசியல் பண்ணவேண்டுமோ அந்த திராவிடர்களை படைத்த கடவுளைதான் கேட்க வேண்டும்

  • John - Bangalore,இந்தியா

    இந்த தின மலர் என்ன சொல்ல வருதுன்னு புரியலையே. யாருகிட்ட காசு வாங்கிட்டு எழுதுறாங்க???

  • mohanraj jebamani - chennai,இந்தியா

    திராவிடம் என்பது மோசடி. திராவிட முன்னேற்ற கழகம் என்பதும் மோசடி, அண்ணா தி மு க என்பது காமடியான மோசடி, மறுமலர்ச்சி திராவிட மு க என்பது மிகப்பெரிய இமாலய மோசடி. ராஜா ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை திராவிட கட்டிடக்கலை என்றும், புதிய சட்டமன்ற கட்டிடத்தை திரவிடக்கலையின் சிறப்பு என்றும் திமுகாவினர் சொல்லி திராவிடத்தை உண்மையாக்க நினைத்தது, இன்று திராவிட எழுச்சியின் நூற்றாண்டு என்று சொல்வது மிகப்பெரிய மோசடி. இன்றும் அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுத்த பின்னும் திராவிடத்தை கட்டி மாரடிப்பதும், மக்களை எமாற்ற நினைப்பதும் மானங்கெட்ட மோசடி.

  • thiru - Doha,கத்தார்

    தமிழ் உணர்வைப்பற்றி தினமலர் பேசுவது வேடிக்கையானது.-திருமூர்த்தி கத்தார்

  • packiasamy - tirunelveli,இந்தியா

    தமிழ் இலக்கியத்தில் இல்லாத சொல்லான திராவிடத்தை, கருணாநிதி போன்ற தமிழ் வியாபாரிகள் இன்னமும் தூக்கி பிடிப்பது, உண்மை தமிழனை காவு கொடுத்து எப்போதும்போல் தன் பிள்ளைகளை பிழைக்க வைக்கவே

  • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    "திராவிடன் என்றால் அவன் மூட நம்பிக்கைக்கு விரோதி. ஆரிய தருமத்திற்கு விரோதி. நூற்றுக்கணக்கான சாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனுதர்மத் திற்கு விரோதி. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். மானத்தோடு வாழ வேண்டும். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவன்தான் திராவிடன்". இந்த வகையில் கருணாநிதியை ஏன் திராவிட தலைவனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. இப்படி ஒரு சமத்துவ நிலையை தமிழகத்தில் கொண்டுவர பெரியார் அண்ணா போன்றவர்கள் போராடவில்லையா, அவர்கள் வழி வந்த கருணாநிதி அதற்காக போராடவில்லையா. பெரியார் அண்ணா போன்றவர்கள் சமத்துவத்திர்க்காக போராடவில்லை என்றால் இன்று ரயில் பெட்டிகளில் பெண்களுக்கு தனி பேட்டிகள் ஒதுக்கியது போல, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தனியாக பெட்டிகள் ஒதுக்கபட்டிருக்கும், அவர்களுக்கென்று எல்லாமே தனியாக பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும், தண்ணீர் குடிக்கும் துவளைகள் உட்பட. குடும்ப அரசியல், மற்றும் ஊழலால் இன்று கருணாநிதி பெயர் சிதைந்திருக்கிறது, ஆனால் அது இந்த செய்திக்கு சிறிதளவும் பொருத்தமில்லாதது. திராவிடம் என்பதே சமத்துவம், அந்த சமத்துவம் கொண்டுவர தமிழ்நாட்டில் பாடுபட்டவர்களில் கருணாநிதிக்கும் சிறிது பங்கு இருக்கிறது.

  • Najumudeen Abdul majeed - Alkhobar ,சவுதி அரேபியா

    செய்தியின் தலைப்பில் தமிழ் இயக்கங்கள் கண்டனம் என்று இருக்கிறது. ஆனால் ஏதோ மக்கள் மாநாட்டு கட்சி என்றும் சக்திவேல் என்றும் உங்கள் நிருபர் எழுதி இருக்கிறார், இதுதான் தமிழ் இயக்கமா இப்படி ஒரு கட்சி இருப்பதே இந்த செய்தியின் மூலம்தான் தெரிகிறது உமது சிறப்பு நிருபரின் கற்பனைக்கு வாழ்த்துக்கள் நஜுமுதீன்

  • Rohan Sivanath - manama,பஹ்ரைன்

    MGR முதற்கொண்டு, கருணாநிதியோ, இன்று ஆட்சி செய்யும் ஜெயலலிதாவோ உண்மையான திராவிடர்கள் கிடையாது. ஆனால் இன்னும் தமிழ் மக்கள் ஏமாற தானே செய்கிறார்கள். இலங்கையிலே உள்ள தமிழர்கள் உண்மையான திராவிடர்கள். அங்கு தமிழனுக்காக போர் செய்யும் போது தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் வாதியும் மனபூர்வமாக அதரவு தெரிவிக்கவில்லை. ஏனென்றால் யாரும் உண்மையான தமிழன் கிடையாது. MGR அவர்கள் அதரவு தெரிவித்தார், ஏனென்றால் அவர் கண்டில் பிறந்து தமிழன் படும் பாடு அவருக்கு தெரிந்ததால். உண்மையான தமிழர்கள் ( திராவிடன் )அதரவு தெரிவித்து இருந்தால் இன்று இலங்கையில் தனி திராவிட நாடு உருவாகிருக்கும்.

  • naan tamilan - chennai,இந்தியா

    கருணாநிதிக்கு எதிராக இங்கே கருது தெரிவிப்பவர்கள், கருணாநிதி ஒரு பகுத்தறிவு கடவுள் என்பதை மறக்க வேண்டாம். ராஜாஜி அவர்கள் இவரை பகுத்தறிவு கடவுள் என்று பாராட்ட கலைஞர் அவர்களும் அதை பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டார் என்பதை எண்ணி பார்க்கவும்.

  • Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ

    எப்படி வீழ்ச்சியிலிருந்து எழுந்து நிற்பது என்ற தந்திரம் இந்த திராவிடச்சுருக்கு. இப்போ பொழுதுபோகாமல் இருக்கும் கருணாநிதி ஒருவருடத்துக்கு விழா எடுக்கப்போகிறாராம். வீழ்ச்சி வீழ்ச்சிதான் இனி எழுந்திருக்க திராவிட ஊன்றுகோல் உதவப்போவதில்லை.

  • D.Jagannathan - puducherry,இந்தியா

    மக்கள் முதுகுல பச்ச குதிரை தாண்டி பல லட்சம் கோடிகளை கொள்ள அடிச்சு சுகமாக வாழ வழி செய்த இயக்கத்தை கொண்டாடாமல் இருக்க மஞ்ச துண்டார் ஒன்றும் நன்றிகெட்டவர் இல்லை.

  • Dr.Sivaprakasam Thamizhmanii - CHENNAI ,இந்தியா

    குல கல்வி கொண்டு வந்தவர்களை எதிதவர்கள் யார். ILLAI என்றால் அப்பனும் சுப்பனும் அமெரிக்கா செல்ல முடியுமா. முடி வெட்டுபவன் முடி வெட்டி கொண்டுதான் இருப்பான். இதை எதிர்த்தவர்கள் திராவிட கட்சியினர். இது கூட தெரியாமல் சிலர் உளறிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன கொடுமை. IVARGAKALUKELLAM ஆரியர் ஆட்சி வந்தாதால் புரியும். ஏன் என்றால் இன்று இதை எதிர்ப்பவன் வளர்த்த நிலையில் இருப்பான்.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    கருணாநிதி உண்மையிலேயே தமிழர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அவர்களிடம் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு பின் கட்சியை விட்டு குடும்பத்தோடு விலகி விடவேண்டும். பிறகு சொத்து பூராவும் அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு ஆந்திரா செல்வது அவர் தமிழ்நாட்டுக்கு செய்யும் பேருதவி ஆகும்.

  • T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா

    T.G.BALASUBRAMANIAN, AUSTRALIA. திராவிட இயக்கத்தின் கொள்கையில் உண்மை இல்லை. சரித்திரம் படியுங்கள். அனைத்து இந்தியர்களும் ஒரு காலத்தில் தமிழர்களே. கால மாற்றங்களால் பல மொழிகளாக மாறி உள்ளன. இந்தியர்களில் ஒரு பிரிவினரே ஆர்யர்கள். இது ஆய்வாளர்களின் முடிவு. சுய நலத்திற்காக கருணாநிதி முன்பே சுருங்கிப்போன தமிழ் நாட்டை மேலும் குறுகிப்போக முயற்சிக்கிறார். வட இந்திய ஆர்யர்கள் மட்டுமல்ல, தமிழக பிரமணர்களும் தமிழர்களே. ஏமாறாதீர்கள். மேல் நாட்டாரின் பிரிவினை கொள்கையை கருணாநிதியும் பின்பற்றுகிறார். படித்து சொந்த அறிவோடு சிந்தியுங்கள்.

  • T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா

    திராவிடன், தமிழன் என்று சொல்லி அதிகாரத்தை கைபற்றுவதிலேயே குறியாய் இருந்து, கல்லா கட்டியதுதான் மிச்சம். தவிச்ச வாய்க்கு தண்ணி கூட அண்டை மாநிலத்தவன் தருவதில்லை. ஆரியன், திராவிடன் என்று வெள்ளைக்காரன் சொன்ன தத்துவத்தை வைத்து, சற்றொப்ப நூறாண்டு காலம் ஒரு சந்ததியை ஏமாற்றி பொழப்பை ஒட்டியாச்சு. The aryan, dravida theory is a failed one and it deserved to fail. தமிழா, இனிமேலாவது விழித்துக்கொள்.

  • ஆரூர் ரங - chennai,இந்தியா

    காங்கிரஸ் ஆட்சியில் அரிசன முன்னேற்றத்துக்காக பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், ஆலயப் பிரவேசம், ஜமீன்தாரி ஒழிப்பு ஆகியவற்றை செயல்படுத்தியபோது அவற்றை கடுமையாக எதிர்த்தது இந்த நீதிக் கட்சி.அவர்களது ஒரே குறிக்கோள் வெள்ளையனுக்கு ஜால்ரா போட்டு, ஏழை (உயர் சாதியலாத) இந்தியர்களை ஏமாற்றிப் பிழைப்பது. காந்தி உட்பட பல தேசபக்தர்களை, சுதந்திரப் போராட்ட வீரர்களை அயோக்கியர்கள் என தீர்மானமே போட்டவர்கள் அவர்கள். இந்திய சுதந்திரத்தையே எதிர்த்தவர்களைக் கொண்டாடும் திமுக வோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருப்பது ஒரு அரசியல் அலங்கோலமே.திராவிடர்கள் என்ற சொல்லே கால்டுவெல் என்ற வெள்ளையர் தனது மதப் பிரசார உத்திக்காக இந்தியர்களைப் பிரித்தாள கண்டுபிடித்து திணித்த சொல் அந்த சொல். எந்த தமிழ, வடமொழி இலக்கியத்திலும் இல்லைஅந்த சொல்லை வைத்து இங்கு இந்துக்களை கேவலப்படுத்தி பிரித்தண்டான் ஆங்கிலேயன். அவனின் அடிவருடி இயக்கத்துக்கு நூற்றாண்டு விழாவாம் மத்திய அரசு நிச்சயம் தடை செய்யப்படவேண்டிய அராஜகம் இது

  • ஆரூர் ரங - chennai,இந்தியா

    இந்த நீதிக் () கட்சி துவக்கியது உரிமைப்போரட்டம்கறது டூப். ஏழ்மையால் காலணா அரையணா தட்சணைக்காக,தேங்காய் - அரிசிக்காக தங்கள் வீட்டில் திதி, திவசம், தர்ப்பணம் செய்து வைத்துக்கொண்டிருந்தவரின் வாரிசுகள் தமக்கு மேலேயே தங்கள் பகுதியிலேயே அரசு அதிகாரிகளாதனையும் , ஏதாவது அரசு சம்மந்தப்பட்ட வேலையென்றால் அவர்கள் முன் பணிவாக நிற்கவேண்டிய நிலை பற்றியும் கண்டு வெறுத்துப்போய் அதிகார மமதையுடன் உயர் சாதி பணக்காரர்கள் துவக்கிய (பெர்வெர்ட்)சங்கம் அது. நீதிக்கட்சித் தலைவர்களின் பெயரைப் பார்த்தாலே அவர்களுக்கு சாதி ஒழிப்பு, சமத்துவத்தில் நம்பிக்கையே இல்லை என்பது விளங்கும்.இப்போதும் அவர்களைச் சேர்ந்தவர்கள் பலர் 100 % தீண்டாமையைப் பின்பற்றுவது உண்மைதானே? அவர்கள் வெள்ளைக்காரனை அண்டி பணப் பயன் பெற விரும்பியே அதனைத் துவக்கினர்.பிரித்தாளுதலில் வல்லவரான ஆங்கிலேயன் இந்த சாதிச் சண்டையை இவர்கள் மூலம் வளர்த்து ரசித்தான். வெள்ளைக்காரன் கொடுக்கும் சம்பளத்துக்கு திறமையான வேலைக்காரனைத் தேடி வைத்துகொண்டான். அவனைப் பொறுத்தவரை பிராமணனும், தலித்தும், இந்திய எருமையும் ஒன்றுதான்.அந்த வெள்ளைக்காரர்கள், இங்கே இருந்து நம்மை அடிமைக் காலனி ஆதிக்கம் செலுத்தவேண்டும் என தீர்மானமே இயற்றிய துரோகக்கூட்டம். இந்தக் கூட்டம் பெரியாரும் இந்த விஷயத்தில் குறைந்தவரல்ல. சுதந்திர தினத்தை துக்க நாளாகக் கொண்டாடியவர்கள் தி.க வினர். திமுகவோ , தனித்தமிழ்நாடு என ஆரம்பித்து, பிறகு சுருதி குறைத்து ..மாநில சுயாட்சியாக்கி, இப்போது அதனையும் விட்டுவிட்டு, தன்மானத்தை திகாரில் அடகு வைத்துவிட்டது. இதுவரை முழு அதிகாரமுள்ள திமுக பொதுச் செயலாளராக ஒரு ஆதிதிராவிடரை நியமிததுண்டா? இவர்கள் தங்களை உயர்வாக நினைப்பதும் ,நூற்றாண்டு கொண்டாடுவதும் மகா மகா மகா கேவலம்

  • அறிவாலயம் c / o போயஸ் கார்டன் - Chennai,இந்தியா

    ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்து இந்திய விடுதலையே எதிர்த்தவர்கள் நீதிக் கட்சியும், பெரியாரும். அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுபவர், நாளை நம்மை பாகிஸ்தான் பிடித்தால் கூட வரவேற்பார். அத்தனை தேச பக்தி. விட்டால் ஆங்கிலேயர் ஆட்சியின் ஐந்நூராவது ஆண்டுவிழாவும், முகலாயர்கள் ஆக்கிரமிப்பு செய்த ஆயிரமாண்டு விழாவும்கூட கொண்டாடுவார்கள். அப்படி செய்தாவது சிறுபான்மை ஓட்டுக்களைக் கவர திட்டமோ?

  • திராவிடன் கமுகக்க - London,யுனைடெட் கிங்டம்

    திராவிட இயக்கத்தால் கல்வி பெற்று, மறுக்கப்பட்ட உரிமை பெற்று, சரிக்கு சமமாக நடத்தப்பட்டு இன்று வெளிநாட்டில் நல்லவாய்ப்பாக வசிக்கும் பலரும் இருக்கிறார்கள். திராவிடர் என்பது ஒரு குறிச்சொல் அவ்வளவே. திராவிடர் என்றால், பிறப்பால் அனைவரும் சமம் யாரும் யாருக்கும் மேல் இல்லை, யாரும் யாருக்கும் கீழ் இல்லை என்பதே அதன் கோட்பாடு. திராவிடர் என்றால், உயர் ஜாதியினர் மட்டும் அன்றி யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான். திராவிடர் என்றால், கல்வி உயர் ஜாதியினருக்கு மட்டுமானதல்ல எனும் நிலை மாறி, அனைவரும் கல்வி கற்கலாம் என்பதன் குறியீடு. திராவிடர் என்றால், தமிழ் மொழியில் கோவிலில் அர்ச்சனை செய்யலாம் எனும் உரிமையை பெற்றுத் தந்தது. திராவிடர் என்றால், தமிழ் மொழியில் சமஸ்கிருத எழுத்துக்கள் 26 -ஐ தினிக்க விடாமல் தடுக்க பயன்படும் குறிச்சொல். திராவிடர் என்றால், தீண்டாமை இல்லை, நோக்காமை இல்லை, அண்டாமை இல்லை எனும் நிலையை தந்த ( தக்க வைக்கும், தரவிருக்கும் ) குறிச்சொல். - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து -

  • Paraankusam - Edison,யூ.எஸ்.ஏ

    Can the Dravidan Party organize an International Conference in Kandahar, Afganisthan? A best place on the earth

  • Krishnamoorthy - Michigan,யூ.எஸ்.ஏ

    ரவீந்திரநாத் தாகூர் கூறிய திராவிடத்தில் தென் மாவட்டங்கள் அனைத்தும் அடங்கும்.ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் முன்பு சிந்து நதிக்குக்கீழ் இருந்தவர்கள் எல்லாமே திராவிடர்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.இவர் கூறும் திராவிடம் என்பது இவரே தன சுயநலனுக்காக கண்டு பிடித்தது.தமிழ் தமிழ் என்று சொல்லி சொல்லியே ஊரை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டி விட்டதுமட்டாமல் இன்னமும் நம் எல்லோர் தலையிலும் மிளகாய் அறைக்கப்பார்கிறார்.உண்மை தமிழர்களிடமும்,திராவிடர்களிடமும் இனியும் இவர் பருப்பு வேகாதுஏன் எல்லா இந்தியர்களிடமே வேகாது.எல்லோரது பணத்தையும் விஞ்ஞானபூர்வமாக சுரண்டியவர்கள் அல்லவா இவர் திராவிட குடும்பத்தினர்.திரும்பவும் காலூன்றுவதர்க்குத்தான் இந்த நாடகமெல்லாம்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    யா கருணா அவர்களே கவலை வேண்டாம் தூற்றுவோர் தூற்றட்டும் கவலை வேண்டாம். நமக்குத்தான் சுப வீரபாண்டி வைரமுத்து பாப்பையா ராஜா எல்லோரும் இருக்கிறார்கள். போதாதற்கு தி வி வேறு இருக்கிறது . கவலைபடாதே கண்ணா கவலைப்டதே.கனி இருக்கும் வரை கவலை படாதே. நீ எப்போதும் போல் விழா நடத்து.இதையும் கேட்க சில ஜென்மங்கள் உண்டு.

  • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

    தலைவா நீங்க செய்றது எல்லாம் புஷ்வானம் ஆகிடுது . டைம் சரியில்ல. பேசாம குடும்பத்தோட திருநள்ளாறு போயி அங்கேயே இந்த ஆட்சி முடியிற வர இருந்து வந்தா தான் தப்பிக்க முடியும் போல் இருக்கு. நீங்க தமிழன் னு சொன்னால் அவர்கள் பச்சை தமிழன் என்கிறார்கள். பத்திரிக்கை வைக்க வந்தவர்களுக்கு எல்லாம் அள்ளிகொடுத்ததின் பயனை இப்போ நல்லா அனுபவிங்க. நாம இப்படியே ஆப்பிரிக்க போயிடுவோமோ ன்னு நேற்றுத்தான் நினைத்தேன்.அரசியல்ல நிமிஷத்திற்கு நிமிஷம் காட்சிகள் மாறுகிறது இது தானோ. இவர்கள் நீங்க ஆந்திராகாரர் என்று வேற சொல்லி உங்களை ஆந்திராவிற்கு துரத்த பாக்கிறார்கள். இப்ப அங்க போனா தெலுங்குதேசம் பிரச்சினை ஓடிகிட்டு இருக்கு பொழச்சுக்கலாம், பாருங்க உங்க எதிரிககூட உங்களுக்கு நல்லது தான் செய்யுறாங்க. ஆனால் ஒன்னு நம்ம அழகிரிக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் , அங்கெ போனாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டி வரும் பரவாயில்லையா. இவ்வளவு சொத்து சுகத்த எப்படி விட்டுட்டு போறதுன்னு யோசிக்க வேண்டாம், எனக்கு ஒரு சின்ன யோசனை தோணுது .... பேசாம கட்சியை தேமுதிக கூடயாவது இல்லை மதிமுக கூடவாவது இணைத்து விடுவோமா......... நமக்கு தேவை பதவி தானே ...........

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    தெலுங்கை,கன்னடத்தை,மலயாளத்தை தாய்மொழியை கொண்டவர்கள் பெரும்பானமையானோர் தமிழ்நாட்டில் வசிப்பதால் வாக்கு வங்கிக்காக இவர் திராவிட வார்த்தயை மேலும் கையாள வேண்டியிருகிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களுடைய வாக்குகள் தேவையானால் ...வைகோ கட்சிக்கு விஜயகாந்த் கட்சிக்கு போகும் வாக்குகள் தேவையான்னால் ... சிதைந்து போன தி மு க வை மெருகேற்ற ..புது வழிகளை கையாள வேண்டியிருகிறது. ..

  • raman - Mumbai,இந்தியா

    மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சக்திவேல்?? சக்திவேலு யாருன்னு தெரியாது இந்த அறிக்கை அவர்தான் கொடுத்தாரா இல்லை நமது சிறப்பு நிருபர் கொடுத்தாரா ??? நாரதரின் கலகம் நன்மையில் முடிந்தால் சரி

  • K.Sugavanam - salem,இந்தியா

    கஞ்சி குடிக்கும்,கேக் வெட்டும் கலாச்சாரத்தினர் திராவிடர் களா?

  • Sivakumar.M - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    திராவிடன் என்ற சொல்லை கண்டுபிடித்து அதை வைத்து மக்களை ஏமாற்றி வீராணம் முதல் ஸ்பெக்ட்ரம் வரை ஓயாமல் ஊழல் செய்து விட்டு அதில் இருந்து தப்பிக்க பணயமாக லட்சகணக்கான இலங்கை தமிழர்களை காவு கொடுத்து, உலக மகா ஊழலுக்காக அமைச்சர் பதவியை இழந்து வரும் ஒருவருக்கு விமான நிலையத்தில் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு செய்வதுதான் திராவிடனின் முகவரி என்றால் அந்த திராவிட விழாவில் கலந்து கொள்பவர்கள் உண்மையான "மாக்கள்".

  • K.Rajasekaran - chennai,இந்தியா

    கருணாநிதியை பொறுத்த வரையில் தன்னை ஆதரிப்பவர்கள் திராவிடர்கள்.எதிர்ப்பவர்கள் ஆரியர்கள்.ஒரு சந்தேகம்.திராவிடர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் ? கருணாநிதி விளக்கினால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

  • Saralayar - Houston,யூ.எஸ்.ஏ

    நல்ல கருத்து. தமிழ் தமிழ் என்று சொல்லி கொள்ளை கும்பல், கொள்ளை அடித்தது போதும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அருமை. இந்த திராவிட (அ)சிங்கங்களை நாடு கடத்தவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement