Load Image
Advertisement

நீட் தேர்வு விரைவில் முடிவு :மத்திய அரசு அறிவிப்பு

   நீட் தேர்வு  விரைவில் முடிவு :மத்திய அரசு அறிவிப்பு
ADVERTISEMENT
'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை நடத்துவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் போன்ற தொழில் கல்வி படிப்பதற்காக, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வும், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வும் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு முதல், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. பிப்ரவரி, மார்ச்சில் ஜே.இ.இ., தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன.
Latest Tamil News

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக மீதியுள்ள இரண்டு கட்ட ஜே.இ.இ., தேர்வுகளும், நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த தேர்வுகளை நடத்துவது பற்றி, மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீட் மற்றும் மீதியுள்ள ஜே.இ.இ., தேர்வுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பற்றி முடிவெடுக்கப்படும். தேதி முடிவு செய்யப்பட்டதும், நீட் தேர்வுகான பதிவும் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (15)

  • Arachi - Chennai,இந்தியா

    யோவ் தமிழ் விவசாயி போராடினானே அவனும் தரகனா. நாகரிகம் தெரியாதவர்கள் எல்லாம் இருப்பதனால் தான் நாடு இப்படி தலைகீழா போய்கிட்டிருக்கு.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    Neet வெற்றி பெற்று உயர் கல்வி முடித்த விஞ்ஞானிகள் அனைவரும் அமெரிக்கா சென்று அவர்களுக்கு வேலை செய்ங்க, இந்திய விஞ்ஞானம் ?

  • சோணகிரி - குன்றியம்,இந்தியா

    மாணவர்கள் நீட் தேர்வுக்காக நன்றாகப்படித்து தயார் செய்து கொண்டால் தேர்வெழுதி உருப்படலாம்... தீயமுக அரசின் போலி வாக்குறுதிகளை நம்பி நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தால் கட்டமண்ணாகப் போகவேண்டியது தான்..

  • rajan - erode,இந்தியா

    தேசிய தேர்வு ஆணையம் நீட் தேர்வு தேதியை அறிவித்து மூன்று முறை தள்ளிவைத்தது ஆனால் விண்ணப்பம் இன்னும் வெளியிடவில்லை இவ்வளவு உலக மகா அறிவாளிகள் நடத்தும் தேர்வு எவ்வளவு சிறப்பாக இருக்கும்

  • duruvasar - indraprastham,இந்தியா

    யோவ் தரகனுங்களுக்கு விவசாயின்னு பேரா ? இதைக்கூட பரிஞ்சிக்காத அளவுக்குத்தான் தமிழர்களின் பகுத்தறிவு இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement