Load Image
Advertisement

5 மாநிலங்களில் தொகுதி வரையறை லோக்சபா சபாநாயகருக்கு கமிஷன் கடிதம்

புதுடில்லி, மே 11-ஐந்து மாநில தொகுதி மறு வரையறை செய்வதற்கு தனி குழு உள்ளது. இதற்கான இணை உறுப்பினர்களுக்கான பெயர்களைப் பரிந்துரை செய்ய, சம்பந்தப்பட்ட மாநில சட்டசபை செயலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ல் ரத்து செய்தது. இதன் பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில், மக்கள் தொகைக்கு ஏற்ப, லோக்சபா மற்றும் சட்ட சபை தொகுதிகளை மறுவரையறை செய்ய, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த பணிகளை நிறுத்த, மத்திய அரசு உத்தரவிட்டது.



ஜம்மு - காஷ்மீரில் நிலைமை சரியானதை அடுத்து, தொகுதி வரையறை பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு கடந்த பிப்ரவரி, 28ல் அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர நான்கு மாநிலங்களில், தொகுதி மறுவரையறை பணிகளை, இதற்கான கமிஷன் துவக்கியது. இந்த கமிஷனில், சம்பந்தப்பட்ட மாநிலங்களின், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் சிலர், இணை உறுப்பினர்களாக இடம் பெறுவர். தொகுதி மறுவரையறை பற்றி, கமிஷனுக்கு அவர்கள் ஆலோசனைகளை வழங்குவர்.எம்.பி.,க்களை லோக்சபா சபாநாயகரும், எம்.எல்.ஏ.,க்களை, சம்பந்தப்பட்ட மாநில சட்டசபைகளின் முதன்மை அதிகாரியும் பரிந்துரைப்பர். இந்நிலையில், தொகுதி மறுவரையறை கமிஷனின் கூட்டம், சமீபத்தில் நடந்தது.



இதில், இணை உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர், சட்டசபைகளின் முதன்மை அதிகாரிகளை கேட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, லோக்சபா சபாநாயகர், நான்கு மாநில சட்டசபைகளின் முதன்மை அதிகாரிகளுக்கு, தொகுதி மறுவரையறை கமிஷன், இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement