Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

புத்துணர்ச்சி தரும் உருளை


தடகள விளையாட்டு வீரர்களுக்கு உருளைக்கிழங்கு கூழ் புத்துணர்ச்சியை தருகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 267 கி.மீ., சைக்கிளிங் செல்லும் 12 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் சிலர் வெறும் தண்ணீரையும், சிலர் 'ஹார்போைஹட்ரேட் ஜெல்' பானத்தையும், சிலர் உருளைக்கிழங்கு கூழையும் பருகினர். இதில் உருளைக்கிழங்கு கூழை பயன்படுத்தியவர்களுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரித்ததை கண்டறிந்தனர். உருளைக்கிழங்கு, பால், நெய், உப்பு போன்றவை பயன்படுத்தி உருளைக்கிழங்கு கூழ் தயாரிக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்





அரண்மனை மியூசியம்

சீன தலைநகர் பீஜிங்கில் 'பர்பிடன் சிட்டி' எனும் அரண்மனை மியூசியம் அமைந்துள்ளது. 1420 முதல் 1912 வரை சீனாவை ஆண்ட மிங் மற்றும் கியிங் வம்ச மன்னர்களின் அரண்மனையாக இருந்தது. பின் சீன அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடமாக சில காலம் இருந்தது. இதன் கட்டுமானப்பணி 1406ல் தொடங்கி 1420ல் திறக்கப்பட்டது. பழமையான மரங்களை வைத்து அமைக்கப்பட்டுள்ளது. 180 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 980 கட்டடங்கள் உள்ளன. 1987ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement