Load Image
Advertisement

அபராதம் விதிப்பில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு வசூல்! பிளாஸ்டிக் ஒழிப்பில் தொடரும் நிர்வாக முறைகேடு

 அபராதம் விதிப்பில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு வசூல்! பிளாஸ்டிக் ஒழிப்பில் தொடரும் நிர்வாக முறைகேடு
ADVERTISEMENT
மதுரை : மதுரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும், விற்கும் கடைகளில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் முறைகேடாக வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழகத்தில் ஜன., முதல் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நீதிமன்ற உத்தரவுபடி டிச., 10 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் நகரில் 700க்கும் மேற்பட்ட கடைகளில் மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் ஆய்வு நடத்தி, நுாற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தால் அந்த கடைக்கு 2,000 ரூபாய் வசூல் செய்துவிட்டு 500 ரூபாய்க்கான ரசீது கொடுத்துள்ளனர். அதில் கமிஷனர், சுகாதார அலுவலர், ஆய்வாளர், எந்த மண்டலம் என்பது போன்ற விபரங்களில் கையெழுத்து இல்லை. இந்த வசூல் வேட்டை கமிஷனர் பார்வைக்கு செல்லாததால், இஷ்டத்திற்கு அபராதம் விதித்து பேரம் பேசும் அவலமும் நடக்கிறது.


சுகாதாரப்பிரிவு நவீனமயமாக்கப்பட்டு, ஊழியர்களின் செயல்பாடுகள் செயலி மூலம் கண்காணிக்கப்படுவதாக நகர்நல அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபோன்ற முறைகேடுகள் கண்காணிக்கப்படவில்லை. மாநகராட்சி அபராதம் விதிக்கும் போது அதற்கான ரசீதுகள் உரிய கையெழுத்துடன் உரிய நபரிடம் பெறவேண்டும். அபராதம் விதிப்பு முறையில் முறைகேடு நிகழாமல் கமிஷனர் அனீஷ்சேகர் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.


வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement