Load Image
Advertisement

இல்லாதோருக்கு கட்ட திட்டம் 5 ஆயிரம் வீடுகள்! குடிசை இல்லா கோவையே லட்சியம்!

  இல்லாதோருக்கு கட்ட திட்டம் 5 ஆயிரம் வீடுகள்! குடிசை இல்லா கோவையே லட்சியம்!
ADVERTISEMENT
கோவை:கோவையை குடிசையில்லா நகரமாக மாற்ற, மேலும் ஐந்தாயிரம் வீடுகள் கட்ட, குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது; வீடு கட்டுவதற்கு உரிய இடங்களை தேடி வருகிறது.கோவையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்தும், ரோட்டோரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்தும், ஏராளமானோர் குடிசை/ ஓட்டு வீடு கட்டி, வசிக்கின்றனர்.இத்தகையவர்களுக்கு மாற்று வீடு கட்டிக்கொடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு, மாற்று வீடு வழங்கப்படுகிறது,மத்திய அரசு, குடிசையில்லா நகராக கோவையை உருவாக்க திட்டமிட்டு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.சொந்த இடம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.2.10 லட்சம் மானியம், அதிக பரப்பில் வீடு கட்டுவோர் வங்கி கடன் பெறும்போது, வட்டி மானியம் வழங்கப்படுகிறது.சொந்த இடம் இல்லாமல், ரோட்டோரம் வசிப்பவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்படுகிறது.குடிசைக்கு குட்பை!கோவை நகர்ப்பகுதியில் மட்டும், 124 இடங்களில், 15 ஆயிரத்து, 717 குடிசைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. படிப்படியாக இவை அகற்றப்பட்டு, வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.முத்தண்ணன் குளக்கரை மற்றும் செல்வ சிந்தாமணி குளக்கரையில் வசிப்பவர்கள், அடையாளம் காணப்பட்டுஉள்ளனர்.

விரைவில் இவர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கப்பட உள்ளது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்களில், 2,000 பேருக்கு வீடுகட்ட வேண்டியுள்ளது.சங்கனுாரில் 2,814 குடும்பத்தினர்சங்கனுார் பள்ளத்தை துார்வாரி, கரையை பலப்படுத்தி, அரைவட்டச்சாலை அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.அச்சமயம், சங்கனுார் பள்ளத்தின் கரையில் வசிப்பவர்களை காலி செய்ய வேண்டும். இங்கு மட்டும், 2,814 குடும்பத்தினர் வசிப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.மொத்தம், 5,000 குடும்பத்துக்கு புதிதாக வீடு கட்ட நிலம் தேவைப்படுகிறது.

போக்குவரத்து, குடிநீர், மின் இணைப்பு செய்து கொடுக்கும் வகையிலும், இடம் பெயர்ந்து வருவோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், குடிசை மாற்று வாரியம் இடம் தேடுகிறது.குடிசைகளே இருக்காது!குடிசை மாற்று வாரியத்தினர் கூறுகையில், 'இடம் தேர்வானதும், மண் பரிசோதனை செய்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு உகந்ததாக இருக்குமா என ஆய்வு செய்யப்படும். தகுதியாக இருப்பின், அரசுக்கு பரிந்துரைத்து, நிதி ஒதுக்கீடு பெற்று, குடியிருப்புகள் கட்டப்படும். இதன்படி, எதிர்காலத்தில், குடிசையில்லா நகரமாக கோவை உருவாகும்' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement