Load Image
Advertisement

ரூ.3,000 கோடி!

� திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு இலக்கு...� தனியார் நிறுவனம் விரிவாக்க கடன் பெற சிறப்பு முகாம்� 59 நிமிடங்களில் 1 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 3,000 கோடி ரூபாய்க்கு புதிய தொழில் முதலீடு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொழில் முதலீட்டாளர்களை கவர, பாரத பிரதமரின் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 59 நிமிடங்களில், 10 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கான, சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.பாரத பிரதமரின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, எவ்வித அலைச்சலும் இன்றி, இணையம் மூலம், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறும் திட்டம், நாடு முழுவதும், 100 மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், திருவள்ளூர், தஞ்சாவூர், வேலுார், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஆறு மாவட்டங்களில், அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் பயனை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், 100 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மற்றும் ஈக்காடு ஒன்றிய அலுவலகத்தில், 20ம் தேதி, இம்முகாம் நடந்தது.முதலீட்டாளர்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இதை துவக்கி வைத்து, இத்திட்டம் குறித்து, நமது நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி:சென்னையில், வரும் ஜனவரி மாதம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு பெற்று இயங்கி வருகின்றன. இவற்றைத் தவிர, பன்நாட்டு தொழில் நிறுவனங்களும் உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்திற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம், 3,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.அனுமதிதொழில் துவங்குவதற்கு தொடர்புடைய, பல துறைகளின் உரிமங்கள், தடையில்லா சான்றுகள், மாவட்ட தொழில் மையம் ஒற்றை சாளர அமைப்பு மூலம், ஏழு நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.மேலும் விபரங்கள் மற்றும் உதவிகளை, தொழில் வணிகதுறை இயக்குனர், மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.பாரத பிரதமரின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 59 நிமிடங்களில், 10 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதை, தொழில் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், சிறப்பு முகாம், 20ம் தேதி துவங்கியது. மாவட்டத்தின், 15 இடங்களில், வரும் ஜன., 11ம் தேதி வரை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இம்முகாம் நடைபெறும்.இதை பயன்படுத்தி, தொழில் நிறுவனங்கள், இணையம் மூலம் தங்கள் விபரங்களை பதிவு செய்து, 59 நிமிடங்களிலேயே, எளிதில் கடன் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.ரூ.50 ஆயிரம் கோடி உற்பத்திதிருவள்ளூர் மாவட்டத்தில், அம்பத்துார் தொழிற்பேட்டை, கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை, திருமழிசை, காக்களூர், திருமுல்லைவாயல், விச்சூர் ஆகிய இடங்களில், 'சிப்காட், சிட்கோ' ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு, வாகன உற்பத்திக்கான உதிரி பாகங்கள், பொறியியல் கருவிகள், பிளாஸ்டிக், ஆயத்த ஆடைகள், ரசாயன உற்பத்தி போன்ற தொழிற்சாலைகள் துவங்குவதற்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி யும், இரண்டு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.59 நிமிடத்தில் பெறுவது எப்படி?திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொழில் நிறுவனம் நடத்தி, முறையாக வங்கி கணக்கு நடத்தி, முறையாக வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்திய தொழில் முனைவோர், 59 நிமிடத்தில் கடன் பெற முடியும். அவர்கள், psbloansin59minutes.com என்ற இணையத்தில் சென்று, அதில் கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இவற்றை, பதிவு செய்ததும், இணையதளம் மூலம், அவர்களது நன்னடத்தையை சரிபார்த்து, அவர்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் என்ற விபரத்தை அளித்து, முன் அனுமதி சீட்டு வழங்கும். இந்த அனுமதி சீட்டை தாங்கள் தேர்வு செய்த வங்கியிடம் அளித்தால், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன் தொகை கிடைக்கும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement