Load Image
Advertisement

சபரிமலை: அவகாசம் கேட்டு தேவசம் போர்டு மனு

 சபரிமலை: அவகாசம் கேட்டு தேவசம் போர்டு மனு
ADVERTISEMENT
புதுடில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கேட்டு அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் மீண்டும் பதட்டம் உருவாகி உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இரவு 7மணிக்கு மேல் செல்லக் கூடாது என விதிமுறை இருப்பதாகக் கூறி நடைப்பந்தல் என்னுமிடத்தில் இருந்த பக்தர்களைக் கீழே உள்ள முகாமுக்குச் செல்ல போலீசார் கேட்டுக்கொண்டனர். இதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள், 80 பேரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.


இதையடுத்துக் காவல் நிலையத்திலும் அவர்கள் சரண கோஷ முழக்கமிட்டனர். போலீசாரின் கட்டுப்பாடுகளைக் கண்டித்துத் திருவனந்தபுரத்தில் முதல்வர் இல்லத்தின் முன் பாஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரளாவின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.


இந்நிலையில், சபரிமலை சீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் அல்போன்ஸ் இன்று சபரிமலை சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்தர்கள் பயங்கரவாதிகளோ, குற்றவாளிகளோ இல்லை. அப்படி இருக்கையில் சபரிமலையில் 15,000 போலீசார் எதற்கு? காரணமின்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அவசர நிலைக் காலத்தைவிட மோசமான நிலையை சபரிமலையில் ஏற்படுத்தி உள்ளது என்றார்.

இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கேட்டு தேவசம் போர்டு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (16)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement