Load Image
Advertisement

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேர் விடுதலை

 தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேர் விடுதலை
ADVERTISEMENT
சென்னை: பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூன்று பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார்.

2000ம் ஆண்டு நடந்த சம்பவம்





மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குற்றவியல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த, அ.தி.மு.க., தொண்டர்கள், தமிழகம் முழுவதும், வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில், கோவை விவசாய பல்கலை பஸ்சுக்கு, தீ வைத்தனர். பஸ்சில் பயணித்த, மூன்று மாணவியர், தீயில் கருகி சாம்பலாகினர்.

இது தொடர்பாக, பஸ் எரிப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டனர்; தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம், 2016 மார்ச் மாதம், ஆயுள் தண்டனையாக குறைத்தது. மூன்று பேரும், சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

தமிழக அரசு முடிவு





நீண்ட நாட்களாக, சிறையில் உள்ள, 1,800 கைதிகளை, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர், 60 வயதிற்கு மேற்பட்டோர், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் என்ற அடிப்படையில், கைதிகளை தேர்வு செய்து, அவர்களை விடுதலை செய்யும்படி, கவர்னரிடம், தமிழக அரசு பரிந்துரை செய்தது.

கவர்னர் அனுமதி அவசியம்





அரசியலமைப்பு சட்டம், 161வது பிரிவின்படி, கைதிகளை விடுதலை செய்ய, கவர்னர் அனுமதி அவசியம். தமிழக அரசு பரிந்துரை செய்த பட்டியலில், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், மூன்று பேரின் பெயர்கள் இருந்தன. அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன், கவர்னர் கலந்தாலோசித்தார். அதன்பின், அந்த மூன்று பேர் தொடர்புஉடைய கோப்புகளை, அரசுக்கு, கவர்னர் திருப்பி அனுப்பினார். அவர்களை விடுவிக்க கோரும் முடிவை, மறுபரிசீலனை செய்யும்படி, அரசுக்கு அறிவுறுத்தினார்.

ஆனால், தமிழக அரசு, அவர்களை விடுவிக்க கோரி, மீண்டும் கவர்னருக்கு, கோப்புகளை அனுப்பியது. இச்சூழ்நிலையில், மூன்று பேரையும் விடுவிக்க கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். விடுதலையான முனியப்பன் தர்மபுரி புளியம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார்.



வாசகர் கருத்து (110)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement