Advertisement

கஷோகியின் உடல் ரசாயனத்தில் கரைப்பு

இஸ்தான்புல்: துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரசாயனத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக துருக்கி செய்தி தொடர்பாளர் யாசின் அக்தே கூறியதாவது: இஸ்தான்புல் சவுதி அரேபிய துணைத் துாதரகத்தில் கொல்லப்பட்ட செய்தியாளர் கஷோகியின் உடல், துண்டு துண்டாக வெட்டப்பட்டது.கொலையை மறைப்பதற்காக அவரது உடல் ரசாயனத்தில் கரைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.அவரது உடல்பாகம் கண்டெடுக்கப்பட்ட துாதரக அதிகாரியின் வீட்டு குழாயில் இருந்து சில அமில ரசாயனங்கள் கசிந்ததை கண்டறிந்த விசாரணை அதிகாரிகள், அவை மனித உடலை கரைக்கும் தன்மை கொண்டவை என்பதையும் உறுதி செய்தனர். துாதரகத்தில் இருந்தவர்கள் கஷோகியின் உடலை சிறு துண்டுகளாக்கியது, அதனைக் கரைப்பது எளிதாக இருக்கும் என்பதற்காகத்தான் என்பது தெரிகிறது, என்றார். இந்த தகவலை அறிந்த கஷோகியின் காதலி, கஷோகியைக் கொலை செய்தவர்கள், அவரை மிகவும் நேசித்தவர்கள் அவரது இறுதி அஞ்சலியை செய்ய வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தையும் அழித்து விட்டார்கள், அவரது மறைவுக்குப் பிறகு அவரது உடலை மதீனாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையையும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று வேதனையை தெரிவித்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement