Advertisement

போராடுவதை கைவிடாதீர்கள்

கொழும்பு,: ஜனநாயகத்திற்காக போராடுவதை மக்கள் கைவிட்டு விடக்கூடாது என இலங்கை முன்னள் பிரதமர் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கையில் அதிபர் சிறிசேனா அக். 26ம் தேதி ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரம சிங்கே தான் பதவி விலகவில்லை என அறிவித்துள்ளார்.சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை நவ.16ம் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். தற்போது நாடாளுமன்றம் 14-ந் தேதி கூடும் என அவர் அறிவித்தார்.இலங்கையில், ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக, கொழும்பு நகரில் வாகனப் பேரணி நடந்தது.இந்நிலையில், தனக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிய போராடிய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ரனில் விக்ரமசிங்கே, ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement