Advertisement

எச்- 1பி விசாக்கள் பிரச்னையில் விதிகளை மாற்ற டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக தற்போது இருக்கும் எச்-1பி விதிகளில் மாற்றங்களை செய்ய அமெரிக்காமுடிவு செய்துள்ளது.அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு 'எச்-1 பி' விசாக்களை வழங்கி வருகிறது.இந்த 'எச்-1 பி' விசாக்களுக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விசா கேட்டு விண்ணப்பங்கள் குவிவதும், குலுக்கல் நடத்தி விசா வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.'எச்-1 பி' விசாக்களால் அமெரிக்காவில் உள்நாட்டினரின் வேலை வாய்ப்பு பாதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த 'எச்-1 பி' விசாக்களில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, பிற நாட்டினர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலானது. கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை.இந்நிலையில் மிகவும் திறமையான தொழில்நுட்ப தொழிலாளர்கள் நாட்டில் தங்குவதை உறுதிப்படுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளார். டிரம்ப் இந்த முழு குடியேற்றத்தின் ஒரு மிகவும் சாதகமான பகுதியாக காண விரும்புகிறார், என வெள்ளை மாளிகை கொள்கை ஒருங்கிணைப்புக்கான பணியாளர்கள் துணைத் தலைவர் கிறிஸ் லிடெல் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement