Advertisement

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், அடுத்த வாரம், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், நவ., 11 - 18 வரை, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பபுவா நியூ கினியா ஆகிய நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது, சிங்கப்பூரில் நடக்க உள்ள, அமெரிக்கா- - ஆசியன் மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நடக்க உள்ள, ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில், அவர் பங்கேற்கிறார்.இந்த மாநாடுகளில், அமெரிக்கா சார்பில், அதிபர் பங்கேற்பது தான் வழக்கம். இந்த முறை, அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கையை ஏற்று, துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்க உள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சந்தித்து பேச உள்ளளார். அப்போது, இரு நாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர் என, தெரிகிறது.இதே போல், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியன் லுாங், பபுவா நியூ கினியா பிரதமர் பீட்டர் ஒ நெயில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மேரிசன் ஆகியோரையும், துணை அதிபர் மைக் பென்ஸ் சந்திக்க உள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement