Advertisement

இலங்கை பார்லி., கலைப்பு?

கொழும்பு: இலங்கை பார்லிமென்டை, நேற்று இரவு கலைத்து, அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இலங்கையில், மைத்ரிபால சிறிசேன அதிபராக உள்ளார். ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, பிரதமராக நியமித்தார், சிறிசேன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராஜபக்சே, அந்நாட்டு பார்லிமென்டில், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அவர் சார்ந்திருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு, போதிய எம்.பி.,க்கள் ஆதரவு இல்லாததை அடுத்து, ராஜபக்சே பிரதமராக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. நவ., 14ல், பார்லி., கூடும் என கூறப்பட்ட நிலையில், 225 உறுப்பினர்கள் உடைய பார்லி மென்டை கலைத்து, அந்நாட்டு அதிபர் சிறிசேன, நேற்று இரவு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரியில், பார்லிமென்ட் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement