Advertisement

சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு முழு ஆதரவு: ஸ்டாலின்

சென்னை : எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவு தருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்கு பின் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.


முழு ஆதரவு:
ஸ்டாலின் பேசியதாவது: பா.ஜ.,வை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் இணைய வேண்டும். இதற்காக சந்திரபாபு நாயுடு எடுத்துள்ள முயற்சிக்கு திமுக முழு ஆதரவை தருகிறது. ஆர்.பி.ஐ., சிபிஐ போன்ற அமைப்புகளை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் வகையில் பா.ஜ., அரசு நடந்து வருகிறது. விரைவில் அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக சந்திரபாபு நாயுடுவிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.


ஓரணி:
சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஜனநாயகத்தை காக்க காங்., உட்பட அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். திமுக.,வுடன் பல காலமாக நல்ல உறவு உள்ளது. நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது; வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மல்லையா போன்ற நபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று வெளிநாடு தப்பிவிட்டனர். காங்., கட்சியுடன் வேறுபாடு இருந்தாலும் ராகுலை சந்தித்தேன். அடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளேன். வலிமையான மாநில தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (80)

 • madhavan rajan - trichy,இந்தியா

  ஓ மஞ்சத்த துண்டு கை மாறிடுச்சா?

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  கூட்டணி என்கின்ற யானையை தடவி அதை பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் குருடர்கள்.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  தெலுங்கர்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டார்கள். அப்படி என்றால் இனி இதற்கு மதசார்பற்ற தெலுங்கர் கூட்டணி என்று பெயர் வைத்து கொள்ளுங்கள்.

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  அப்போ கூட்டணி தலைவர் யார் பிரதமர் யார் அவர் இல்லையா ? ஹையோ பாவம் கொஞ்சம் கனவுகாணவாவது விடுங்கப்பா

 • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

  இதே கலைஞராக இருந்தால் நாய்டுவுக்கு முழு ஆதரவு என்று கூறாமல், தொங்கலில் விட்டு அரசியல் ஆதாயம் கண்டிருப்பார். தளபதிக்கு பத்தலை.

 • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

  தன கட்சிக்கு இனிமேல் போணி ஆகாது , ஜெகன் தான் அடுத்த முதல்வர் என்று தெரிந்ததும் , ராகா கிட்ட பேசறாரு, எல்லாரையும் இணைக்கிறாரு, எனக்கு பிரதம மந்திரி ஆசை இல்லைங்கிறாரு.நாய்டுகாரு ரொம்ப கொழம்பிட்டாரு. தளபதி, சர்க்கார் 2 கதைக்கு வேற எங்கேயும் போக வேண்டாம்.

 • Vel - Chennai,இந்தியா

  சைக்கிளை துடைக்க சுடலையா. இல்லை பாவம் சைக்கிள் நாயுடு.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  அப்போ நம்ப சுடலையை அடுத்த பிரதம மந்திரியா ஆக்கிடுங்க

  • madhavan rajan - trichy,இந்தியா

   ஆந்திராவுக்கு சுடலை தான் அடுத்த பிரதமர்.

 • அருணா -

  லட்டும் பிரியாணியும் கை கோர்த்தால் இரண்டின் சுவையும் கலந்து சகிக்காது.

 • Gopi - Chennai,இந்தியா

  மறத் தெலுங்கர்கள் கூட்டணி என்று பெயர் வைக்கலாம். திருப்பதி வனத்தில் 21 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட விவரத்தை தாடி கேடி நாயுடுவிடம் கேட்டார்களா. மான த் தெலுங்கன் வைகோ எங்கு போனார்

  • madhavan rajan - trichy,இந்தியா

   அதெல்லாம் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து செய்த கூட்டு சதி. அதில் ஆந்திர முதல்வருக்கு பங்கில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள். இல்லையென்றால் அப்போது நாயுடு அவர்கள் பாஜக சொன்னபடி செய்திருப்பார். அவர்மீது தவறில்லை என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இனம் இனத்தோடு சேருகிறது

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  தந்தை மொழி மீது கொண்ட பாசமோ?

 • HSR - Chennai,இந்தியா

  சூஸைய பாக்கயிலே ஹை எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்று பினாத்தும் சின்னத்தம்பி கேரக்ட்டர் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாதது..

 • Indhuindian - Chennai,இந்தியா

  நல்ல காரியம்தான் ஆனா பிரதம மந்திரி யாரு? எப்படி செலக்ட் பண்ணபோறீங்க? ரொட்டேஷனல் முறையா? சீட்டு குலுக்கி போட்டா? அல்லது சுருட்டறதுலே சீனியரிட்டி பார்த்தா? இதெயெல்லாம் இப்பவே சொல்லிட்டா வோட்டு போடறவங்களும் கொஞ்சம் உஷாரா இருப்பாங்க

  • madhavan rajan - trichy,இந்தியா

   ஜெயிப்போம் என்ற நம்பிக்கையிருந்தால் பிரதமர் யார் என்று சொல்லமாட்டோமா? எங்கள் கூட்டணி அறுதிபெரும்பான்மை பெற்றுவிட்டால் அப்போ அதற்காக அடிச்சிக்கலாம் என்ற கொள்கைதான். இப்பவே யாரையாவது அறிவிச்சுட்டா கூட்டணி வெல்வதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறையும். எவ்வளவோ கணக்கு இருக்கு. மெஜாரிட்டி வந்துட்டா மன்மோகன் மாதிரி யாராவது ஒருத்தர் கிடைக்காமலா போயிடுவாங்க. அவரை ஒக்கார வச்சுட்டு எல்லா கூட்டணித் தலைவர்களும் வழி நடத்தும் குழுவில் இருந்து அந்த திருதராஷ்டிரரை வழி நடத்துவாங்க.

 • s t rajan - chennai,இந்தியா

  நாயுடுவுக்கு மத்திய அரசு, புதிய ஆந்திர மாகாணம் உருவாக்குவதற்கு, வாரி வழங்கிய நிதி உதவிகளுக்கு கணக்கு கேட்டதால் வந்த முடிவுதான் இந்த கௌரவ (மில்லா) சுயநலக் கூட்டணி. எம்ஜீஆர கணக்கு கேட்டார், திமுக இல்லாமல் போயிற்று. இப்போது தெலுகு தேசக் கும்பலும் அழியப் போகிறது. போற போக்கில் திமுகவையும் காங்ஙிரஸையும் அழிக்கப் போகிறது. நாட்டுக்கு நல்லது செய்யும் தேசிய "வைகோ" வை வாழ்த்துவோம்.

 • jayanantham - tamilnaadu ,இந்தியா

  ரெண்டும் ரெண்டு அகப்பை ரெண்டும் கழண்ட அகப்பை.

 • Siva Kumar - chennai,இந்தியா

  எப்பவுமே ஜால்றாதானா? சொந்த புத்தியே கிடையாதா?இப்படி இருந்தா திமுகவில் உங்களை முடிச்சுடுவாங்களே.

  • madhavan rajan - trichy,இந்தியா

   இப்போதைக்கு ஜால்றாதான் நல்லது என்று ராகுலிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பார். ராகுல் கர்நாடகாவில் குருமாசாமிக்கு ஜால்றா அடிச்சதனால் தான் காங்கிரஸ் இப்போது அங்கு control ல் இருக்கிறது.

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  ஆரம்பத்தில் எல்லாம் பேச, கேட்க மிகவும் நன்றாக உள்ளது. அப்படியே இவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தலில் பிஜேபி யை தோற்கடித்தால், அதன் பிறகு இவர்கள் ஆட்டம் படு ஜோராக இருக்கும். பதவி, துறைகள் என்று இவர்களின் இழுபறி அரங்கேறும். அதன்பின் இவர்கள் கூட்டணி கலையும். பிறகு சொல்லவே வேண்டாம் என்ன நடக்கும் என்று. மக்கள் யோசிக்க வேண்டும்.

 • அருணா -

  ..... கூட்டமா வரும் (சேரும்) வசனம் நினைவை விட்டு நீங்காத வசனம்.

 • Mani S -

  2 best culprits in India. Ahead to March. But, this will never work since both are in hungry.

 • vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ

  ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நான்கு MLA'க்கள் கூட BJP'க்கு இல்லை ஆனால் பிஜேபி தான் இவர்களுக்கு எதிரி. மேற்கு வங்கத்தி லும் இதே நிலைமை. இல்லாத பிஜேபி இ வீழ்த்தி இவர்கள் சாதிக்கப்போவது என்ன? எவ்வளவு காலம் தான் மக்களை முட்டாள்களாக்குவார்கள் இவர்கள்? பிஜேபி யை எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு காங்கிரஸ் யை வலுவற்றதற்காக ஆக்குகிறார்களா? அல்லது தங்களது வாரிசுகளுக்கு எதிர்காலத்தில் பிஜேபி சவாலாக இருக்கும் என்பதால் அதனை வலுவற்றதாக மற்ற முயலுகிறார்களா? அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் பிஜேபி தமிழ்நாடு மற்றும் ஆந்திர வில் முக்கிய கட்சியாக வர வாய்ப்பு இல்லை. அதன்பிறகு சொல்லமுடியாது. அதனால் நிட்சயமாக தங்களது வாரிசுகளுக்காக தான் இவர்கள் நடிக்கிறார்கள்.

  • Ramamoorthy P - Chennai,இந்தியா

   திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு என்னதான் கூட்டணி வைத்தாலும் யாரை எங்கே எந்த நேரத்தில் எப்படி வைப்பது என்கின்ற சாதுர்யம் இருந்தது. தனக்கும் தன் கட்சிக்கும் சாதகமாக எந்த ஒரு விஷயத்திலும் அவர்களை தள்ளி வைத்தே முடிவெடுப்பார். இது அவருடனிருந்த பாலு, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்றவர்களுக்கு தெரியும். கருணாநிதியின் அரசியல் சாமர்த்தியம் அவர்களுக்கு தெரிந்த அளவுக்கு ஸ்டாலினுக்கு தெரிய வாய்ப்பில்லை. இப்போது ஸ்டாளின் திராவிட கழக அனுதாபிகள் கூட்டத்தின் பிடியில் இருக்கிறார். அவர்கள் இவரை வழி நடத்துகிறார்கள்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  மாமனாரை ஏமாற்றிய நாயுடு அண்ணனை ஏமாற்றியவரோடு கூட்டணி பற்றி பேசி மக்களை ஏமாற்ற திட்டமா? நாயுடு அறிவாளி இவரு எப்படி கோமாளியுடன்........

  • madhavan rajan - trichy,இந்தியா

   யானைக்கும் அடி சறுக்கும்.

 • Anbu -

  Pathetic Stalin ji and opportunist Chandra Babu Ji you cant move a single stone

 • C.Elumalai - Chennai,இந்தியா

  பிஜேபி ஆட்சியில் திமுக அங்கம், வகித்து 4 1/2,ஆண்டுகள் பதவிசுகத்தை அனுபவித்துகொண்டே,காங் கூட்டணி கண்டது.நாயுடுகாரும் 4ஆண்டுகளாக பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, பிஜேபிமீது,குறைகூறுகிறார்.ஆக இடந்தேடும் கூட்டமிது.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோடியை விட ஸ்டாலின் நல்ல ஆட்சி கொடுப்பர் என்று போட்டார் பாரு ஒரு போடு .

  • நக்கல் - ,

   அவர் ஆங்கிலத்தில் சொன்னது ஸ்டாலினுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.. எல்லாதுக்கும் அசடு வழிய சிரித்து கொண்டிருந்தார்..

  • HSR - Chennai,இந்தியா

   பூச்சி புளகாங்கிதம் அடைகிறார்..

 • Preabhu - Tiruppur,இந்தியா

  இப்பொழுது பினாமி பெயரில் சொத்து வாங்க முடியவில்லை. வருகின்ற வருமானமத்திற்கு கணக்கு காட்ட வேண்டி இருக்கிறது . ஆட்டைய போட்டாலும் ரெய்டு பண்ணி அள்ளிக்கிட்டு போயிடுறாங்க. அதனாலதான் பி.ஜே.பி க்கு எதிராக கூட்டணி அமைக்கிறார்கள்.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இன்றைக்குத்தான் மழை வரும்போல தெரிந்தது அதற்குள் இந்த போட்டோவை போட்டு ஏன் தினமலர் விவசாயிகளுக்கு இடஞ்சல் செய்கிறது....

 • பாண்டியன் -

  எதுகுய இப்டி தெரு தெரு வா போய் பிச்சை எடுக்குற

 • பாண்டியன் -

  பிஜேபி மக்களுக்கு கெடுதல் செய்கிறார்கள் அப்படினா மக்கள் அவர்களை நிராகரிக்க போராக நீங்க எதுக்கு ஒன்னு சேரனும் ........ அதுக்கு காரணம் மக்கள் பிஜேபி நம்புகிறார்கள் அதுனால உங்களுக்கு ஓட்டு போயிரும் அப்படிக்கிற காரணம் தான் .....

  • madhavan rajan - trichy

   அபிமன்யு என்ற ஒரு சிறுவனைக் கொல்வதற்கே எவ்வளவு மாவீரர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அந்த மாவீரர்களெல்லாம் தனித்து நின்றால் அந்த சிறுவனை வெல்ல முடியாது என்பது தெரிந்ததால்தான். அதைத்தான் இப்போது இவர்கள் செய்கிறார்கள். மோடி ஒரு மாநில முதல்வராக இருந்தபோது அவரெங்கே மேலே வரப்போகிறார் என்று நினைத்தவர்கள் இன்று அவரின் அபார வளர்ச்சியைக் கண்டு உதறல் எடுத்ததில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

  • மலரின் மகள் - EDINBURGH

   அபிமன்யு சிறுவனா? மகா பாரத யுத்தத்தில் பங்கேற்கும் உத்தரை கருவுற்றிருந்தால் அல்லவா? யுத்தத்தில் பங்கேற்ற அனைவரிலும் இளைய வயதுடையவன் என்று கூற கூட முடியாது. கர்ணனின் மகன் தான் மிகவும் இளைய வயதுடையவன். (கர்ணனின் மகன் பெயர் என்ன அங்கதனா?)

 • adalarasan - chennai,இந்தியா

  நாய்டுகாரு வருமானவரி,ED கண்டு பீதி அடைந்து ,இப்ப மடிய அரசை கவிதால்தான், தப்பிக்கலாம் என்பதுபோல் உள்ளது, அவருடைய பேச்சுக்களில் இருந்துஅவர்மீது, ஆந்திராவில் எதிர்க்கட்சிகள், நிலம், [அமராவதி] அலாட் செய்வதில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன அதனால் …...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இவர் mamanaarஆன்மா இவரை மன்னிக்கவே மன்னிக்காது

 • Bala - chennai,இந்தியா

  தமிழ் நாட்டையும் தமிழர்களையும் கேவலப்படுத்தியவர் இந்த சந்திரபாபு நாயுடு. எங்கே தமிழக அரசு இருக்கிறது என்று கேட்கிறார். இதே கேள்வியைத்தான் ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் இவரைப்பார்த்து கேட்கின்றன. ஸ்டாலின்கூட மோடியைவிட better என்.று சொன்னதே ஸ்டாலினை கேவலப்படுத்தியதுபோலதான். தி மு க கடுமையாக இதற்கு ஆட்சேபித்திருக்க வேண்டும். மாறாக ஸ்டாலின் சிரித்தது அவரது அறியாமையை காட்டுகிறது. சந்திரபாபு நாயுடு சென்னை வந்து பெரியண்ணன் போல் செயல்படுவதை அதிமுக வன்மையாக கண்டித்திருக்க வேண்டும்.நாயுடு எங்கே அரசாங்கம் என்று கேட்பது ஓட்டுப்போட்ட தமிழர்களை கேவலப்படுத்துவது போல். எங்கள் பிரச்னையை நாங்கள் தேர்தலிலே தீர்த்துக்கொள்கிறோம். நாயுடு நீ புரோக்கர் வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. நீ சீக்கிரம் ஆந்திராவுக்கு ஓடு. உன் ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் வேட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  ...மோடி என்கின்ற மாபெரும் தலைவனை வீழ்த்த நினைக்கும் தேசவிரோத பீடைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். ஜனநாயகத்தை "வாரிசு நாயகமாகிக்" கொண்டிருக்கும் பிண்டங்களை ஒதுக்க தேசாபிமானிகள் பாடுபட வேண்டும்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  மோடிக்கு எதிராக நாய்டுவோட ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு... நாயுடு ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு.. அந்த சந்திப்புல ஒரே ஒரு கேள்வி கேட்டிருந்தால் நாயுடு ஸ்டாலின் ரெண்டுபேரும் அசடு வழிஞ்சிருப்பாங்க... என்னுடைய அந்த கேள்வி இதுதான்... காங்கிரஸ் ஒரு வேளை ஆட்சி அமைச்சு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தா திமுக அதை ஆதரிக்குமா??? இதை கேட்க ஒரு ஊடகம் இல்லையே??

  • madhavan rajan - trichy,இந்தியா

   நாங்கள்தான் பக்கா சோஷலிசவாதிகள் ஆயிற்றே. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து கொடுங்கள் என்று கேட்டு வாங்கிவிடுவோம். இது எப்படி இருக்கு? சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன என்பது சுடலைக்கு தெரியும் என்றா நினைக்கிறீர்கள்?

 • G Mahalingam - Delhi,இந்தியா

  முன்பு தனி தனி மாநில கொள்ளை, இப்பொழுது கூட்டு கொள்ளை. வாரிசு அரசியல் ஜாக்பாட் .

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ச.பாபு.நாயுடு ஸ்டாலின் சந்தித்ததும், பிஜேபி யும் அதன் பினாமி அதிமுக வும் ச்சும்மா அதிர்ந்து போய் நடுங்கி, கச்சாமுச்சான்னு பெனாத்தறாங்க பாவம். நிதிஷ்குமாருடன் அ___ஷ சந்தித்து கூட்டணி அறிவித்த போது யாரும் இந்த அளவு அலட்டிக்கவே இல்லை என்பதை நோட் பண்ணுங்க. நன்றி

  • sankar - trichy,இந்தியா

   கோமாளிங்க கூத்துக்கு நாங்க கண்டுகிறதே இல்லை

 • rmr - chennai,இந்தியா

  மக்களுக்கு நல்லது செய்யவா இவர் சேருறாரு இல்லை தெலுங்கனும் தெலுங்கனும் சேருறானுங்க தமிழனுக்கு அப்பு அடிக்க எண்ணாதே உண்மை ஊழல் கழகம் ஒழிக

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இந்த கூட்டணி கொள்கை கூட்டணி இல்லை கொள்ளை கூட்டணி.

 • Sundar - Chennai,இந்தியா

  பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அனுபவித்து இப்போது கூடுதாவி விட்ட இவரை இனி சந்தர்ப்பவாத நாயுடு என்று அழைக்கலாம்

  • madhavan rajan - trichy,இந்தியா

   இனம் இனத்தோடு சேரும். பிஜேபி ஆட்சியில் பதவி சுகம் (ஓராண்டிற்கு கோமாவில் கிடந்த மாறன் கேபினெட் அமைச்சராக தொடர்ந்தார்) கண்ட திமுக இப்போது பாஜகவைப் பழிக்க வில்லையா. அதுபோலத்தான்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  மஞ்சள் சால்வையை போட்டு இடத்தை ரிசர்வ் பண்ணி வைப்போம் ..எதிர்காலத்துல எதுக்கும் ஆவும் ...

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The efforts of Mr.K.Chandra Babu Naidu to bring all the opposition parties in one umbrella to fight against one single party BJP remains me the Koottani of all nations to fight against the great Napoleon Bonapart of French were not able to defeat him till end.The same will happen to this Koottani of all opposition parties of our country with the BJP in coming Lokh Sabha election of 2019 also.

  • HSR - Chennai,இந்தியா

   VERY CLEAN ANALYSIS SIR. HATS OFF

  • xpsmaroon - ,

   napolean was defeated in waterloo battle and send to st.helena island as a prisoner

 • kulandhaiKannan -

  வாரிசு அரசியல் நடத்துபவர்களெல்லாம் சேர்ந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிறது என்று கேனையர்கள் கூவுகிறார்கள்

 • KV Pillai - Chennai,இந்தியா

  நாயுடு - ராகுல் சந்திப்பினால், நாயுடுவுக்கு ஆந்திராவில் பலன் இருக்குமோ இல்லையோ காங்கிரசுக்கு இந்திய அளவில் பெரிய வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். கர்நாடக வெற்றி மற்றும் அந்த சந்திப்பின் விளைவாக தி மு க வும் அதிக தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Kevalamaana arasiyalvaathi pathavikkaaka yaar kaalil vumaanaalum vizhukiraarkal

  • madhavan rajan - trichy,இந்தியா

   அதைத்தான் காங்கிரஸ் பலமுறை செய்துவிட்டதே. கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரசை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற அதே கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவிலேயே காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தது 2004 முதல். சமீபத்தில் கர்நாடகாவில் குருமாசாமி காலில் விழுந்தார்கள், தேர்தலில் தீவிரமாக எதிர்த்தபின். நேர்மையான, வலிமையான ஒரு ஆளை எதிர்க்கவேண்டுமென்றால் வலிமையில்லாத நேர்மையில்லாத பல திருடர்கள் ஒன்று சேர்வது இயல்பே. இதை எவ்வளவு திரைப்படங்களில் கண்டிருப்பீர்கள். இப்போது நேரில் காணும் வாய்ப்பு.

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  ரெண்டு தெலுங்கலுன்களும் தெலுங்குல என்ன மாட்லாடிருப்பானுவோ....தமிழ்நாட்டை முன்னேத்துறத பத்தி இருக்குமோ....இல்லியே இருக்காதே...ஒருவேளை இந்தியாவை பத்தி இருக்குமோ....சே சே வாய்ப்பே இல்ல...செயலுக்கு கூரை ஏறி கோழி வேண்டாம் ஒரு குஞ்ச கூட புடிக்க முடியல...இந்த லெச்சணத்துல துணை பிரதமராக போறாராம்டோய்...

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  நாடு நாசமா போனதுக்கு காரணம் தேசிய கட்சிகள் தான். அவர்களுக்கு என்றுமே majority கிடைக்க கூடாது . திராவிட இந்தியா தான் மொத்த இந்தியாவுக்கும் உழைத்து வரி கட்டுகிறது .

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   ஹி, ஹி, ஹி ... உங்கள் கருத்தில் பத்து சதவீதம் உண்மை - காங்கிரெஸ்ஸை பொறுத்த வரை, 90 சதவீதம் காமெடி...

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  நாயுடுகாரு ஆந்திராவில் வரும் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி , பவன் கல்யாண் இருவரின் கட்சிகளுடன் potti போட்டு வெல்வது கடினம். இவர் அங்கே கோட்டை விட்டால், மத்தியில் இவரை மற்ற கட்சிகள் புறக்கணிக்கும். இலவு காத்த கிளி கதைதான்.

 • Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா

  பாலாற்றின் குறுக்கே நான்கு தடுப்புகள் கட்டி தண்ணீர் தமிழகம் வருவதை மறைமுகமாக தடுத்தவர் , காவேரி நீரை 'ஒரு சொட்டு கூட ' கொடுக்க மாட்டோம் என்று கூறி காவேரியில் வெள்ளமோ வெள்ளமோ வந்தபோது தங்கள் நலன் கருதி வேறு வழி இல்லாமல் திறந்து விட்டவர் , இலங்கை அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கில் கொலை ராஜ பக்சேயால் கொலை செய்யப்பட்டபோது வேடிக்கை உண்ணாநோம்பு இருந்து மண்ணு மோஹனை அதை தடுக்க ஆதாயம் பண்ணாமல் போன தமிழ் தலைவரின் ,சுயநலப்புலியின் மகன் கூட்டு சேர்வது நியாயமே

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  எந்தவித ஆதாரங்களுமே இல்லாமல் மீண்டும் மீண்டும் கொள்ளை கட்சி ஊழல் கட்சி என்று சொல்லிக் கொண்டே இருப்பதன் உத்தேசம் தான் என்ன? இன்று சிபிஐ சுமத்திய பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்புகள் பற்றிய.எல்லா வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. பொய் குற்றச்சாட்டுகள் என்றுமே நிலைக்காது என்பது மீண்டும் நிரூபணமாகி விட்டது. என்ன செய்யப் போகிறார்கள்? இனி உயர் நீதிமன்றத்தை திட்டுவார்களா?

  • Muruga Vel - Chennai,இந்தியா

   இதையே எல்லா இடத்திலும் எழுதுவியா …

  • madhavan rajan - trichy,இந்தியா

   பி எஸ் என் எல் வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்களை முறையாக பதிவு செய்யுமாறு CBI - நீதி மன்றத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முறையாக பதிவு செய்யாதது அன்றைய UPA அரசின் நிர்வாகத்தில் இருந்த CBI இன் குற்றம்.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  மஞ்ச சால்வய போத்தி அவரையும் ஒரு வழி ஆக்கிடுவார் போல தெரியுது

 • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

  எடப்பாடி அரசை நிலை குலயச்செய்ய முடியாமல் ஸ்டாலினே தமிழகத்தில் தடுமாறும் வேளையில் இவர் வேற வந்து துக்கம் விசாரிக்கிறாரா? உருப்பட்டா மாதிரி தான்.

  • madhavan rajan - trichy,இந்தியா

   தமிழகத்தில் திமுகவிடம் அதிக சீட் வாங்க ராகுலால் அனுப்பப்பட்ட தூதர் நாயுடு என்றால் தவறில்லை. ஒரு முறை சோனியாவின் அதட்டலுக்கு முக பணிந்து அதிக சீட்கள் கொடுத்து வாய்ப்பை கோட்டை விட்டார். கூடா நட்பு அடிக்கடி கூடிய நட்பாக மாறும். அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி யோடு கைகோர்த்த நாயுடுவும் காங்கிரசை கழற்றிவிட்ட திமுகவும் ஒண்ணு சேருது. தவளையும் எலியும் நட்புக்காக காலைக் கட்டிக்கொண்ட கதைதான்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எங்க தலைவரு எப்ப கர்நாடக காவேரில் தண்ணி திறந்து விட சம்மதிப்பார்களோ அப்போது தான் கர்நாடக அரசு உள்ள கூட்டணியில் சேர்வேன் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிட்டாரு ?? ஏன் என்றால் அவர்க்கு தமிழ் மக்கள் முன்னேற்றம் தான் முக்கியம் பாருங்கோ

  • madhavan rajan - trichy,இந்தியா

   அப்படியெல்லாம் கொள்கைக்காக மானஸ்தனாக வாழ தந்தையார் கற்றுக்கொடுக்கவில்லையே. மானஸ்தனாக வாழ்ந்தால் பதவியும் கிடைக்காது, காசும் சம்பாதிக்க முடியாது என்றுதான் சொல்லிக்கொடுத்திருக்கிறார். பதவியும், காசும் இருந்தால் எப்படி வேணுமின்னாலும் வளைச்சு வளைச்சு பேசி மக்களை மயக்கிடலாம்.

 • sridhar - Chennai,இந்தியா

  ஒரு மோடியை எதிர்க்க எத்தனை குட்டித்தலைவர்கள் தேவை படுகிறது... ஆனால் சிங்கத்தை எதிர்த்த சிறு நரி நிலைதான்.

  • kk - ,

   super

 • rajan. - kerala,இந்தியா

  ஓ அப்போ சுடலையின் ஊழல் பகிர்மான சங்கம் உதயமாயிடுமோ. இந்த ஊழல் எதிர்க்கட்சிகளின் பொழைப்பே ஆட்டைய போட்ட சொத்து பத்துகளை சட்டம் போட்டு பாதுகாக்க தான் இத்தனை அக்கபோரு.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  சந்திரபாபு நாயுடு போகும் பாதை எது என்பது வெட்ட வெளிட்சமாகிறது. ஷா கமிஷனுடனும் சர்க்காரியா கமிஷனுடனும் வலிய போய் கூட்டு சேர்கிறார். அவர் எந்த கமிஷனில் மாட்டப்போகிறாரோ தெரியவில்லை.

 • rajan. - kerala,இந்தியா

 • s t rajan - chennai,இந்தியா

  கொள்ளையர்கள் கூட்டு சேர்ந்து நாட்டை சூறாடிவிடுவார்கள். மக்கள் இந்த சுயக்குடும்பக் கொள்ளையர்களை 2019ல் நாட்டின் அரசியல் களத்திலிருந்து எங்குமே இல்லாமல் செய்ய வேண்டும்.

  • madhavan rajan - trichy,இந்தியா

   நம் மக்கள் அவ்வளவு தெளிவானவர்கள் என்றா நினைக்கிறீர்கள்? அன்னிக்கு ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்குதுன்னு பார்த்து அதுக்கேத்தமாதிரி ஓட்டுப்போடுகிறவர்கள்தான் மெஜாரிட்டி. எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் சிந்தித்திருந்தால் காமராஜரைத் தோற்கடித்திருப்பார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement