Advertisement

பரவும் பன்றிக்காய்ச்சல் : ஒரே நாளில் 6 பேர் பலி

சென்னை : பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று (நவ.9) ஒரே நாளில் 6 பேர் பலியாகி உள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் அத்தனூரை சேர்ந்த அங்காயி என்பவர் பன்றிக்காய்ச்சல் காரணமாக சேலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அங்காயி உயிரிழந்தார்.


மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவேடகத்தை சேர்ந்த லட்சுமி. திருமங்கலத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


இவர்களைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சூலூரில் புஷ்பா என்ற பெண்ணும், பீளமேட்டில் காயத்ரி என்ற பெண்ணும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கீழ ஓடைத்தெருவை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • MaRan - chennai,இந்தியா

    திரு GMM சொல்வது போல,, நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்,, வெறுமெனே புலம்புவதில் ஒரு பயனும் இல்லை,, இளைஞர்கள் முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்,,, இனியும் தாமதிக்காமல் களத்தில் இறங்குவோம்,,

  • GMM - KA,இந்தியா

    சுமார்500 குடும்பங்கள் ஒரு குழுவாக இணைய வேண்டும். சிறு தொகையினை வசூலித்து தினமும் காலையில் குப்பைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து, கிடங்கில் சேர்க்க வேண்டும். வாய்க்கால், மழை நீரை வடித்து விட வேண்டும். இடங்களை தானம் செய்து, குளியலறை, கழிப்பிடம் உருவாக்க முடியும். அருகில் உள்ள குளங்கள் பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். அல்லது சிறந்த லஞ்சம் இல்லா நகரசபை வேண்டும்.

    • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

      உங்களின் சிந்தனை பாராட்டுக்குரியது. ஆனால் செயல் வடிவம் தான் சிரமம். நமக்குள் பொது சிந்தனையும் கிடையாது. ஒற்றுமையும் கிடையாது. ஒரு நல்ல எண்ணம் கொண்ட தீரம்மிக்க தலைவர் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். நமக்கு தெரிந்ததெல்லாம் உ.பி மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் மட்டும் இல்லாததனால் தான் குழந்தைகள் இறக்கின்றன என்ற ஒரு யூகத்தில் யோகி ஆதித்யநாத் அவர்களை வசை பாடுவது தான்.

    • Sabari - Thanjavur,இந்தியா

      அறிக்கை வெளியிடும் அடிமைகள் அரசு என்ன செய்கிறது? ஓ சர்க்கார் பட எதிர்ப்புக்கு அனைத்து அடிமைகளும் பேனர் கிழிக்க போயிருக்கலாம்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement