Advertisement

சிங்கப்பூரில் பட்டாசு 2 இந்தியர்கள் கைது

சிங்கப்பூர்:தென்கிழக்காசியாவின் தீவு நாடான சிங்கப்பூரில், இந்தியர்கள் அதிகம் வசிக்கும், 'லிட்டில் இந்தியா' பகுதியில், அனுமதியின்றி பட்டாசு வெடித்த, இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிங்கப்பூரில், அரசின் அனுமதி பெறாமல் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நள்ளிரவில், சாலை தடுப்பின் மீது, பட்டாசை வைத்து வெடித்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேரை, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட, திகு செல்வராஜ், 29 மற்றும் ஷிவ்குமார் சுப்ரமண்யம், 48, இருவரும், லிட்டில் இந்தியா பகுதியை சேர்ந்தவர்கள்.இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையுடன், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement