Advertisement

அமெரிக்க அமைச்சரவையில் மாற்றங்கள்

வாஷிங்டன்:அமெரிக்காவில் இடைத்தேர்தல் முடிவை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.


வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது நிர்வாகத்தில் ஒரு சில மாற்றங்களை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறினார். குறிப்பாக அமைச்சரவை மற்றும் அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒரு வாரத்துக்குள் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்து இருந்தார்.


ஏற்கனவே ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர் நிக்கி ஹாலே தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார். அதே போல டிரம்பின் உத்தரவை அடுத்து, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் ஜெப் செஸ்ஸன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாராஸ் ஆண்ட்ரசும் விரைவில் பதவி விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல உள்துறை செய்தித் தொடர்பாளரின் பதவியும் கேள்விக்குறியாக உள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement