Advertisement

சவுதியில் மேலும் ஒரு பத்திரிகையாளர் கொலை?

ரியாத்:கசோக்கி கொலையை அடுத்து சவுதி அரேபியாவில் மற்றொரு பத்திரிகையாளரும் கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


சவுதி மன்னர் சல்மானின் ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி,59. இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை துாதரகத்துக்குள் அக். 2- சவுதி அரேபிய ஏஜன்டுகளால் கொல்லப்பட்டார். இந்த விவகார முடிவதற்கு முன் காவலில் வைக்கப்பட்டு இருந்த பத்திரிகையாளர் துருக்கியின் அப்துல் அஜீஸ் அல்-ஜசீர் கொடுமைப்படுத்தி கொல்லபட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


அல்-ஜசீர் சமூக வலைதளத்தில் சவுதி அரச குடும்பத்தின் உயர்மட்ட உறுப்பினர்களால்
நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வந்ததாக மத்திய கிழக்கு
கண்காணிப்பகம் அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.அல்-ஜசீர் மார்ச் மாதம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். மனித உரிமை ஆர்வலர் யஹ்யா அஸிரி நியூ அரப் மீடியாவிடம் தெரிவித்து உள்ளார்.


அஸிரி, அல்குஸ்ட் மனித உரிமைகள் அமைப்பின் நிறுவனர் ஆவார். இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அரசியல் தஞ்சம் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement