Advertisement

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிபர் டிரம்ப் தீபாவளி வாழ்த்து

வாஷிங்டன்:அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ''இந்த தீப ஒளித் திருநாள், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வளர்க்க சிறந்த வாய்ப்பாக உள்ளது,'' என கூறியுள்ளார்.


அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், நேற்று முன் தினம், தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து, வீடுகளில் விளக்குகளை ஏற்றி, ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, வாழ்த்துக்களை பரிமாறினர்.


தீபாவளியை முன்னிட்டு, அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிபர் டிரம்ப் வாழ்த்து செய்தியில் கூறியதாவது:தீபாவளியன்று, ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண மற்றும் புத்த மதத்தினர் விளக்குகளை ஏற்றுவதால் இருள் அகன்று, நன்மை அதிகரிக்கிறது.


அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மகத்தானது. இந்தியாவுடனான நட்புறவை பிரதிபலிப்பதற்கு, தீபாவளி சிறந்த வாய்ப்பாக உள்ளது. இங்கு வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பால், அமெரிக்கா பல துறைகளில் வலிமை பெற்றுள்ளது.தொழில் மற்றும் தொழிற்சாலை, பொது சேவை, கல்வி, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட பல துறைகளில், தங்கள் சிறந்த பங்களிப்பை தொடர வேண்டும்.இவ்வாறு, டிரம்ப் கூறியுள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement