Advertisement

அ.தி.மு.க., பெண் எம்.எல்.ஏ.,வை 'ராங் நம்பர்' என கலாய்த்த மக்கள்


கரூர் : கரூர் அருகே, மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கீதாவை, 'ராங் நம்பர்' என்று கலாய்த்த தொகுதி மக்களை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சமாளித்தார்.துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, சட்டசபை தொகுதிகளில், பொதுமக்களிடம் மனு பெற்று வருகிறார். இவர், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற, பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, கிருஷ்ணராயபுரம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கீதா, தொகுதி பக்கமே எட்டி பார்க்காததால்,தம்பிதுரை அந்த தொகுதிக்கு செல்லும் போது, பொதுமக்கள் எதிர்ப்பால் திணறி வருகிறார்.


இந்நிலையில், நேற்று கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், பொதுமக்களிடம் மனுக்களை பெற, தம்பிதுரையுடன், எம்.எல்.ஏ., கீதா மற்றும் அதிகாரிகள் சென்றனர். செல்லாண்டிபுரத்தில் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது, பாலப்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவர், 'எங்கள் கிராமத்தையே, எம்.எல்.ஏ.,வுக்கு தெரியாது. 'அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டால், 'ராங் நம்பர்' என்று சொல்லி வைத்து விடுகிறார்' என, புகார் தெரிவித்தார்.


உடனே, கீதா, 'அப்படிஎல்லாம் இல்லை' என்று பேச துவங்கியுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.எல்.ஏ.,வை, 'ராங் நம்பர்' என கோரசாக கூறி கலாய்த்தனர்.


அப்போது, துணை சபாநாயகர் தம்பிதுரை, ' அவர் ஐந்து ஆண்டு, மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். அவருக்கு அனைத்து கிராமங்களும் தெரியும்' என்று கூறி, வேறு விஷயத்திற்கு தாவினார். பின், அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண், எம்.எல்.ஏ.,வை, தம்பித்துரை அங்கிருந்து வேகமாக அழைத்து சென்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  டுமீலர்கள் காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போடும்போது நல்லா இருந்துச்சாம் ........

  • வெட்டி பிஜேபி வெறுப்போர் சங்கம் - பெயர் மாற்றும் திறமைசாலிகள் ஊர்,இந்தியா

   (தயிர்)"வடை" நாட்டவர்கள் வெறிக்கு வோட்டு போடும்போது டுமீலர்கள் காசு வாங்கி வோட்டு போடுவது நன்றாக தான் இருக்கும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  , திமுக சட்ட மன்ற தேர்தலில் கொடுத்தினால் தான் இவ்வளவு தொகுதிகள் வெற்றி பெற்றது , காசு கொடுக்காமல் ஒரு வேட்பாளரும் வெற்றி பெற வில்லை இது தான் உண்மை. .

  • வெட்டி பிஜேபி வெறுப்போர் சங்கம் - பெயர் மாற்றும் திறமைசாலிகள் ஊர்,இந்தியா

   ஊழல்வாதிகளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் கொடி பிடிக்கும் உன்னை போன்றோருக்கு இதை சொல்ல துளியும் அருகதை இல்லை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காசு வாங்கி வோட்டு போட்டவன் கேள்வி கேட்க உரிமை கிடையாது , இனிமேலாவது காசு வாங்காமல் நால்லவர் யார் என்று பார்த்து வாக்களியுங்கள் இல்லை என்றால் நோட்டா

  • Manian - Chennai,இந்தியா

   தம்பி, நியாயம்தான். ஆனா, 70 - 80 % கிராமத்து ஆளுக ஓட்டை விக்குறானுக (சென்னை தினகரன் டோக்கன் வேலை இன்னொரு பக்கம் )- அவுனுக தினமரிலே நானோ, நியோ எழுத்துறை படிப்பானுகளா? திருந்துவானுக்களா ? அதை எப்படி செய்யறதுன்னு வழி சொல்லு தம்பி.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறது அரசியலுக்கு வருவதற்கு முன் நல்லாத்தான் இருக்கான் வந்தபிறகு புத்தியே காட்டி விடுகிறான் என்ன பண்ண ?

  • Manian - Chennai,இந்தியா

   அரசியல் தலைவனை தேடி தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவன் ஓட்டுக்கு காசு தர மாட்டான். பள்ளி நாட்களில் மாணவர்களே நான் எதுவும் சொல்லாமலே, பல தடவைகள் ennai தலைவனாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதுதான் உணமையான அனுபவம்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  அப்டீனா டெலீட் செய்யலமில்ல

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  காசே வாங்காமல் பாஜக விற்கும் 49 ஒ விற்கும் வாக்களித்தவர்கள் எதுவும் செய்ய முடியாதே......

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  காசு வாங்கி ஓட்டு போட்டவர்கள் எம்எல்ஏ வை கேள்வி கேட்க முடியாது சரி. காசே வாங்காமல் ஓட்டு போட்டவர்கள் என்ன செய்யணும்?

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  மக்களின் கோபம் தேர்தலில் வெளிப்படும்.

  • Manian - Chennai,இந்தியா

   "லஞ்சம் வாங்கி ஒட்டு போடாத மக்கள் " என்று திருத்தி கொள்ளலாமா?

 • Mani S -

  neenga evvalavu pattaalum thirundha maateennga makkaaa... anubavinga. adhu DMK Ku vote pannunga

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  எம் எல் ஏக்கள் மட்டும் இல்லை எல்லா மந்திரிகளும் ராங் நம்பர் தான் ஆயா இருக்கும் போதும் செயல்படாத அரசு இப்போது இன்னும் அதிகமாக கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம். இருபது சட்ட மன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி இந்த அரசுக்கு இன்னமும் முட்டு கொடுத்துக் கொண்டுள்ளது பாஜாக அரசு.

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  இப்படித்தான் எங்கள் ஊரு கவுன்சிலரை கலாய்தேன்., கூட வந்த அல்லக்கைகளை , உங்கள் நம்பர் மற்றும் விலாசங்களை கொடுங்கள், பிரச்சினை என்றால் உங்களை தான் கூப்பிடுவேன், ஏனென்றால் நீங்கள் தான் இவருக்கு வாக்கு போடுங்கள் என்று கேட்கிறீர்கள் என்று. மேலும், தொகுதிக்கு என்ன என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என்ற பட்டியலை கொடுங்கள், எப்போது அவற்றை முடிக்க திட்டம், நான் அதில் பங்கேற்க எனக்கு என்ன அதிகாரம் கொடுப்பீர்கள் என்று எல்லாம் சரமாரியாக கேட்டேன். பின்னர் எடுத்தனர் ஓட்டம். அதன்பின்னர், எங்கள் தெரு பக்கம் வோட்டு கேட்டு வராமல், தலைதெறிக்க வேறுபக்கம் ஓடுகின்றனர். என்னை சாலை மற்றும் கடைகளில் தப்பி தவறி பார்த்துவிட்டால், முகத்தை திருப்பி கொள்கின்றனர். மழை நீர் எங்கள் தெருவில் சேர்ந்து ஆறாக பெருகி, வீடுகளில் நுழைவதை பற்றி குறை தெரிவித்து ஒருவரும் வரவில்லை. தேடி சென்று கேட்ட போது, ஏதேதோ வெட்டி கதை சொன்னார். பின்னர் நானே தனி ஆளாக நின்று அதை சர்வ சாதாரணமாக முடித்துக்காட்டிய பின்னர், தற்போது தெருவின் பெயரை சொன்னாலே அவர்களுக்கு கிலி தான். பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான். உங்கள் வோட்டுக்கு பணம் கொடுக்க அம்மா சொன்னார் (ஜெயலலிதா உயிருடன் இருந்த போது) என்ற போது, அவர் எப்போது சொன்னார் ? அவருக்கு என்னை எப்படி தெரியும் ?? என்னிடம் வாங்கிக்கொள்ள சொல்லவில்லையே ?? அவரிடம் இப்போது போன் செய்து கொடுங்கள், நான் பேசி கேட்கிறேன் என்றதும், ஓடிய கூட்டம் இன்று வரை திரும்பவில்லை.

  • Manian - Chennai,இந்தியா

   அப்பா ராஜராஜ- உன் திறமையை வியகக வேண்டும். ஓடடைவிற்காத உத்தமன். இன்னோரன்ன செய்ய வேண்டும். அவர்கள் ஒட்டு கேட்க வரும்போது, தியதி போடாத ஏசாம்பு பாத்திரத்தில் " நன் உங்களுக்கு சேவை செய்ய வில்லை என்றால், இரண்டாண்டுகளிl என் பதவியை இந்த கடிதம் மூலம் தியாகம் செய்கிறேன் . எம். எல்.ஈ வாக இருக்க மாடேன் என்று" இதுவே என் ராஜினாமா என்று ரிஜிஸ்டர் செய்து அதை வெளியூரில் நமபகரமான ஆளிடம் - திரு சகாயம் - கொடுத்து வையுங்கள். அப்படி எழுதி தரமாட்டேன் என்றால், ஒட்டு கிடையாது என்று சொல்லுங்ககள். ஏதிர் கடச்க்கே வோட்டு போடுவோம் என்று கூக்குரல் இடுங்கள். ஒன்றும் இல்லாவிடடாலும் நல்ல தமாஷு பார்க்கலாமே. கொஞ்சமாவது இவர்களை பயம் வருமே. செய்விர்களா?

 • பிரபு - மதுரை,இந்தியா

  ? இந்த சூழ்நிலையில உள்ளாட்சி தேர்தலை நடத்தினா என்ன ஆகும்ன்னு இன்றைய தமிழக அரசுக்கு நல்லா தெரியும். "

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  Only 'wrong number' will be the answer from a 'wrong candidate' ed for assembly

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  இது மற்ற எம் எல் எ க்களுக்கு ஒரு பாடம். ஒழுங்காக தொகுதிக்கு வந்து மக்கள் பணி செய்யுங்கள்.. இல்லை என்றால் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் ராங் நபர்கள் மற்றும் ராங் நம்பர்களாக ஆகி விடுவீர்கள்.. ஜே.ஜே. வும் இல்லை மு கவும் இல்லை ... சட்ட சபை தர்தலில் நிற்க போகிறவர்கள் அக்னி பரீட்சை யை நேர் கொள்வீர்கள்....ஜாக்கிரதை...

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இது போன்று செல்லும் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் இவர்களை கேள்வி கேட்க வேண்டும். வாக்குறுதிகளை கொடுத்து விட்டு தொகுதி பக்கமே தலை காட்டாமல் இருப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். மேலும், மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் முன் தங்களை தாங்களே கேள்வி கேட்டுக்கொண்டு வாக்களிக்க வேண்டும்.

 • மதுவந்தி -

  wrong number என்பவர்கள் wrong நபரை தேர்ந்தெடுத்து விட்டதற்காக வருந்தி இப்போது தெளிவாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். சிக்னல் லைட் மாதிரி நெற்றியை மாற்றினால் நிஜமாகி விடுமா?

 • rajan. - kerala,இந்தியா

 • tamil - coonoor,இந்தியா

  தமிழகம் முழுக்க இது தான் நிலை, வரும் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க இருக்கிறது,

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஊரை ஏமாற்ற " அரசியல் அல்லக்கைகள் " இப்பெல்லாம் காலையில் வெள்ள வேஷ்டி / சட்டை , நெற்றியில் விபூதி / குங்குமம் இட்டு கொண்டு , scent அடித்து கொண்டு , பெண்களாக இருந்தால் நெற்றியில் விபூதி / குங்குமம் , கொண்டையில் பூ வைத்து கொண்டு ஊரை நாறடித்து கொண்டு இருக்கிறார்கள் . குறிப்பாக இலை கழகத்தில் இது காலங்காலமாக trend

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  எப்படியும் வரும் தேர்தலில் இரண்டு நபரும் காலி , அப்புறம் என்னப்பா ...சம்பாரிச்ச பணத்தை ஒரு ரெண்டு வருஷம் கும்மாளிச்சிட்டு , ரெண்டு வருசம் கழித்து அதே சம்பாரித்த பணத்தில் ஒரு பகுதியை பயன்படுத்தி சாதி கலவரம் உண்டு பண்ணி ....மறுபடியும் கொள்ளை அடிக்க அச்சாரம் போட வேண்டியது தான் ......" ரெட்டை இலை " யில் " எச்சில் இலை " களையும் இப்பெல்லாம் அதிகம் காணமுடிகிறது .....

 • BJRaman - Chennai,இந்தியா

  இது ஒரு ஆரம்பம் தான் ... இனி பாருங்க ஊர் ஊரா இந்த சேதி பரவும். அப்ப பாருங்க நம்ம MLA நிலைமைகளை

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   சான்ஸே இல்ல ...... இதே எம்.எல்.ஏ. வர்ற தேர்தல்ல, சீட்டும் கெடச்சு ஓட்டுக்காகக் குடுக்குற ரேட்டை ஏத்துனா ??

  • Manian - Chennai,இந்தியா

   அதே கண்டு பிடிக்கத்தான் இந்த முன் விசிட்டு. ரேட்டு எவ்ளோ போனா ஆளுக கம்முன்னு ஒட்டு போடுவானுக என்கறதை சிஐடி மூலம் கேக்க முடியுமா? ஏன்னா அப்போ அவனுக கட்டிங்கும் எவ்ளோன்னு சொல்லணுமே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஐநூறு ரூபா , பிரியாணி ,குவாட்டர் கொடுத்தாகி விட்டது என்றால் எல்லாம் ராங் கால்தான்

  • Manian - Chennai,இந்தியா

   வெலை வாசி ஒக்காந்து பூட்டுதுங்க. நீங்க சொன்ன ரேட்டு ரொம்ப ரொம்ப கொறைச்சலுங்க. ஐஆயிரம் ரூபாய்ன சரி. பிரியாணி ஹைதிராபாத்திலே இருந்து வருங்காக்களா ? கொஞ்சம் சிம்மை சரக்கும் கூடவே தாங்க. ஒங்க புகழை கூவிக்கிடடே ஒட்டு போடுவோம்லே.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மூணுவருஷமாச்சு சீக்கிரமா லோக்சபா தேர்தல் வருது சனங்களை சும்மா பார்த்துட்டு வந்துட்டு எம்.பி.யா நிக்கப்போறவர்கிட்டே தேர்தல் செலவுன்னு ஒரு அமௌண்ட்டை ஒத்துக்கிடலாம்னு பாத்தா ராங் நம்பர்னு கலாய்ச்சா எப்படி

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வாக்கு அளிக்கும் முன்பு நீங்க எல்லாமே ரைட் கால் ....போட்ட பிறகு அநத அம்மாவுக்கு பிறகு எல்லாமே ராங் கால்தான்

  • Manian - Chennai,இந்தியா

   அந்த "காலை" வேறே எங்கியோ இல்லே ஆளுக மேலே போடுறானுக

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  'ராங் நம்பர்' மட்டுமில்லைங்கோ 'சட்டமன்ற ராங் மெம்பரும்' கூட

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  பல தொகுதிகளிலும் இதே அவலம் தான்......

  • Manian - Chennai,இந்தியா

   சமுதாயா நீதி வேணுமே

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  காசு வாஙிகி ஓட்டு போட்டா, ஓட்டு போட்டவர்களுக்கு அன்ந்த எமெல்லேயை (MLA ) யை கேள்வி கேட்க முடியாது. தெல்சுக்கோ

 • Indhuindian - Chennai,இந்தியா

  தொகுதி பக்கம் வராதது யாருடைய தவறு. ஜெயிக்க வோட்டு வாங்க காசு கொடுத்தாச்சு கையே நீட்டி காசு வாங்கினு வேல பண்ணினா கேள்வி கேட்கலாமா. அவர் தொகுதி பக்கம் வரவேண்டும் என்று எதிர் பார்ப்பது அப்படி காசு வாங்கிக்கொண்டு வோட்டு போட்டவர்களோட தப்பு. உங்க உரிமை வித்தாச்சு அப்புறம் எப்படி இதெல்லாம் எதிர்பார்க்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement