Advertisement

நட்சத்திர ஆமை பறிமுதல்

சென்னை: வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 440 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு, நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, காசிமேடு கடற்கரையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, போலீசார் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது, ஒரு விசைப்படகில் அட்டை பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பினர். போலீசார், பெட்டிகளை ஆய்வு செய்ததில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 440 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement