Advertisement

சிறுமியிடம் சில்மிஷம்

புளியந்தோப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆட்டோ ஓட்டுனர் சிக்கினான்.சென்னை, புளியந்தோப்பு, கே.பி., பார்க் பகுதியைச் சேர்ந்தவன் விஜி, 26; ஆட்டோ ஓட்டுனர். அவன், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி அளவில், பேசின்பாலம், யானை கவுனி சாலையில் உள்ள ஒரு வீட்டில், தனியாக இருந்த, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தான்.அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டதையடுத்து, ஆத்திரமடைந்த அவன், பாத்திரம் தேய்க்க வைத்திருந்த சோப்பு கரைசலை, சிறுமியின் வாயில் ஊற்றி தப்பினான். இது குறித்து, சிறுமியின் பெற்றோர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.நேற்று காலை, அவனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement