Advertisement

வாலிபர் கொலை

பள்ளிக்கரணை: வாலிபர் கொலை வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.பெரும்பாக்கம் அடுத்த நுாக்கம்பாளையம், எழில் நகரைச் சேர்ந்தவர், சந்தீப்குமார், 20. நேற்று முன்தினம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில், பட்டாசு வெடித்து கொண்டிருந்த சிறுவனின் உடல் பருமன் குறித்து, சந்தீப்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்துள்ளார்.இதை, அதே பகுதியைச் சேர்ந்த ராகுல், 23, என்பவன் தட்டிக் கேட்டுள்ளான். அப்போது ஏற்பட்ட தகராறில், சந்தீப்குமார் உள்ளிட்டோர் ராகுலை அடித்துள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த ராகுல், தன் நண்பர்களுடன் சேர்ந்து, சந்தீப்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்து தப்பினான்.பள்ளிக்கரணை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று காலை, நுாக்கம்பாளையத்தைச் சேர்ந்த ராகுல், 23, உட்பட நால்வரை, போலீசார் கைது செய்தனர்.மேலும் ராகுலை தாக்கிய, சந்தீப்குமாரின் நண்பர்களாகிய அருள், 26, உட்பட ஐந்து பேரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement