Advertisement

போலீஸ் டைரி...

பெண்ணிடம் மொபைல் பறிப்புமண்ணடியைச் சேர்ந்தவர், சோனி, 27. நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா கடத்தியவன் கைதுஅம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவனை பிடித்து விசாரித்தனர். அதில், அத்திப்பட்டைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 27, என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவனை கைது செய்த போலீசார், 500 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.40 சவரன் நகை மாயம்திருமங்கலம், அன்புநகரைச் சேர்ந்தவர், வசந்தி, 52. கணவரை இழந்த இவர், மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 40 சவரன் நகைகளை திருடி தப்பினர். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.புகையிலை விற்றவன் கைதுராமாபுரம், காமராஜர் சாலையில், நேற்று முன்தினம் இரவு, ராயலா நகர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, புகையிலை பொருட்கள் விற்ற, ராமாபுரத்தைச் சேர்ந்த முருகன், 49, என்பவனை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து, 15 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.கிண்டல் செய்த ஓட்டுனர் கைதுகண்ணகி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், கணேசன், 36. இவரது வீட்டு பெண்களை, அதே பகுதியைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுனர் விக்டர், 32, என்பவன், நண்பர்களுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, கிண்டல் செய்துள்ளான். இதை தட்டி கேட்ட கணேசனை தாக்கி, விக்டர் உள்ளிட்டோர் தப்பினர். கண்ணகி நகர் போலீசார், நேற்று காலை விக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மனைவியை வெட்டிய கணவன் கைதுகண்ணகி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவன், ராஜேஷ், 25. இவனது மனைவி சரண்யா, 23. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜேஷ், அக்., 26ல், பெசன்ட் நகர் கடற்கரைக்கு அழைத்து சென்று, நண்பர்களுடன் சேர்ந்து, சரண்யாவை கத்தியால் வெட்டி தப்பினான். திருவான்மியூர் போலீசார், இதில் தொடர்புடைய ராஜேஷின் தாய் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ராஜேஷை, நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சகோதரர்களுக்கு கத்திக்குத்து தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர், மணிகண்டன், 22. அவர், 6ம் தேதி, தம்பி மகேஷ் என்பவருடன், இருசக்கர வாகனத்தில் வந்த போது, வீட்டருகே நின்றிருந்த மூவரிடம், வழி விடுமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், சகோதரர்கள் இருவரையும் கத்தியால் குத்தி, மூவரும் தப்பினர். தேனாம்பேட்டை போலீசார், கத்தியால் குத்தி தலைமறைவான, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 21, உட்பட மூவரை, நேற்று காலை கைது செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement