Advertisement

கொசு உற்பத்தி ரூ.12,000 அபராதம்

தாம்பரம்: கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் கட்டுமான நிறுவனம் மற்றும் மருத்துவமனைக்கு, 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கு ஒழிப்பு பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பொன்னையா நேற்று ஆய்வு செய்தார்.சேலையூரில் கட்டப்படும் தனியார் நிறுவன கட்டுமானத்தை ஆய்வு செய்த போது, தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.அதில், கொசுப்புழுக்களும் அதிகளவில் உற்பத்தியாகி இருந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு, ஆட்சியர் பொன்னையா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.அதேபோல், மேற்கு தாம்பரம் பகுதியில், தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement