Advertisement

அம்பத்துார் வாலிபர் கொலை

அம்பத்தூர்: முன் விரோதம் காரணமாக, அம்பத்துாரில் வாலிபரை அடித்துக் கொலை செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.அம்பத்துார், ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31. இவருக்கும், மேனாம்பேட்டையைச் சேர்ந்த பாலசந்தர், 32, என்பவனுக்கும், 6ம் தேதி மாலை, இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.இதில், பாலசந்தர் ஆத்திரமடைந்து, மணிகண்டனை அடித்துள்ளான். இதையறித்த மணிகண்டனின் அண்ணன் மகேஷ், 34, தன் நண்பர் ராஜேஷுடன் சென்று, பாலசந்தரை அடித்துள்ளார்.அன்றிரவு, 11:00 மணிக்கு, தனியாக இருந்த மகேஷை, பாலசந்தர் தன் நண்பர்களான ஒரகடம் சசி, 24, சதீஷ், 30, தினேஷ் குமார், 22, ஆகியோருடன் சேர்ந்து, உருட்டு கட்டையால் தாக்கினான்.இதில் பலத்த காயமடைந்த மகேஷ், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, பாலசந்தர் உட்பட நால்வரையும், நேற்று முன்தினம் மாலை, அம்பத்துார் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மகேஷ் இறந்தார். இதையடுத்து, பாலசந்தர் உள்ளிட்டோர் மீது, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement